உங்கள் கணவரின் காதல் வாழ்நாள் முழுவதும் நீடிக்குமானு தெரிஞ்சுக்கனுமா?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

ஆண் தனக்காக ஒருவர் வாழ்நாள் முழுவதும் உடன் இருப்பார் என உணர்ந்த உடன், தன் வாழ்நாளை அவருடன் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என நினைக்கிறான். தனக்கு பிடித்தமான ஒரு நபரை தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள ஆண்கள் எத்தனை துன்பத்தை வேண்டுமானாலும் தாங்கி கொள்வார்களாம். ஒரு ஆண் தன் மனைவி அல்லது காதலியை வாழ்நாள் முழுவதும் விழுந்து விழுந்து காதலிப்பார் என்பதை இந்த சில நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுக, தூக்கங்களை பகிர்ந்து கொள்வார்

சுக, தூக்கங்களை பகிர்ந்து கொள்வார்

மகிழ்ச்சியான தருணங்களில் இருவரும் ஒன்றாக இருப்பது என்பது எளிது. ஆனால் கஷ்டமான தருணங்களில் கூட, ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது என்பது அவசியம். ஒரு உண்மையான ஆண் ஒரு சின்ன சண்டைக்காக எல்லாம் உங்களை விட்டு ஓட மாட்டார். சின்ன பிரச்சனைக்காக எல்லாம் உங்களை வருத்தப்பட வைக்க மாட்டார். உங்கள் உறவை மட்டுமே பெரிதாக நினைப்பார். உங்கள் உறவை தக்கவைத்து கொள்வது மட்டுமே அவரது நோக்கமாக இருக்கும்.

பிரச்சனைகளை கண்டு ஓட மாட்டார்

பிரச்சனைகளை கண்டு ஓட மாட்டார்

முன்னரே கூறியது போல, ஒரு உண்மையான ஆண் பிரச்சனைகள் கண்டு ஓடமாட்டார். தனது கோபங்கள் பெரிதாகி வெடிக்கும் வரை விட்டு வைக்கமாட்டார்கள். அவருக்கு என்ன பிரச்சனை என்பதை வெளிப்படையாக உங்களிடம் உடனுக்கூடன் கூறுவார். உங்களுடனான உறவில் ஏதேனும் பிரச்சனை என்றால், அதை சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ள நினைப்பார். பெரிய பிரச்சனைகள் கூட உங்கள் உறவில் சிக்கல்களை உண்டாக்காத அளவிற்கு பார்த்துக்கொள்வார். பிரச்சனைகள் இல்லாத உறவே இல்லை என்பதை புரிந்து கொண்டு நடப்பவராக இருப்பார்.

சிறிய விஷயத்திற்கு கூட மதிப்பளிப்பார்

சிறிய விஷயத்திற்கு கூட மதிப்பளிப்பார்

அவர் தனியாக வாழும் போது, பாத்திரங்கள் கழுவப்படாமல் இருப்பது, அழுக்கு துணிகள் கிடப்பது போன்றவற்றை பற்றி கவலைப்படமாட்டார். ஆனால் உங்களுடன் இருக்கும் போது, நீங்கள் அசுத்தமாக இருப்பதை விரும்பமாட்டீர்கள் என்பதற்காக நேரம் செலவழித்து அனைத்தையும் சுத்தம் செய்வார்கள். இருவரும் ஒன்றாக டிவி பார்க்கும் போது, உங்களுக்கு பிடிக்காத படத்தை பார்க்கமாட்டார். உங்களது விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பார்.

ஸ்மார்ட்டாக செயல்படுவார்

ஸ்மார்ட்டாக செயல்படுவார்

அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவரது அறிவுக்கூர்மை வெளிப்படும். நீங்கள் செய்யப்போகும் ஒவ்வொரு விஷயத்திற்கும் தேவையான அறிவுரைகளை கூறி, உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். ஒவ்வொரு செயலையும் தள்ளி நின்று பார்த்து சரியான முடிவு எடுப்பார். ஒவ்வொரு செயலையும், உங்கள் இடத்தில் இருந்து பார்ப்பார்.

உங்களை பற்றிய உயர்வான எண்ணம்

உங்களை பற்றிய உயர்வான எண்ணம்

உங்களை அவர் அழகென நினைப்பதை விட நீங்கள் உங்களை அழகென உணர்வது தான் பெரிய காரியம். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர வைப்பார். ஒரு நாள் உங்களது கூந்தல் அழகாக இல்லை என நீங்கள் வருந்தினாலும், இது கூட அழகாக தானே இருக்கிறது என பாராட்டி, உங்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயம் ஏற்படும் படி செய்வார். உங்கள் அகம், புறம் இரண்டையும் அழகாக உணர வைப்பவராக இருப்பார்.

உங்களுடைய பிரச்சனையை தன் பிரச்சனை என நினைப்பார்

உங்களுடைய பிரச்சனையை தன் பிரச்சனை என நினைப்பார்

உங்களை ஏதேனும் ஒரு செயல் பாதித்தால், அது அவரையும் பாதிக்கும். உங்களுடைய பிரச்சனையை அவருடையதாக கருதி, அதை தீர்க்க முயல்வார். உங்களது பிரச்சனை அவரது தூக்கத்தை கெடுக்கிறது என நினைக்காமல், உங்களுக்கு உதவ முடியவில்லையே என நினைத்து வருந்துவார். அனைந்து சூழ்நிலைகளிலும் உங்களுக்கு உறுதுணையாக உங்களுடன் நிற்பார்.

உங்கள் தவறை பெரிதாக நினைக்கமாட்டார்

உங்கள் தவறை பெரிதாக நினைக்கமாட்டார்

நீங்கள் செய்யும் தவறுகளை பெரியதாக்கமாட்டார். நீங்கள் அவரை புண்படுத்தும் படி ஏதேனும் ஒன்றை செய்துவிட்டால் கூட, உங்களை புண்படுத்தும் படி அவர் நடந்துகொள்ளமாட்டார்.

அவரது தவறை பெரிதாக நினைப்பார்

அவரது தவறை பெரிதாக நினைப்பார்

உங்களை தனது தோல்களில் அதிக நேரம் தாங்கும் போது கூட தனக்கு உண்டாகும் வலியை பற்றி பெரிதாக நினைக்கமாட்டார். தனக்காக என குறைந்த அளவு மட்டுமே யோசிப்பார். உங்களை சிறிதாக காயப்படுத்தினால கூட அதிகம் வருந்துவார்கள். உங்களை எந்தெந்த விஷயங்கள் காயப்படுத்தும் என்பதை அறிந்து வைத்திருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

man who will never ever stop loving you

This content defines man's long lasting love
Story first published: Thursday, May 11, 2017, 14:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter