தற்கொலையில் இருந்த காப்பாற்றி, அந்த ஆணையே மணந்த கலியுக தேவதை!

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்கும் சொல்லிக் கொள்ளும் படியான ஒரு சிறந்த காதல் கதை அமைந்து விடாது. அப்படியே அமைந்தாலும், அதில் எத்தனை பேர்   வெற்றிகரமாக கரம் பிடித்தவர்கள் என்று பார்த்தல் விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற கணக்கில் தான் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு காதல் கதை தான் இது...

எத்தனை பேருக்கு வாய்க்கும் தனது வாழ்வில், தான் விரும்பிய, தன்னை ஈர்த்த அந்த முதல் பெண்ணையே திருமணம் செய்துக் கொள்ளும் வரம். இந்த நபருக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால், ஒரு எதிர்பாராத தருணத்தில்..., வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்த நேரத்தில் தான், இவரது வாழ்க்கை துவங்கியிருக்கிறது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சம்மர் கேம்ப்!

சம்மர் கேம்ப்!

எனக்கு 13 வயது இருக்கும், நான் ஒரு சம்மர் கேம்பில் பங்கேற்றிருந்தேன். அங்கே ஒரு அழகான பெண்ணை கண்டேன். அப்படி ஒரு பெண்ணை என வாழ்நாளில் அதற்கு முன்னர் நான் கண்டதில்லை.

அவள் நேராக என்னை நோக்கி நடந்து வந்து," கருப்பு நிறம் உனக்கு எடுப்பாக இருக்கிறது" என கூறி நகர்ந்தாள்..

அவள் ஏன் அப்படி கூறினால், எதற்காக கூறினால் என எதுவும் தெரியாமல் நான் திகைத்து நின்றேன்.

அதன் பிறகு நாங்கள் இருவரின் AIM Screen பெயர்களை பகிர்ந்துக் கொண்டோம். நிறைய உரையாடிக் கொண்டிருந்தோம். அது ஒரு அழகான தருணமாக என் வாழ்வில் அமைந்தது.

சத்தியம்!

சத்தியம்!

நாட்கள் கடந்தன. உயர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என்னால் ஒருநாளும் அவளை பற்றி எண்ணாமல் இருக்க முடியும் என நான் சத்தியம் செய்ய முடியாது. இப்போதும் கூட அவளை பற்றிய நினைவுகள் என்னுடன் பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது.

நான் எனது சீனியர் வகுப்பில் பயின்றுக் கொண்டிருந்தேன். அது என் வாழ்வின் கடுமையான நாட்கள் என்று தான் கூற வேண்டும்.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

அந்த பள்ளியில் பல விஷயங்களை என்னுள் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக இருந்தன. ஒரு கட்டத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, எழுத வேண்டியதை எழுதி முடித்துவிட்டு, தற்கொலை செய்துக் கொள்ள தயாரானேன்...

அப்போது திடீரென என் அலைபேசிக்கு ஒரு கால் வந்தது... ஒரு தெரியாத எண்ணில் இருந்து...

கடைசி அழைப்பு!

கடைசி அழைப்பு!

நான் தற்கொலை செய்துக் கொள்ள 5 - 10 நொடிகள் இருக்கும் அந்த தருணத்தில், யார் என்று தெரியாத ஒரு எண்ணில் இருந்த அழைப்பு.... எடுத்து தான் பேசுவோமே என்ற எண்ணம் அட்டன்ட் செய்தேன்.... மறுமுனையில் நான் கேட்டது... ஆம்! அவளே தான்!

"என்ன.." என்று கேட்டேன்... கிட்டத்தட்ட நாங்கள் பேசி ஒரு வருட இடைவேளைக்கு பிறகு வந்த கால் அது. "சும்மா... கால் பண்ண தோனுச்சு பண்ணேன்.." என்றாள்.

என் விஷயங்களை பகிர்ந்தேன்... என்னை ஏதும் செய்துக் கொள்ள வேண்டாம் என தடுத்தாள். மீண்டும் நாளை கால் செய்கிறேன் என வாக்குறுதி அளித்தாள்..

பத்து வருடங்களுக்கு பிறகு அந்த இரவை பற்றி நான் எழுதினேன்...

Image Credit: Quora

முதல் ஈர்ப்பு!

முதல் ஈர்ப்பு!

அவள் தான் என் முதல் ஈர்ப்பு. என்னை தற்கொலையில் இருந்த தடுத்த அவள். இப்போது பத்து வருடங்கள் கழித்து திருமணம் செய்துக் கொண்டாள்.

படிக்க உங்களுக்கு ஒரு சினிமா போல இருக்கலாம். ஆனால், இது தான் கெல்வினின் காதல் கதை.

Image Credit: Quora

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girl Married The Man Who She Saved From Suicide!

Girl Married The Man Who She Saved From Suicide!
Subscribe Newsletter