பலரும் அறியாத நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் காதல் கதை!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவின் தலை சிறந்த விடுதலை போராட்ட வீரர். தனது இரத்தத்தையும், வியர்வையையும் தாய்நாட்டுக்காக அளித்தவர், இராணுவ படை உருவாக்கி புரட்சி செய்தவர் நேதாஜி.

நேதாஜி பற்றிய பல விஷயங்கள் இன்றளவும் இரகசியமாகவும், மறைக்கப்பட்ட உண்மைகளாகவும் தான் இருக்கின்றன. நேதாஜியின் மரணம் மட்டுமல்ல, அவரது திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்தும் பலரும் அறிந்ததில்லை. 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காயம்!

காயம்!

1933ல் ஒரு காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்த பிறகு ஆஸ்திரியாவில் தங்கியிருந்தார் நேதாஜி. இந்த காயம் அவரது காதலுக்கு வித்திட்டது. ஆம்! அங்கு தான் தனது காதல் துணையை கண்டார் நேதாஜி. ஆக்ரோஷம் நிறைந்த மனதில், காதல் கோஷம் அரங்கேறிய காலம் அது.

Image Credit:Wikimedia

எமிலி!

எமிலி!

நேதாஜி அவரது காதல் துணை எமிலியை இருவருக்கும் பொதுவான நண்பராக திகழந்த மருத்துவர் மதூர் என்பவர் மூலமாக தான் சந்தித்தார். இவர் வியன்னாவில் வாழ்ந்து வந்த இந்திய மருத்துவர் ஆவார்.

எமிலியின் ஆங்கிலம் மற்றும் டைபிங் திறன் சிறப்பாக இருந்தது. எனவே, தனது தி இந்தியன் ஸ்ட்ரகில் எனும் புத்தகத்தை எழுத எமிலியை வேலைக்கு அமர்த்தினார் நேதாஜி.

Image Credit: Wikimedia

கத்தோலிக் குடும்பம்!

கத்தோலிக் குடும்பம்!

எமிலி வியன்னாவில் வாழ்ந்து வந்த ஆஸ்திரியா கத்தோலிக் குடுமபத்தை சேர்ந்தவர். நட்பாக துவங்கி, காதலாக மலர்ந்து 1937-ல் எமிலி மற்றும் நேதாஜி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு முன்பு வரை எமிலி இந்தியா வந்ததே இல்லை.

Image Credit: Outlook India

ஜெர்மனி!

ஜெர்மனி!

திருமணம் முடிந்து நேதாஜி இந்தியா திரும்பினார். மற்றும் 1941-1943 ஜெர்மனியில் எமிலி, நேதாஜி வாழ்ந்து வந்ததாக புரளி செய்திகள் மூலம் அறியப்படுகிறது.

நேதாஜியின் குடும்பத்தாருக்கே இவர் திருமணம் செய்துக் கொண்டதும், அவருக்கு அனிதா எனும் பெண் குழந்தை இருப்பதும் தெரியாது. ஒருமுறை எமிலி நேதாஜியின் சகோதரர் சாரத் சந்திர போஸிற்கு கடிதம் எழுதினார். அப்போது தான் அவர்கள் இவரது திருமணம் பற்றி அறிந்ததாக அறியப்படுகிறது.

ஹிட்லர் சந்திப்பு!

ஹிட்லர் சந்திப்பு!

ஜெர்மன் தலைவர் ஹிட்லரை சந்தித்து இந்திய சுதந்திரத்திற்கு உதவி நாடினார் நேதாஜி. அப்போது அமெரிக்கா, பிரிட்டிஷ் கூட்டணியை எதிர்த்து ஜெர்மனி சண்டையிட்டுக் கொண்டிருந்தது.

Image Credit: Wikimedia

புலனாய்வு தகவல்கள்...

புலனாய்வு தகவல்கள்...

சில புலனாய்வு தகவல்கள் நேதாஜியின் திருமணம் 1942ல் தான் நடந்தது, 1937ல் இல்லை என்றும் கூறப்படுகிறது. சீனாவிற்கு விசா விண்ணப்பித்த போது நேதாஜி சிங்கிள் என்ற தகவல் தான் இருந்துள்ளது என்பதை சான்றாக கூறப்பட்டுள்ளது.

தனது குடும்பத்தை காக்க, தனது திருமணத்தை பற்றி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் உண்மையை மறைத்துவிட்டார். இது அவர் கையாண்ட யுக்தி என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜிக்கு பல முனைகளில் இருந்து எதிர்ப்புகள் வந்துக் கொண்டிருந்தன. அவரது உயிருக்கும் அபாயம் இருந்தது.

இந்திய அரசு!

இந்திய அரசு!

நேதாஜியின் இந்த வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்கள் அல்லது ஆதாரமாக எந்த விடயமும் இந்திய அரசிடம் இல்லை என கூறப்படுகிறது.

இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த நேதாஜியின் வாழ்க்கை முழுவதும் புரளி, மர்மங்கள் நிறைந்த இரகசியமாகவே நீடித்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Love Story of Netaji Subash Chandra Bose!

Love Story of Netaji Subash Chandra Bose!
Subscribe Newsletter