For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலுத்துப் போய் காணப்படும் காதல் உறவில் புத்துணர்ச்சி அடைய சில வழிகள்!!

|

"ஒன்றா இரண்டா, ஆசைகள்... எல்லாம் கூறவே இந்த ஓர்நாள் போதுமா...." என்று தான் அனைவரும் தங்கள் காதல் மற்றும் இல்லற உறவை துவங்குகிறார்கள். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல... "காதல் கசக்குதய்யா... வர வர காதல் கசக்குதய்யா.." என்று புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன?

நன்றாக யோசித்தால், உங்களை நீங்களே தான் குற்றம் கூறிக்கொள்ள வேண்டும். காதல் உறவின் ஆரம்பத்தில் நீங்கள் உருகி உருகி செய்த செயல்களை முற்றிலுமாக மறந்துவிடுவது தான் உங்கள் காதல் வாழ்க்கை அலுத்துப் போனது போல நீங்கள் உணர்வதற்கான காரணமாக இருக்கின்றது. இதை நீங்கள் புரிந்துக் கொண்டாலே இல்வாழ்க்கையில் மாற்றத்தை உணர முடியும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேசும் முறை

பேசும் முறை

காதலிக்க ஆரம்பித்த புதிதில் அல்லது திருமணமான புதிதில் பேசிய அளவு நாட்கள் செல்ல, செல்ல நீங்கள் இருவரும் பெரிதாய் பேசியிருக்க மாட்டீர்கள். இதை மீட்டெடுக்க வேண்டும். நீங்கள் சிறு சிறு விஷயங்களையும் உங்கள் துணையுடன் பகிர்ந்துக்கொள்ள தொடங்குங்கள். இது நிச்சயம் உங்கள் காதல் வாழ்க்கை சிறக்க உதவும்.

சிறு, சிறு விஷயங்கள்

சிறு, சிறு விஷயங்கள்

காலை எழுந்ததும் முத்தம், விடைபெறும் போது மென்மையாக ஒருமுறை அணைத்துக்கொள்வது, கைக்கோர்த்து நடப்பது, அவர்கள் அணிந்த உடை பற்றி விமர்சனம் செய்வது, அவ்வப்போது கேலிக் கிண்டல் என சிறு சிறு விஷயங்கள் தான் உங்கள் உறவெனும் பாலத்தை வலிமையடைய செய்கிறது. எனவே, இதை தவிர்க்க வேண்டாம்.

பரிமாறுதல்

பரிமாறுதல்

அவர்கள் செய்யும் நல்லவை பற்றிய நீங்கள் எடுத்துக் கூறுவது, நீங்கள் எங்கேனும் கண்ட, கேட்ட நல்ல விஷயங்களை அவரிடம் பகிர்ந்துக்கொள்வது போன்றவை நிச்சயம் உங்கள் காதல் உறவை புதுப்பிக்கும்.

நேரம் ஒதுக்குங்கள்

நேரம் ஒதுக்குங்கள்

இன்றைய கணினி யுகத்தில் யார் ஒருவரும் வெறுமென இருப்பது இல்லை. குறைந்தபட்சம் அவர்களது தொடுத்திரை கைப்பேசி அல்லது முகநூலோடாவது உறவாடிக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே, இவற்றை தவிர்த்து, உங்களுக்கான நபருடன் கொஞ்சம் நேரம் ஒதுக்கி உறவாடுங்கள். இது, அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பாக அவர்கள் கருதுவார்கள்.

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பியுங்கள்

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பியுங்கள்

காதல் உறவு சிதைவடையாமல் இருக்க அதை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் அது என்றும் இளமையாக இருக்கும். மீண்டும் முதலில் இருந்து காதலிப்பது போல ஆரம்பியுங்கள், விளையாட வேண்டும், பழங்கதையை புதியது போல பேச வேண்டும். இவை எல்லாம் இல்லாமல் இருந்தால், உங்கள் காதல் வாழ்க்கை அலுத்து தான் போகும்.

கொஞ்சுதல்

கொஞ்சுதல்

சூழ்நிலைக்கு ஏற்றார் போல ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொள்ளுங்கள். ஆசை வார்த்தைகள் பரிவர்த்தனை ஆகவேண்டும். யார் அதிகம் அன்பை ஊட்ட வேண்டும் என்ற போட்டி நிலவ வேண்டும். இதை நீங்கள் கட்டாயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்ய வேண்டும்.

கூடுதல்

கூடுதல்

இன்றைய வாழ்வியல் முறை ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதை கூட குறைத்துவிட்டது. திருமணமான புதிதில் வார இறுதியில் மட்டுமே கொஞ்சம் மோகம் பிறக்கிறது. பிறகு மேகத்தை போல அது மெல்ல மெல்ல நகர்ந்து காணாமல் போய்விடுகிறது. இதை உடைத்தெறிந்து, கொஞ்சிக் குலவுதல் வேண்டும், கூடுதல் வேண்டும். உடலுறவை தவிர வேறெந்த செயலும் உங்கள் உடலையும், மனதையும் புத்துணர்ச்சி அடைய வைக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Refresh The Love In Your Relationship

There are Some Ways To Refresh The Love In Your Relationship When You’ve Been Together Forever, read here in tamil.
Desktop Bottom Promotion