இல்லற வாழ்க்கை சிறக்க உங்க மனைவிகிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கோங்க!

Written By:
Subscribe to Boldsky
இல்லற வாழ்க்கை சிறக்க உங்க மனைவிகிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கோங்க!- வீடியோ

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் என்று தனியாக ஒன்று இருக்கும். திருமணமான பிறகு அதிகரிக்கும். ஒரு நல்ல இன்பமான கனவு வாழ்க்கை அமைய ஒவ்வொருவரும் தங்களது துணையிடம் இருந்து எதிர்பார்ப்பது புரிதலும், இணக்கமும் தான். இது கணவன் மனைவி இருவரிடம் இருந்து வர வேண்டும்.

ஏனென்றால் திருமணம் உறவில் கணவன் மனைவி என இருவரது பங்களிப்பும் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த கணவன் மனைவி உறவில் ஒரு சில விஷயங்களை பற்றி பேசுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். மற்ற உறவுகளிடம் ஒரு விஷயத்தை சாதாரணமாக சொல்வதற்கும் கணவன் மனைவிகள் அதை பற்றி பகிர்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதைப்பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஒப்பிட வேண்டாம்

ஒப்பிட வேண்டாம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரோல் மாடல்கள் மற்றும் பிடித்த நபர்கள் இருப்பார்கள். அதற்காக உங்களது மனைவியை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். எனது அம்மா வேலைகளை இப்படி செய்வார்.. நன்றாக சமைப்பார் என்று உங்களது அம்மாவிடம் கூட உங்களது மனைவியை ஒப்பிட்டு பேசாதீர்கள்.

அதே போல தான் மனைவிகளும் தங்களது கணவரை தனது கணவன் அல்லது தந்தையுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவருடைய தனிப்பட்ட நல்ல குணங்களை அடிக்கடி புகழ்ந்து பேச வேண்டும்.

பண பிரச்சனைகள்

பண பிரச்சனைகள்

கணவன் மனைவி உறவில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது பணம் தான். எனவே திருமணத்திற்கு முன்னரே ஒருவருக்கொருவர் தங்களது நிதி நிலையை பற்றி தெளிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னால் இதை தான் செய்ய முடியும். இது எல்லாம் என் தகுதிக்கு அப்பாற்பட்டவை என்பது போன்ற விஷயங்களை சொல்லிவிட வேண்டும். இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வதே கணவன் மனைவி உறவிற்கு சிறந்த அடையாளமாகும்.

அடிமைப்படுத்துதல்

அடிமைப்படுத்துதல்

உங்களுக்கு உங்களது உறவின் மீது மரியாதை இருக்க வேண்டியது அவசியம். கணவனோ மனைவியோ இருவருமே சரிசமமாக நடந்து இருக்க வேண்டும். அனைத்து விஷயத்திலும் ஒருவரது கை மட்டுமே ஓங்கியிருப்பது அன்பான கணவன் மனைவி வாழ்க்கைக்கு சிறப்பல்ல...

கடந்த காலம்

கடந்த காலம்

உங்களது கடந்த கால வாழ்க்கையை பற்றி உங்களுடைய மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றால், உங்களது மனைவி அதனை புரிந்து கொள்பவர் என்றால் நீங்கள் அவரிடம் கண்டிப்பாக உண்மையை மறைக்க கூடாது.

விவாதம்

விவாதம்

எந்த ஒரு உறவிலும் சண்டை சச்சரவுகள் வருவது இயல்பானது தான்.. அதன் காரணமாக வாக்குவாதங்கள் வருவதும் கூட இயல்பான ஒன்று தான். ஆனால் உங்களது வாக்குவாதங்கள் எதுவரை என்ற ஒரு எல்லை கோடு இருக்க வேண்டியது அவசியமானதாகும். உங்கள் மீது தவறே இல்லை என்றாலும் வாக்குவாதத்தில் நீங்கள் அதிகமாக தேவையற்றவற்றை பேசிவிட்டால் தவறு உங்கள் மீதானதாகிவிடும். எனவே வாயை கட்டுப்படுத்துங்கள்..

நேரம் கொடுங்கள்

நேரம் கொடுங்கள்

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுவது மிக நல்ல விஷயம் தான். ஆனால் 24X7 உங்களடைய துணை உங்களுடனே தான் இருக்க வேண்டும் என்பது சரியல்ல.. அவருக்கு பிடித்தமான விஷயங்களை செய்ய அவரை அனுமதியுங்கள். அவர் தனது நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்றால் அனுமதி கொடுங்கள். அப்போது தான் அவர் சோகங்களை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு உங்களுடன் சந்தோஷமாக இருப்பார்.

விட்டுக்கொடுத்தல்

விட்டுக்கொடுத்தல்

உங்களது துணையின் சந்தோஷத்திற்காக சின்னசின்ன விஷயங்களை விட்டுக்கொடுத்து போகலாம். சின்ன சின்ன தியாகங்கள் செய்து வாழ்வதில் தான் உறவின் மகிழ்ச்சியே இருக்கிறது. உங்களது துணையின் மகிழ்ச்சிக்காக உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் பார்ப்பதை ஒரு தடவையாவது விட்டுக்கொடுப்பது. அவர்களுக்கு பிடித்த சீரியலை நீங்கள் மகிழ்ச்சியாக அவருடன் சேர்ந்து பார்ப்பது போன்ற சில தியாகங்கள் தான் உங்களது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும்.

உணர்ச்சிகளை அடக்க வேண்டாம்

உணர்ச்சிகளை அடக்க வேண்டாம்

திருமண உறவு என்பது கணவன் மனைவி இருவரும் தங்களுடைய நட்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாக இருக்க வேண்டும். நண்பர்கள் போல உற்சாகமான உறவுடன் இருக்க வேண்டும். புரிதல் அதிகமாக இருக்க வேண்டும். சில சண்டைகளும் அதிகமான காதலும் உறவில் நிரம்பி இருக்கட்டும். உங்களது மனதிற்கு அழுத்தம் தரும் எந்தவொரு விஷயத்தையும் நீங்கள் மனதிற்குள்ளேயே பூட்டி வைக்க வேண்டாம். உங்களது துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நம்பிக்கை அவசியம்

நம்பிக்கை அவசியம்

கணவன் மனைவி உறவில் நம்பிக்கை என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை போன்றது. எனவே உங்களது துணையின் மீது நம்பிக்கை வையுங்கள். மற்றவர்கள் முன்பு அவரை விட்டுக்கொடுக்காமல் பேசுங்கள். அதே போல உங்களது துணை உங்கள் மீது கொண்ட நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.

குழந்தைகளை பற்றிய முடிவுகள்

குழந்தைகளை பற்றிய முடிவுகள்

குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒன்றும் எளிதான விஷயம் அல்ல. இது உங்களது வாழ்க்கையில் பல மாற்றங்களையும், செலஞ்ச்களையும் உங்களுக்கு கொடுக்கும். எனவே மற்றவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இருவரும் உங்களது சூழ்நிலைகளை யோசித்துப் பார்த்து எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யுங்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Follow these Ten Rules for happy marriage life

Follow these Ten Rules for happy marriage life
Subscribe Newsletter