தோணி சாக்ஷியிடம் இருந்து 7 ரொமாண்டிக் டிப்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

இன்னும் இரு தினங்களில் தோணியின் பிறந்தநாள். ஒரு சூப்பர்ஸ்டார்க்கு இணையாக கிரிக்கெட் ஹீரோவாக திகழ்பவர் தோணி. ஃபீல்டிங் செட் செய்வது, பந்தை கூர்மையாக பார்ப்பது, க்லௌஸ் அட்ஜஸ்ட் செய்வது என ஒவ்வொரு செயலிலும் ஏதோ ஹீரோவிற்கு டைட் ஷாட் வைத்து பில்டப் ஏற்றுவது போலவே களத்தில் தெரிவார் தோணி.

இயல்பாக தனது துணையுடன் எடுத்த போட்டோக்களிலும் கூட தோணி சாதரணமாகவே அந்த சூப்பர் புன்னைகையுடன் ரொமான்டிக்காக தான் இருப்பார். இதோ! அவற்றில் தோணியின் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதபடி க்ளிகப்பட்ட 7 படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணம்!

திருமணம்!

எல்லார் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக அமைவது. பேச்சுலர் வாழ்க்கை துறந்து இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்கும் அந்த ஒரு நாள். காதலித்து சக்ஷியை தோணி கரம்பிடித்த தருணம்.

நீ, நான், நாம்!

நீ, நான், நாம்!

ஒருவரது வாழ்வில் இதை விட மகிழ்ச்சியான தருணம் ஒன்று அமையுமா? என்றால் நிச்சயம் கூற முடியாது. இரு உயிர்களின் இணைப்பில் மலர்ந்த மறு உயிரின் பிறப்பு. பிறக்கும் போது அருகே இருக்க முடியவில்லை எனிலும். நாடு திரும்பிய நாள் முதல் தானே சுமந்து திரிந்தார் தோணி.

உறுதுணை!

உறுதுணை!

துணையாக மட்டும் இருப்பது மனைவியின் கடமை அல்ல. உறுதியான துணையாக இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என எந்த தருணமாக இருந்தாலும் பக்கபலமாக திகழ வேண்டும்.

செல்ஃபீ!

செல்ஃபீ!

இன்றைய ஜோடிகளின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று செல்ஃபீ மொமன்ட்! தங்கள் நினைவுகளை பலரும் இப்படி தான் செல்ஃபீ எடுத்து சேமித்துக் கொள்கிறார்கள்.

அணிக்காக, ஹனிக்காக!

அணிக்காக, ஹனிக்காக!

அணிக்காக தோணி தனது பங்களிப்பை பலமுறை அளித்துள்ளார். அதே போல, தனது ஹனியுடனும் நேரம் செலவழிக்க வர மறந்தது இல்லை.

கொஞ்சலும், கெஞ்சலும்!

கொஞ்சலும், கெஞ்சலும்!

தன் துணையை கொஞ்சாத, தன் துணையிடம் கெஞ்சாத ஒருவர் தனது இல்லற வாழ்வில் முழு இன்பத்தை அடைந்துவிட முடியாது. எத்தனை வயதானாலும் கணவன், மனைவி டாம், ஜெர்ரி போல அடித்து, பிடித்து, ஓடி விளையாடி கொண்டே இருக்க வேண்டும்.

கருப்பு வெள்ளை தான் கலர்புல்!

கருப்பு வெள்ளை தான் கலர்புல்!

என்ன தான் எச்.டி.., அந்த எபஃக்ட், இந்த எபஃக்ட் என பலவன வந்தாலும். கருப்பு, வெள்ளை படம் தரும் அந்த ஒரு இனிமை வேறு படங்களில் இருப்பதில்லை. அது தனி அழகு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mr and Mrs Dhoni: Seven Best Relationship Tips and Photos of Them!

Mr and Mrs Dhoni: Seven Best Photos of Them!