சமந்தா - நாக சைதன்யா மத்தியில் காதல் மலர்ந்தது இப்படி தானாம்... அட!

Posted By:
Subscribe to Boldsky

திரைத்துறையை சேர்ந்த நடிகர் - நடிகை திருமணம் செய்துக் கொள்வதென்பது ஒன்றும் புதிய கதை அல்ல. நாகார்ஜுனா குடும்பத்திற்கும் இது புதியதல்ல. அவரே நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகைகளாக இருந்தாலே, இவர் அவரை காதலிக்கிறார், அவர் இவரை காதலிக்கிறார் என கிசு கிசு பிரளிகள் காற்றில் பறந்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால், நாக சைதன்யா - சமந்தா மத்தியில் எப்படி காதல் உதித்தது?

இந்த நூற்றாண்டின் சிறந்த காதல் படங்களில் ஒன்றான விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு பிரதியில் நடிக்கும் போது கூட இவர்கள் காதலில் விழவில்லையே? பிறகு எப்படி? எப்போது இவர்களுக்குள் காதல் எட்டிப்பார்த்தது....?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏ மாய சேசாவே...

ஏ மாய சேசாவே...

விண்ணைத்தாண்டி வருவாயின் தெலுங்கு பதிப்பான "ஏ மாய சேசாவே..."படத்தில் நாக சைதன்யாவும் - சமந்தாவும் நடித்திருந்தார்கள். இதற்கு அர்த்தம் என்ன மாயம் செய்தாயடி... என்பதாகும். ஆனால், இந்த படத்தில் நடிக்கும் போதோ, நடித்து முடித்த பிறகோ இவர்கள் காதலில் விழவில்லை.

ஏன், இவர்கள் இருவரும் மீண்டும் இனைந்து நடித்த ஆட்டோநகர் சூர்யா படத்தில் நடிக்கும் போதும் இவர்களுக்குள் காதலில்லை.

2015!

2015!

2015ம் ஆண்டு முதல் தான் இந்த காதல் ஜோடி ஆங்காங்கே ஒன்றாக தென்பட துவங்கியது. ஆரம்பத்தில் காதல் ஏதுமில்லை என கூறி மறுத்து வந்தவர்கள். கடைசியில் இவர்களே தங்கள் இன்ஸ்டா போன்ற சமூகத்தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட படங்களாய் பகிர துவங்கி, காதல் தான் என்பதை ஊர்ஜிதம் செய்தனர்.

ஃபிட்!

ஃபிட்!

காதல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், இவர்கள் காதலில் விழ ஆரோக்கியம் தான் முக்கியமான காரணமாகவே இருந்திருக்கிறது. இவர்கள் ஒன்றாக வெளியிடங்களுக்கு மட்டும் சென்று வரவில்லை. ஜிம்மிற்கும் ஒன்றாக தான் சென்று வந்துள்ளனர்.

ஒருவேளை ஜிம் வர்க்கவுட், காதல் வர்க்கவுட்டாக மாறியிருக்குமோ...

நாகார்ஜுனா...

நாகார்ஜுனா...

இவர் நாகார்ஜுனாவை மாமா என்று அழைக்க துவங்கியது, காதலுக்கு வீட்டில் பச்சைக் கொடி கிடைத்துவிட்டது என அறிந்துக் கொள்ள முடிந்தது. நாக சைதன்யாவும் திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் நடிப்பார் என கூறியிருந்தார்.

நிச்சயதார்த்தம்!

நிச்சயதார்த்தம்!

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அன்று சமந்தா உடுத்தியிருந்த உடையில் காதல் இலச்சினையாக இவர்கள் இருவரின் படம் டிசைன் செய்யப்பட்டிருந்தது.

திருமணம்!

திருமணம்!

நேற்று நள்ளிரவு இந்து முறைப்படியும், இன்று காலை கிருஸ்துவ முறைப்படியும் என இரண்டு முறை சமந்தா - நாக சைதன்யாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Love Story of Gorgeous Samantha and Heroic Naga Chaitanya!

Love Story of Gorgeous Samantha and Heroic Naga Chaitanya!