ஆண்களை பற்றி பெண்கள் தவறாக எண்ணும் 7 விஷயங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

கிசுகிசு பேசுவதும், எந்த விஷயமாக இருந்தாலும் தோண்டி, துருவி ஆராய்வதும், எதையும் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பதும் பெண்களின் இயற்கை பண்புகளில் சிலவன. அதற்கென பெண்கள் மிகவும் மோசமானவர்கள் அல்ல. அவர்களை போல அரவணைப்புடன் ஆண்களை பார்த்துக் கொள்ள யாரால் முடியும்.

ஆணென்றால் இப்படி தான் இருக்க வேண்டும்? பெண்களின் பார்வையில்!!!

ஆனால், ஆண்களை பற்றி தவறாகவும் பெண்கள் நினைப்பதுண்டு. இதற்கு சினிமாவும் கூட ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. சாதாரண நோக்கத்துடன் ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள். அவற்றில் சிலவன பற்றி இனிக் காண்போம்...

இந்த மூணு விஷயத்துல நீங்க சரியா இருந்தா... இல்வாழ்க்கை செழிக்கும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணம் 1

எண்ணம் 1

கேள்வி கேட்டால், சந்தேகப்படுகிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் பெண்களின் பாதுகாப்பு கருதி தான் கேள்வி கேட்கிறார்கள் என அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை.

எண்ணம் 2

எண்ணம் 2

நண்பர்களுடன் வெளியே சென்றால் ஆண்கள் மதுவருந்த தான் செல்கிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் எப்போதும் பெண்கள் முன்பு எளிதாக புலம்பவோ, கலங்கவோ மாட்டார்கள், நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.

எண்ணம் 3

எண்ணம் 3

எதையாவது பற்றி ஆண்கள் ஆழ்ந்து சிந்தனை செய்தால், தட்டிக்கழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கருதுவது. ஆண்கள் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முற்படுவதில்லை என்பதை பெண்கள் பெருமளவில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

எண்ணம் 4

எண்ணம் 4

ஷாப்பிங் செல்ல அழைத்து ஆண்கள் வர மறுத்தால், தங்கள் மீது அன்பு குறைந்துவிட்டது, நாட்டம் இல்லை என்று எண்ணுவது. காலை முதல் மாலை வரை கணினி முன்பு உட்கார்ந்து அலுத்து போய் வருபவனை மாலை வெளியே அழைத்தால் அவன் வர மறுப்பது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால் தான்.

எண்ணம் 5

எண்ணம் 5

அலுவலகத்தில் இருந்து நேர தாமதமாக வந்தால், நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வருகிறார்கள் என்ற எண்ணம். டார்கெட், டேட்லைன் போன்றவை பற்றி பெண்களுக்கு பெரிதாய் தெரிவதில்லை என்பதால் தான் இந்த எண்ணங்கள் எழுகின்றன.

எண்ணம் 6

எண்ணம் 6

வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஆண்கள் தப்புத்தண்டா செய்வார்களோ என்ற எண்ணம் சில பெண்களுக்கு எழுவது இயல்பு. (எப்பவுமேவா அப்படி இருப்பாங்க... என்னமா நீங்க இப்படி பண்றீங்க...)

எண்ணம் 7

எண்ணம் 7

முகநூலில் ஆன்லைனில் இருந்தும் அவர்களுடன் சாட்டிங் செய்யாமல் இருந்தால், வேறு பெண்ணுடன் கடலை வறுத்துக் கொண்டிருப்பார்கள் என்றும் பெண்கள் பரவலாக எண்ணுவதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Women Wrongly Thinks About Men

Do you know about the Things Women Wrongly Thinks About Men? read here in tamil.
Story first published: Wednesday, January 20, 2016, 14:41 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter