For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட்ஜெஸ்மெண்ட் என்றால் எதுவரை? படுக்கையறையில் பெண் கேட்ட செருப்படி கேள்வி - MyStory #044

திருமணத்திற்கு பிறகு வரும் காதலைப் பற்றி தன் வாழ்க்கை அனுபவம் மூலம் ஒரு பெண் பகிர்ந்து கொள்கிறார்.

|

இயந்திரம் என்பதற்கு உங்களுக்கு மிகச்சிறந்த உதாரணம் தேவையா? என்னை எடுத்துக் கொள்ளலாம். ஆம்.. நான் மனிதனாக படைக்கப்பட்ட ஓர் இயந்திரம் தான். அதுவும் பெண்ணாக பிறப்பெடுத்த நமக்கெல்லாம் இது சரியாக பொருந்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

மற்ற எல்லாப் பெண்களையும் போலவே என்னை திருமணம் செய்து கொள்ள ஒரு ராஜகுமாரன் வருவான் அவன் என்னை ராணியைப் போல பார்த்துக் கொள்வான், என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள்.

Real life story about a name less relationship.

எங்கள் வாழ்க்கை முழுவதும் ரொமாண்டிக்கான தருணங்களால் நிரம்பியிருக்கும், என் வாழ்க்கையை அழகாக்கப் போவது அவன் தான் என்று எண்ணற்ற கனவுகள். திருமணம் ஆனவுடனேயே அதன் பிறகான வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நாம் இதுவரை கண்ட கனவு எல்லாம் பெரும்பாலான நேரங்களில் பொய்த்துப் போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணம் :

திருமணம் :

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது ஆரம்பத்தில் கட்டுப்பாடான குடும்பம் என்பதை காரணம் காட்டி என்னை வேலையை விட்டு நிற்கச் சொன்னார்கள்.

மாமியார் பேச்சுக்கு மறு பேச்சு ஏது வேலையை விட்டு நின்றேன். திருமணத்தின் போது விருந்து சாப்பாடு சரியில்லை, மொய்ப்பணம் அவ்வளவாக எதுவும் வரவில்லை, மகனுக்கு விலை கம்மியான டிரஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்கள், மறு வீட்டு அழைப்பின் போது ஏதாவது நகை அணிவித்து தான் அனுப்ப வேண்டும், சரியாக முறைகளைச் செய்யவில்லை என்று சொல்லி இருக்கிற கோபத்தையெல்லாம் என் மீது காட்டிக் கொண்டிருந்தார்.

எல்லா வீடுகளிலும் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், மனஸ்தாபங்கள் நடந்து கொண்டிருக்கும்.

சென்னைக்கு மாற்றல் :

சென்னைக்கு மாற்றல் :

இருபத்தி மூன்று வயதில் திருமணமான எனக்கு திருமண வாழ்க்கை என்றால் என்ன? கணவரைப்பற்றியும் அவரின் குடும்பத்தைப் பற்றியும் முழுதாக புரிந்து கொள்ள இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. பணி நிமித்தமாக கணவருக்கு தஞ்சையிலிருந்து சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைத்தது.

குடும்பத்துடன் சென்னை சைதாப்பேட்டை பகுதிக்கு இடம் மாறினோம். நான்,கணவர்,குழந்தை மட்டும்.

வேலைக்கு செல்லவா? :

வேலைக்கு செல்லவா? :

பொருளாதரச் சூழல் இடிக்க வேலைக்கு போகட்டுமா என்று கேட்டேன். என் கணவர் கறாராக சொல்லிவிட்டார் வீட்டையும், குழந்தையும் நீ தான் பாத்துக்கணும். ஸ்கூல் போக ஆரம்பிச்சதும் போய் கூட்டிட்டு வாங்க, பேரண்ட்ஸ் மீட்டிங் இந்த கதையே என்கிட்ட வரக்கூடாது....

அப்போ நான் வேலைக்கு போகவேணாமா?

நான் ஒண்ணும் அப்டி சொல்லலயே....

இதை நான் எப்படி எடுத்துக் கொள்ள? அவர் வேலைக்கு போகலாம் என்று க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாரா? அல்லது வேண்டாம் என்று சூசகமாக சொல்கிறாரா எதுவும் புரியவில்லை.

எது நியாயம் ? :

எது நியாயம் ? :

அவருக்கே இது அநியாயமாக தெரியவில்லையா? அவரைப் போலவே ஒரு வீட்டில் செல்லப் பிள்ளையாய் வளர்ந்திருக்கிறேன், பெற்றோர் பார்த்து இனி இவன் தான் உன் வாழ்க்கைத் துணை என்று கை காட்ட மறுப்பேதும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.திருமணம் ஆனவுடனேயே பொறுப்பானவள் ஆகிட வேண்டும்.

குழந்தை :

குழந்தை :

குழந்தைக்கு இருவரும் தான் பொறுப்பேற்க வேண்டும். இதென்ன என்னை குழந்தை சம்மந்தமான எந்த விஷயத்திலும் என்னை இழுக்க கூடாது என்று எஸ்கேப் ஆவது? அப்படியென்றால் தந்தையாக அந்த குழந்தைக்கு என்ன செய்யப்போகிறாய்? அலுவலகம் சென்று வீட்டுச் செலவுக்காக சம்பாதித்துக் கொடுப்பவன் அப்பாவா?

அட்ஜெஸ்ட்மெண்ட் :

அட்ஜெஸ்ட்மெண்ட் :

பொருளாதார ரீதியாக, சமையலறையில் ,படுக்கையறையில், என எல்லா இடங்களிலும் கணவனுக்காக அட்ஜெஸ்ட் செய்து போகிற ஒரு வாழ்க்கையை தான் எந்த ஒரு பெண்ணும் வாழ வேண்டியிருக்கிறது.

அதற்காக அவளது கனவு, விருப்பம், ஆசை என எல்லாவற்றையும் சட்டென தியாகம் செய்து கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணுடைய கனவு தானே என்று சட்டென அதை நிர்மூலமாக்கிடவும் முடிகிறது.

எதைப் பற்றியும் கவலையில்லை :

எதைப் பற்றியும் கவலையில்லை :

இதைக் கூட வெளியில் சொல்லிட முடிகிறது. வெளியில் சொல்ல முடியாத இன்னொரு துயரம் என்ன தெரியுமா?படுக்கையறையில் நடக்கும் ஏமாற்றங்கள். எப்போதெல்லாம் அவருக்கு நான் தேவைப்படுகிறேனோ அப்போதெல்லாம் குளைந்து அவருக்கு ஏதுவாக நான் உருமாறி வளைந்து கொடுக்க வேண்டும்.

நான் எந்த சூழலில் இருக்கிறேன். எனக்கு அதில் விருப்பம் இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் அவருக்கு கவலையேயில்லை.

பள்ளி ஆசிரியை :

பள்ளி ஆசிரியை :

ஒரு வழியாக குழந்தையை அனுப்பும் ப்ளே ஸ்கூலில் ஆசிரியாராக பணி கிடைத்தது. மகளை நானை அழைத்துச் செல்வதும், கூட்டு வருவதுமாய் காலம் ஓடியது. மதியம் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவேன்.

ஒரு நாள் மதியம் குழந்தையை ஹாலில் டிவி போட்டு உட்கார வைத்துவிட்டு நான் கிட்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரம் சமையலை முடித்து பாத்திரங்களை கழுவி விட்டு.... சரி குழந்தைக்கு ஊட்டி விடலாம் என்று கப்பில் சாதத்தை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தேன்.

குழந்தையை காணவில்லை :

குழந்தையை காணவில்லை :

பாப்பாக்கு இன்னும் பசிக்கலையா? என்று கேட்டுக் கொண்டே அவள் உட்கார்ந்திருந்த சோஃபாஅருகில் சென்றாள் அவளைக் காணவில்லை. உயிரே போய்விட்டது. டிவி ஓடிக் கொண்டிருக்கிறது சாப்பிடச் சொல்லி கப்பில் போட்டுக் கொடுத்து ஆப்பிள் பழத்துண்டுகள் அப்படியே இருக்கிறது.

உள்ளறையில் ,பாத்ரூமில் பால்கனியில் எல்லா இடங்களில் தேடினேன் ஒரு இடத்திலும் இல்லை. கதவு சாத்தியபடி தான் இருந்தது. யாரிடம் சென்று கேட்பது என்று தெரியாமல் கீழ் வீட்டில் இருப்பவர்களிடத்தில் விசாரிக்கலாம் என்று கிளம்பினேன்.

குழந்தை திருடன் :

குழந்தை திருடன் :

வாசல் கதவைத் திறந்தால் அங்கே மேல் மாடியில் வசித்துக் கொண்டிருக்கும் பேச்சுலர்களின் ஒருவன் என் குழந்தையை தூக்கிக் கொண்டு படியேறிக் கொண்டிருக்கிறான்.

எவ்வளவு திமிர் இருந்தால் வீடு புகுந்து புள்ளை தூக்கிட்டு போயிருப்ப? இப்ப நான் வந்ததும் நல்லவன் மாதிரி திரும்பிட்டியா என்று பயங்கரமாக திட்ட ஆரம்பித்துவிட்டேன். அவன் கையிலிருந்த குழந்தையை வெடுக்கென புடுங்கிக் கொண்டு உன்னையெல்லாம் போலீஸ்ல சொன்னாதான் புத்தி வரும் என்று நான் எகிற அக்கம்பக்கத்தினர் எல்லாம் கூடிவிட்டனர்.

அப்பார்ட்மெண்ட் மீட்டிங் :

அப்பார்ட்மெண்ட் மீட்டிங் :

இதுப்பற்றி கணவருக்குத் தெரிந்தால் குழந்தையை கூட பாத்துக்க முடியாதா? என்று கத்துவாரே என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டேன். ஞாயிற்றுக் கிழமை காலை அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் செக்கரட்டரி மீட்டிங் அழைத்திருந்தார்.

வாட்ச்மேன் மற்றும் தண்ணீர்ப் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க. வழக்கம் போல முன் வரிசையில் உட்கார்ந்திருந்த நான்கைந்த ஆண்கள் பேசிக்கொண்டிருக்க அங்கேயிருக்கும் பெண்கள் நாங்கெல்லாம் ஒன்றாய் சேர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.

குழந்தையின் எதிர்காலம், சுயதொழில், கை மருத்துவம் குறித்து தான் அதிகமாக பேசப்பட்டது. மீட்டிங் முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும் பின்னாலேயே அவனும் நுழைந்து கொண்டான்.

மீண்டும் அவன் :

மீண்டும் அவன் :

ஒரு கையில் குழந்தை, இன்னொரு கையில் கூடை இவன் என்னையும் என் குழந்தையை கொன்றுவிட்டு திருடப்போகிறான் என்று நினைத்து அலற ஆரம்பித்தேன். நான் கத்துவதைப் பார்த்து குழந்தையும் பயந்து அழ ஆரம்பித்தது.

ஹலோ... ஹலோ நிறுத்துங்க நான் உங்கள ஒண்ணும் பண்ண வர்ல... ரிலாக்ஸ்

மூணு வருஷமா இங்க தான் நான் இருக்கேன். நான் சொல்ல வர்றத ஒரு நிமிஷம் கேளுங்க என்று விலகி கதவருகிலேயே நின்றான். நானும் கொஞ்சம் அமைதியாகி எதுவா இருந்தாலும் அவர் வந்ததுக்கப்பறம் வாங்க என்று சொல்ல மறுப்பேதும் சொல்லாமல் சரிங்க என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

தவறு யார் மீது? :

தவறு யார் மீது? :

எனக்கு அப்போது தான் லேசாக உரைத்தது. வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் வந்திருந்தால் கிளம்பியிருக்க மாட்டான். அவர் சாதரணமாக வந்து நாம் தான் தேவையில்லாமல் கற்பனை செய்துவிட்டோமா என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று மாலை அப்பார்ட்மெண்ட் பார்க்கில் வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். குழந்தை பார்க்கில் விளையாடிக்கொண்டிருந்தது. அவளை மேல் வீட்டில் இருக்கும் பெண் கவனித்துக்கொள்கிறேன் என்று சொல்ல அரை மணி நேரம் கிடைத்த கேப்பில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அங்கேயே வாக்கிங் செல்ல ஆரம்பித்தேன்.

முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்று செல்லத் துவங்கிய போது மீண்டும் அவன்...

ஒரு நிமிஷம் :

ஒரு நிமிஷம் :

நான் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒரு நிமிஷம் ஒருநிமிஷம் ... நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க அதுக்கப்பறம் நீங்க பேசுங்க என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான்.

நீங்க என்ன தப்பானவனாவே பாக்குறீங்கன்னு நினைக்கிறேன். அன்னக்கி பாப்பா பால்கனிலிருந்து படியிருங்கி கீழ போய்டா நான் மேல இருந்து பாத்துப் போய் தூக்கினேன். நான் தூக்கினதும் அழ ஆரம்பிச்சா? சரி வாங்க டாட்டா போலாம்னு கேட் வரைக்கும் கூட்டிட்டுப் போய்ட்டு திரும்ப உங்க வீட்டுலயே விட்ரலாம்னு நினச்சப்போ தான் என்னைய பாத்தீங்க..

காரணம் :

காரணம் :

ரெண்டாவது வாட்டி உங்க வீட்டுக்குள்ள வந்ததும் இந்த விஷயத்த தெளிவுப்படுத்துறதுக்கு தான் மத்தப்படி எதுவுமில்ல... என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். என் தவறை உணர்வதற்குள் அவன் நகர்ந்து விட்டபடியால் மன்னிப்பும் கேட்க முடியவில்லை.

மன்னிப்பு கேட்க வேண்டும் :

மன்னிப்பு கேட்க வேண்டும் :

மறு நாள் மாலையில் அவன் அலுவலகம் முடிந்து வரும் நேரத்திற்காக காத்திருந்தேன். மாலையில் குளித்து டீஷர்ட் ஷார்ட்ஸுடன் தலையில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு ஜாக்கிங் வந்தான். வந்தவுடனேயே அவனுக்கு எதிர்புறமாக நடக்க ஆரம்பித்தேன். ஸ்விம்மிங் பூலுக்கு அருகில் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.

புதிய பக்கம் :

புதிய பக்கம் :

எதிரில் என்னைப் பார்த்தவன் ஒரு நிமிடம் ஆச்சரியமாகி? என்னங்க இன்னும் கத்த ஆரம்பிக்கலையா? என்றான்

சாரி... நான் தான் எதோ அவசரத்துல தப்பா என்று ஒவ்வொரு வார்த்தையும் எக்குத்தப்பாய் வந்து விழுந்து கொண்டிருந்தது, ரொம்ப கில்ட்டியா இருந்துச்சு அதான் சாரி கேக்கலாம்ணு என்று இழுக்க... அட பரவாயில்லங்க என்று சொல்லி லெட் பீ ஃபிரண்ட்ஸ் என்று சொல்லி கை நீட்டினான் . நானும் கைகொடுத்தேன். உறுதியான அந்த முப்பது வினாடி குலுக்கலில் என் வாழ்வின் இன்பமயமான பக்கம் ஆரம்பித்திருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real life story about a name less relationship.

Real life story about a name less relationship.
Desktop Bottom Promotion