ரஷ்ய பெண்களுடன் உறவுக் கொள்வதால் ஏற்படும் சாதக, பாதகங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் இருப்பதை போலவே, ஒவ்வொரு நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் அவரவர் கலாச்சாரம் சார்ந்த குணங்களும், பண்புகளும் வேறுபட்டு காணப்படுகின்றன.

இதனால், எல்லா பெண்களின் விருப்ப, வெறுப்புகளை, அவர்கள் தனது கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள், உரிமைகள் போன்றவற்றை ஒரே விதமாக பொது அட்டவணையிட்டு கூறிவிட முடியாது.

Pros and Cons of Dating Russian Women

அதிலும், ரஷ்ய பெண்களை பொறுத்தவரை இது மிகவும் கடினம். பார்க்க மிகவும் அழகாக, கவர்ச்சியாக இருக்கும் இவர்களிடம் நிறைய நிறைகளும், கொஞ்சம் குறைகளும் இருக்கின்றன. மனிதனாக இருந்தாலே நிறை, குறை இருக்கத்தானே செய்யும்.

அந்த வகையில், ரஷ்ய பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதால் கிடைக்கும் சாதக, பாதக விளைவுகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உரிமை!

உரிமை!

உறவில் எந்த ஒரு விஷயமாக, செயலாக இருப்பினும், ஆண்களே முன்னெடுத்து செல்லவும், அவர்களே தீர்மானிக்கவும், தொடர்ந்து அதை செயற்படுத்தவும் உரிமை அளிப்பார்கள் ரஷ்ய பெண்கள்.

தலைமை!

தலைமை!

ஆரம்பத்தில் தலைமை தாங்க வைப்பது, அனைத்திற்கும் உரிமை கொடுப்பது, திடீரென ஒரு சமயத்தில், இல்லை எனக்கு இதில் நாட்டம், விருப்பம் இல்லை, இதை ட்ராப் செய்து விடலாம் என திடீரென கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆண் தலைமை தாங்கி செல்லும் போது அது சரி எனில் அதை பின்தொடர தயக்கம் காட்ட மாட்டார்கள்.

மதிப்பு!

மதிப்பு!

திருமணம் மற்றும் குடும்பம் என வரும் போது, அதற்கு அதிக மதிப்பு அளிப்பார்கள். தங்களால் குடும்பத்தில் எந்த சச்சரவும் வர காரணமாக இருக்க கூடாது என எண்ணுவார்கள்.

தோற்றம்!

தோற்றம்!

ரஷ்ய பெண்கள் சாதாரணமாகவே பார்க்க ஒரு மாடல் போல தான் தோற்றம் அளிப்பார்கள். தங்கள் உடல் தோற்றம் மீது அதிக கவனம் செலுத்த ரஷ்ய பெண்கள் தவறுவதில்லை. அழகு அவர்களது இரண்டாவது உயிர் என்று கூட கூறலாம்.

அக்கறை!

அக்கறை!

சமையல், வீட்டு மேலாண்மை, குழந்தை வளர்ப்பு, கணவன் மீது என அனைத்து வகையிலும் மிகவும் அக்கறையுடன் நடந்துக் கொள்வார்கள். தி பெஸ்ட் அட் அக்கறை என ரஷ்ய பெண்களை குறிப்பிடலாம்.

சகிப்புத்தன்மை!

சகிப்புத்தன்மை!

தன் துணையின் அனைத்து தனித்திறன் மற்றும் பழக்கங்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ரஷ்ய பெண்கள் பின்பற்றுகிறார்கள். நமது ஊரில் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பதை போல வைத்துக் கொள்ளுங்களேன்.

பழமொழி: "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்"

பொருள்: கல்லு குடித்தாலும், புல்லு தின்னாலும் என்ற பொருளல்ல. கல்லை போல கடினமான குணம் கொண்டிருந்தாலும், புல்லை போல மென்மையான குணம் கொண்டிருந்தாலும் கணவன், கணவன் தான் என்பதே இதன் உண்மை பொருள்.

போட்டி!

போட்டி!

இதை ஒரு முக்கியமான நன்மை என கூறலாம். ஆம், ரஷ்ய பெண்கள் தங்கள் ஆணுடன் எப்போதும் போட்டியிட மாட்டார்கள். கணவனை எந்த விதத்திலும் மிஞ்ச கூடாது என்ற போக்கு உள்ளவர்கள். கணவன் முதன்மை நிலை அடைய தங்களால் முடிந்த அளவிற்கு உதவுவார்கள்.

இதுவரை இஷ்டமான விஷயங்களை பார்த்தோம்... இனிமேல், கொஞ்சம் கஷ்டமான விஷயங்கள் பற்றி பார்க்கலாம்...

ஆண்களே பொறுப்பு...

ஆண்களே பொறுப்பு...

ஆண்கள் தான் எல்லா வகையிலும் தலைமை தாங்க வேண்டும், முடிவுகள் எடுக்க வேண்டும் என்ற உரிமை இருந்தாலும். அதன் பால் விளையும் விஷயங்களுக்கும் அவர்களே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வழங்குபவன்!

வழங்குபவன்!

பெண்கள் வேலைக்கு சென்றாலும் கூட, அவர்களுக்கு தேவையானவற்றை ஆண்கள் தான் நிறைவேற்ற வேண்டும். தங்கள் வேலையை விட குடும்பம் தான் முக்கியம். வேலையில் வெற்றி காண்பதை விட, குடும்ப அக்கறை தான் முக்கியம் என எண்ணுவார்கள். தங்கள் வெற்றி கணவனின் சுயமரியாதை இழக்க காரணமாகிவிட கூடாது என சிந்திப்பார்கள். இது அவர்களது வேலையை பாதித்துவிடும்.

அணுகுமுறை!

அணுகுமுறை!

எதையும் முதிர்ச்சியுடன் அணுக மாட்டார்கள். ஆண்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதால், சில சமயங்களில் குழந்தை போல நடந்துக் கொள்வார்கள். பெண்களின் உணர்வு முதல் பார்வை வரை ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டிய நிலை இருக்கும்.

உணர்வுரீதியாக...

உணர்வுரீதியாக...

உணர்வு ரீதியாக பிளாக் மெயில் செய்வது, அதிகமாக உணர்ச்சிப்பூர்வம் அடைவது போன்றவை ரஷ்ய பெண்களின் நெகட்டிவ் விஷயங்களில் ஒன்று. திரித்து கூறுவது, மறைமுகமாக செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள்.

வீண் செலவு...

வீண் செலவு...

தங்கள் தோற்றம் மீது அதீத அக்கறை கொண்டிருக்கும் ரஷ்ய பெண்கள். அதற்காக அதிக செலவு செய்வார்கள். மேக்கப், ஆடைகள் போன்றவற்றுக்கு அதிக செலவு செய்து தங்களை அழகுப்படுத்திக் கொள்வார்கள்.

வெளிப்படையாக...

வெளிப்படையாக...

ரஷ்ய பெண்கள் தங்களின் பிரச்சனை என்ன என்பதை வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஆண்களாக ஆராய்ந்து அறிந்துக் கொள்ள வேண்டும் என விட்டுவிடுவார்கள்.

கணவன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என ஒரு ப்ளூபிரிண்ட் வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் ரஷ்ய பெண்கள். அந்த வகையில் நீங்கள் செயற்படவில்லை எனில், நீங்கள் அவர்களை ஏமாற்றுகிறீர்கள் என ஊர்ஜிதம் செய்துவிடுவார்கள். அவர்கள் என்ன எதிர்பாக்கிறார்கள், எதை தவறாக எண்ணுகிறார்கள் என்பதை கூற மாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pros and Cons of Dating Russian Women

Pros and Cons of Dating Russian Women