காதலனை பற்றி தோழியரிடம் பெண்கள் அதிகமாக பகிர்ந்துக் கொள்ளும் விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இப்போதெல்லாம் காதலன், காதலி பேசுவது சமூக வலைத்தளங்களிலேயே கசிந்து ஹிட் அடிக்கின்றன. மற்றவரது வீட்டில், உறவில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், பரப்பவும் நமக்குள் அப்படியோர் ஆனந்தம் பொங்கி வழிகிறது. ஆனால், காதலினிடம் பேசும் சிலவற்றை தங்கள் தோழிகளிடம் பகிர்ந்துக் கொள்ளும் குணாதிசயம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

தாம்பத்தியத்தை குறித்த இந்த 12 விஷயங்களை யாரும் உங்களிடம் கூறமாட்டார்கள்!

இதில் சிலவன மிகவும் பர்சனலானது இதையெல்லாம் அவள் யாருடனும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார் என நீங்கள் எண்ணலாம். ஆனால், அவற்றையும் கூட அவர்கள் நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கிறார்களாம். சில சமயங்களில் இவற்றை பாதுகாப்பு கருதியும் பகிர்கிறோம் என பெண்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எரிச்சல், கிறுக்கு

எரிச்சல், கிறுக்கு

எரிச்சலூட்டும் வகையிலோ, கிறுக்குத்தனமாகவோ நீங்கள் ஏதாவது செய்தால் நக்கலாகவோ, கிண்டலாகவோ பேசும் போது தங்களது தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

உடலுறவு

உடலுறவு

உடலுறவுக் குறித்து காதலியிடம் பேசினால் பர்சனல் என எண்ணி யாருடனும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார் என நினைக்கலாம். ஆனால், அடிக்கடி இதுப்பற்றி பேசினால் உங்களை பற்றி கணக்கிட, நீங்கள் இதற்காக மட்டும் தான் பழகுகிறீர்களா அல்லது உறவில் நீடிப்பது நல்லதா என அறிந்துக் கொள்ள கூட தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கின்றனர் பெண்கள்.

நண்பர்கள்

நண்பர்கள்

அழகாக இருந்தால் தோழி சைட் அடிக்க, வேடிக்கையாக இருந்தால் கலகலப்பாக பேச, முரடனாக இருந்தால் திட்டித்தீர்க்க என உங்கள் நண்பர்கள் எப்படி இருந்தாலும், அவர்களை பற்றிய தகவல்களையும் தோழிகளுடன் பேசும் போது பகிர்ந்துக் கொள்வார்களாம்.

குடும்பம்

குடும்பம்

காதலனின் குடும்பத்தை பற்றி பெரும்பாலும் மேலாப்படி தான் பேசுவார்களாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு அப்படியே தலைகீழ் காலை எழுந்ததில் இருந்து மாலை முடிந்தது வரை அனைத்தையும் தோழியிடம் கூறி பாரத்தை இறக்கி வைத்துவிடுவார்களாம்.

பணம்

பணம்

நீங்கள் நினைப்பது போல அல்ல. என்ன சம்பாதிக்கிறான், என்ன திட்டங்கள் வைத்திருக்கிறான், சேமிப்பு குறித்து தான் பேசுவார்களாம். பெரும்பாலும் பெண்கள் காதலனின் சம்பளம் பற்றி உண்மையை கூறுவதில்லை. கெத்து குறைந்துவிடும் என எண்ணுகின்றனர்.

எதிர்காலம்

எதிர்காலம்

திருமணத்திற்கு பிறகு என்ன செய்யவிருக்கிறோம், குழந்தை குட்டிகள், வீடு வாகனம் வாங்குதல், செட்டில் ஆவது பற்றி நீங்கள் இருவரும் திட்டமிட்டு வைத்திருப்பது போன்றவற்றையும் கூட தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்வார்களாம்.

வேறென்ன இருக்கு..?

வேறென்ன இருக்கு..?

இதெல்லாம் படிச்சுட்டு, "இத தவிர சொல்றதுக்கு வேற என்ன இருக்கு, அதான் எல்லாமே சொல்லிட்டாங்களே..." என நினைக்கிறீர்களா?. ஒவ்வொரு பொண்ணுக்கு ஒவ்வொரு ஃபீலிங் அனைவருமே அனைத்தையும் பகிர்ந்துக் கொள்வதில்லையாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What She Tells About You To Her Friends

Do you know What She Tells About You To Her Friends? read here in tamil.