மன அழுத்தத்துடன் இருக்கும் போது உடலுறவில் ஈடுபடுவது, பெண்களின் கருத்து என்ன?

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு என்பது இருவரும் உடன்பட்டு ஈடுபடும் போது மனதை புத்துணர்ச்சியடைய வைக்கிறது. அதுவே, இருவரில் ஒருவருக்கு உடன்பாடு இல்லாமல் போனாலும், மனதளவில் எதிர்மறை தாக்கத்தை சிறிதளவாவது உண்டாக்கிவிடுகிறது.

உங்க மனைவி 'அதுக்கு நோ' சொல்றாங்களா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணி மடக்குங்க...

மெஷின் போல உழைக்க துவங்கிய நாளில் இருந்து மன அழுத்தம் அன்றாட வாழ்வில் ஒன்றிப்போய்துட்டது. மன அழுத்தமாக இருக்கும் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது சரியா? பெண்கள் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது குறித்து என கருதுகின்றனர்? என்பது குறித்து இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தத்தின் போது உடலுறவு ஆர்வம்?

மன அழுத்தத்தின் போது உடலுறவு ஆர்வம்?

மன அழுத்தத்துடன் இருக்கும் போது உடலுறவில் ஈடுபட நாட்டம் ஏற்படுவதில்லை. பொதுவாகவே எந்த வேலையிலும் ஈடுபாடு செலுத்த முடியாது. தாம்பத்தியம் குறித்த எண்ணம் அந்த தருணத்தில் பெரிதாய் எழுவதில்லை.

உடலுறவில் பாதிப்புகள்?

உடலுறவில் பாதிப்புகள்?

மன அழுத்தத்துடன் இருக்கும் போது உடலுறவில் தாக்கம் அதிகமாகவே உண்டாகிறது. சோகத்தினால் உண்டாகும் தூக்கமின்மை, அதனால் அதிகரிக்கும் உடல் சோர்வும் சேர்ந்து மற்ற காரியங்களில் எண்ணத்தை செலுத்த முடியாமல் தடுக்கிறது. இது உடலுறவையும் பாதிக்கிறது.

தாம்பத்தியம் பற்றி?

தாம்பத்தியம் பற்றி?

சாதாரணமாக இருக்கும் தாம்பத்திய வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் மன அழுத்தத்துடன் இருக்கும் போது எதிர்மறை தாக்கங்கள் உண்டாவது கண்கூடாக காண முடியும். இதன் எதிரொலியாய் இல்லறத்திலும் கூட சின்ன சின்ன சங்கடங்களை எதிர்காண வேண்டியுள்ளது.

மனநிலை மாற்றம் ஏற்படுகிறதா?

மனநிலை மாற்றம் ஏற்படுகிறதா?

மன அழுத்தத்துடன் இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்ட பிறகு மனநிலையில் மாற்றங்கள் நிறையவே காண முடிகிறது. மனதும், உடலும் இலகுவாக உணர முடியும். இறுக்கமான சூழலில் இருந்து வெளிவந்தது போல இருக்கும்.

எதிர்மறை தாக்கம் உண்டாகிறதா?

எதிர்மறை தாக்கம் உண்டாகிறதா?

மன அழுத்தத்துடன் இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்ட பிறகு எதிர்மறை தாக்கங்கள் ஏதும் உண்டானது இல்லை. உண்மையில் புத்துணர்ச்சி ஏற்பட்டது போல தான் இருக்கும்.

துணையிடம் இது குறித்து பேசுவீர்களா?

துணையிடம் இது குறித்து பேசுவீர்களா?

பெரும்பாலும் உடலுறவில் ஈடுபடும் முன்னர், மன அழுத்தமாக இருப்பதாய் கூறுவதில்லை. ஒருவேளை இது அவர்களது எண்ணத்தை சீர்குலைந்து போக செய்துவிடுமோ என தங்களுள் தான் பெண்கள் வைத்துக் கொள்கின்றனர்.

ஆய்வாளர்கள் கருத்து

ஆய்வாளர்கள் கருத்து

மன அழுத்தத்தை குறைக்க மருந்து மாத்திரைகள் உட்கொள்வது சிறந்த முறை அல்ல. உடலை சரி செய்ய தான் மருந்துகள் தேவையே ஒழிய, மனதை சரி செய்ய அல்ல. மனதை கட்டுப்படுத்த முயலுங்கள். உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் அந்த சூழலில் இருந்து முதல் வெளியேறுங்கள்.

உடலுறவு

உடலுறவு

இருவரும் உடன்பட்டு ஈடுபடும் உடலுறவானது மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து என்று தான் கூற வேண்டும். இதை பல ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தும் உள்ளனர்.

உடலுறவு

உடலுறவு

முடிந்த வரை இயற்கை சூழல் நிறைந்த இடம், உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள் இருக்கும் இடத்தில் நேரத்தை செலவளிப்பதன் மூலமாகவே மன அழுத்தத்தை எளிதாக போக்கிவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What It's Really Like To Have Intercourse When You're Depressed

What It's Really Like To Have Intercourse When You're Depressed, read here in tamil.