கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் காதல் வாழ்க்கை இப்படித்தான் துவங்கியது!

Subscribe to Boldsky

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் கிரிக்கெட் வீரர்களின் காதல் இணையத்தில் வைரலாகி வருகிறது கோஹ்லி அனுஷ்காவின் திருமணத்தைப் பற்றி எல்லாருமே பேசிக்கொண்டிருக்க தற்போது அவர்களின் கதையை ஓரந்தள்ள இன்னொரு கிரிக்கெட் வீரரின் கதை வந்துவிட்டது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய நம் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடைசி ஓவர் :

கடைசி ஓவர் :

கேப்டன் கோஹ்லி திருமண வைபவத்தில் பிஸியாக இருக்க இப்போதைய கேப்டனாக களமிறங்கினார் ரோஹித் சர்மா. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை களத்தில் நின்றிருந்தார் ரோஹித்.

கடைசி ஓவரின்போது 191 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார் கேப்டன் ரோஹித். பெரெரா கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் வீச, இன்னும் மூன்று ரன்களே எடுக்க வேண்டும் என்ற நிலையில், லான்ங்-ஆனில் பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்களுக்கு கால் செய்தார் ரோஹித். எதிரே இருந்த சக வீரரான ஹர்திக் பாண்ட்டியாவும் அதற்கு ஈடு கொடுத்தார்.

ரோஹித் 200! :

ரோஹித் 200! :

அந்த இன்னிங்ஸ் முடிய ஒரே ஒரு ஒவர் மட்டுமே இருந்தது. இந்த பரபரப்பான சூழலை புரிந்துகொண்ட ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே (Ritika Sajdeh) கண்கலங்கி நிற்க, செம்மையாக ஆடி 17 ரன்கள் எடுத்து, மொத்தம் 208 ரன்கள் எடுத்தார் ரோஹித். தன் வெற்றியை நிச்சயதார்த்த மோதிரத்தை முத்தமிட்டு வெற்றியை மனைவிக்கு டெடிகேட் செய்தார் ரோஹித்.

திக் திக் நிமிடங்கள் :

திக் திக் நிமிடங்கள் :

ஒரு வழியாக 151 பந்துகளுக்கு 200 ரன்களைக் கடந்த பின்னர், ரோஹித்தின் மனைவி ஆனந்த கண்ணீரில் துள்ளிக் குதித்து உற்சாகப்படுத்த, அரங்கமே இந்திய அணி கேப்டனுக்கு எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது.

அந்த திக் திக் நிமிடங்கள் சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவியது. இன்னொரு ஹைலைட்டான விஷயம் மனைவிக்கு டெடிக்கேட் செய்த நாள் அவர்களின் முதல் வருடத் திருமண நாள்!

எனக்கு பலம் சேர்ப்பவள் :

எனக்கு பலம் சேர்ப்பவள் :

இரட்டை சதம் அடித்து பிறகு, ரோஹித் பேசுகையில், "இந்த ஸ்பெஷல் நாளில், என் மனைவி என்னுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இரட்டை சதம்தான், எங்கள் திருமண நாளுக்கு, நான் அவளுக்கு அளிக்கும் பரிசு. எப்போதும், எனக்கு பலம் சேர்ப்பவள் அவள்.

இந்த விளையாட்டில், நிறைய மன அழுத்தங்கள் இருக்கும். என் மனைவி என்னுடன் இருப்பதால்தான் அவற்றை எல்லாம் கடந்துவருகிறேன்", என்று நெகிழ்ந்து கூறினார் ரோஹித் ஷர்மா!

முதல் முறை :

முதல் முறை :

ரித்திகா சஜ்தே 2008ம் ஆண்டு, ஒரு ஸ்போர்ட்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அந்த ஆண்டுதான், ஒரு விளம்பர ஷூட்டிங்கில், ரோஹித்தை முதன்முறையாகச் சந்தித்தார் ரித்திகா. ரோஹித்தை ரித்திகாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!

ப்ரோப்போஸ் :

ப்ரோப்போஸ் :

ரோஹித் ஷர்மா ரித்திகா சஜ்தேவை புரொபோஸ் செய்த இடம், மும்பையிலுள்ள கிரிக்கெட் கிளப். இது ரோஹித் முதன்முதலாக கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்ட இடம்.

ரோஹித் புரொபோஸ் செய்தது பற்றி ரித்திகா ஒரு முறை பேசுகையில், "அன்று மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஒரு நிகழ்ச்சி நடந்துமுடிந்திருந்தது. அப்போ ரோஹித் என்னிடம், 'நாம ஒரு டிரைவ் போகலாம்'னு சொன்னார். நாங்க நிறைய தடவை அப்படி டிரைவ் போயிருக்கோம். அதனால, அன்னைக்கு ரோஹித் கேட்டது எனக்குப் புதுசா தெரியலை.

Image Courtesy

அழகான தருணம் :

அழகான தருணம் :

அவர் என்னை எங்க கூட்டிட்டு போறாருனு நானும் கேக்கலை. அவர் என்னைக் கூட்டிட்டுப் போனது. போரிவிலி ஸ்போர்ட்ஸ் கிளப் அங்கே வெச்சு, "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?'னு கேட்டார்.

அவர் அப்படி புரொபோஸ் பண்ணதுக்கே அவரை காதலிக்கலாம்னு தோணுச்சு. என் வாழ்க்கையில் நடந்த மிகவும் அழகான தருணம் அது" என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.

Image Courtesy

நட்பிலிருந்து காதல் :

நட்பிலிருந்து காதல் :

ரோஹித் ஷர்மாவும் ரித்திகா சஜ்தேவும் நண்பர்களானார்கள். பிறகு காதலில் விழுந்து ஆறு வருடங்கள் காதல் காலத்தைக் கடந்து 2015ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, திருமணம் செய்துகொண்டனர்.

Image Courtesy

மேனேஜர் :

மேனேஜர் :

ரித்திகா சஜ்தே ஸ்போர்ட்ஸ் மேனேஜராக இருந்தவர். ரோஹித் ஷர்மா கிரிக்கெட்டில் கால் பதித்த நாளிலிருந்து, அவர் ஆடும் ஒவ்வொரு மேட்சிலும் ரித்திகா சஜ்தேவை கேலரியில் பார்க்கலாம். அது உள்ளூர் போட்டியாக இருந்தாலும் சரி..வெளிநாட்டு போட்டியாக இருந்தாலும் சரி!

Image Courtesy

செல்லப்பெயர் :

செல்லப்பெயர் :

ரோஹித் ஷர்மாவை ரித்திகா செல்லமாக அழைப்பது "ரோ"! ரோஹித் ஷர்மா தன் ட்விட்டர் பக்கத்தை "IamRo45" என்று பெயரில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்!

Image Courtesy

ஹிரோ:

ஹிரோ:

இலங்கையை சேர்ந்த முகமது தீவிரமான கிரிக்கெட் ரசிகர். தற்போது நடைப்பெற்ற இந்தியா-இலங்கை போட்டியைக்காண அவர் இந்தியா வந்திருந்தார்.

டுவென்டி-20 தொடர் முடிந்த பின் இலங்கைக்கு திரும்பும் வகையில் டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் திடிரென மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் டிசம்பர் முதல் வாரம் இவரது தந்தைக்கு புற்றுநோய் தீவிரமாகி உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

என்ன உதவி வேண்டும் :

என்ன உதவி வேண்டும் :

உடனடியாக இலங்கைக்கு விமான டிக்கெட் எடுக்க பணமில்லாமல் தவித்த நேரத்தில் இந்தியவின் கிரிக்கெட் ரசிகரான சுதிர் கவுதமிற்கு விஷயம் தெரிந்திருக்கிறது.இவர் இந்த விஷயத்தை ரோஹித்திடம் கொண்டு செல்ல,ரோஹித் உடனடியாக விமான டிக்கெட் எடுத்து கொடுத்தாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Love story of a cricketer Rohit Sharma

    Love story of a cricketer Rohit Sharma
    Story first published: Friday, December 15, 2017, 14:30 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more