நீங்க சிங்கிளாவே இருக்கிறதுக்கு இந்த 7 விஷயம் கூட காரணமா இருக்கலாம்!!!

Posted By:
Subscribe to Boldsky

சிங்கிளாக இருப்பது தான் சந்தோஷம், காதல் என்றாலே பெரும் தோஷம் என்று வசனம் பேச நன்றாக தான் இருக்கும். ஆனால், உள்ளுக்குள் அவரவர் புழுங்கிக் கொண்டிருப்பது அவரவருக்கு தான் தெரியும்.

சிங்கிள் தான் ஹேப்பி என்று கூவும் ஆண்கள் எல்லாம், காதலுக்காக ஏங்குவதும், தனியாக இருக்கும் தருணங்களில் எப்படி உஷார் செய்வது என காதலிக்கும் நண்பர்களிடம் ஐடியா கேட்பதும் நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரியும்.

என்ன செய்தாலும் நீங்கள் வருடா வருடம் சிங்கிளாகவே இருப்பதற்கு நீங்கள் செய்யும் இந்த 7 செயல்கள் தான் காரணம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நள்ளிரவில் கால் செய்வது

நள்ளிரவில் கால் செய்வது

சிங்கிளாக இருக்கும் நபர்களிடம் இருக்கும் ஓர் பொதுவான பழக்கம் நள்ளிரவில் கால் செய்து தொந்தரவு செய்வது. சாதாரண விஷயங்களை கூட 108-ஐ அழைக்கும் அளவு அவசரத்தில் கால் செய்து கொடுமை செய்வார்கள்.

குடித்திருக்கும் போது மட்டுமே பேசுவது

குடித்திருக்கும் போது மட்டுமே பேசுவது

சிங்கிள் ஆண்கள் குடித்துவிட்டால் அவர்கள் பேசும் இரண்டு முக்கிய தலையாய பேச்சு, 1) எப்போது முடிந்த சண்டையை தூசித்தட்டுவது, 2) காதலிக்கும் நண்பனுக்கு காதலே வேண்டாம் என்று அட்வைஸ் செய்வது.

உதார் விடுவது

உதார் விடுவது

நண்பர்கள் கூட்டத்திற்கு முன்னர், நான் ஒரு தனித்துவம் கொண்டவன் என்று காட்டிக் கொள்ளும் நபர்கள் முக்கால்வாசி சிங்கிளாக தான் இருக்கிறார்கள். காரணம் இவர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள் அல்ல, அதுபோல காட்டிக் கொள்பவர்கள்.

தன்னை தானே விரும்பும் பேர்வழி

தன்னை தானே விரும்பும் பேர்வழி

சிங்கிளாக இருக்கும் நபர்கள் அடிக்கடி கூறும் பொன் வாக்கியம், "நான் என்னையே காதலிக்கிறேன்" அதாங்க.., I love myself ஆமா...!! இப்படி சொல்லிட்டு திரிஞ்சா காதல் எப்படி வரும்....

அஜால் குஜால் எண்ணத்தில் திளைப்பது

அஜால் குஜால் எண்ணத்தில் திளைப்பது

எப்போதுமே பெண்களை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பது. மாடர்னாக இருந்தால் அந்த பெண் "அப்படிப்பட்டவள்" என்று கூறி மகிழ்வது.

ஊக்குவிப்பு இல்லாதிருப்பது

ஊக்குவிப்பு இல்லாதிருப்பது

தான் யார், எனக்கு என்ன வரும்.. என்ன செய்தால் நாம் முன்னேறுவோம், எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இன்றி வாழ்வது.

பீட்டர் என்பது

பீட்டர் என்பது

பெண்கள் இருக்கும் கூட்டத்தில் ஓர் ஆண் சகஜமாக பேசினால், என்னடா மடிச்சுட்டியா..., கரக்ட் பண்ணிட்டியா என்று பேசுவது. பெண் தோழியாக இருப்பினும் கூட "காதலியா, கூட்டி வந்துட்டியா" என்ற நோக்கத்திலேயே பேசுவது.

முடிவு

முடிவு

ஆண்கள் கூட்டத்தில் இருந்துக் கொண்டு இப்படி பேசுவது, அந்த நேரத்தில் மகிழ்ச்சியாகவும், பேரின்பமாகவும் இருக்கலாம். ஆனால், நீங்கள் இப்படி செய்வதை பெண்கள் அறிந்தால், எந்த காலத்திலும் காதல் செட்டே ஆவாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Reasons behind Your Single Status

Weird Reasons behind Your Single Status
Story first published: Wednesday, February 3, 2016, 15:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter