For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவை தான் நமது உண்மையான மகிழ்ச்சியா? மறந்ததும், இழந்ததும்!

|

நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்? இது உண்மையான மகிழ்ச்சி தானா? போன்ற கேள்விகளுக்கு நமது பதில் ஆம் என்று தான்இருக்கும். உலகை உள்ளங்கையில் வைத்து கட்டைவிரலால் ஸ்க்ரால் செய்துக் கொண்டிருக்கிறோமே... இது தான் உண்மையான மகிழ்ச்சியா? உலகை மெய் கண்ணில் காணாமல், மாயை சூழ்ந்த 5 இன்ச் தொடுதிரையை தீண்டி உறவாடிக் கொண்டிருப்பது தான் உண்மையான மகிழ்ச்சியா?

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி தான், உறவுகளை சிதைத்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் நிதர்சனம். நம்மில் எத்தனைப் பேரால் இனிமேல் முகநூல் இன்றி வாழ்க்கையை நடத்த முடியும், ஸ்மார்ட் போன்களை துறந்துவிட்டு நமது வேலைகளை பார்க்க முடியும். கண் குறைபாட்டில் தொடங்கி ஆண்மை குறைபாடு வரை ஏற்பட காரணமாக இருக்கும் இவை தான் நம்மை சந்தோசப்படுத்துகின்றனவா...???

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மது இல்லாத கேளிக்கை

மது இல்லாத கேளிக்கை

இன்றைய தலைமுறையினர் சந்தோஷம், வெற்றி என்றால் முதலில் தேடும் விஷயம் மதுவாக தான் இருக்கிறது. அனைவரையும் இப்படி குற்றம் சாட்ட முடியாது. ஆனால், நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஒருசிலரால் அந்த வெற்றியின் களைப்பு மதுவில் தான் முடிகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

செல்போன்கள் இன்றி பேசுவது

செல்போன்கள் இன்றி பேசுவது

முன்பெல்லாம் மரத்தடியிலும், டீ கடையில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவது தான் நண்பர்கள் மத்தியில் பெரும் பொழுதுபோக்கு இடமாக இருந்தது. இன்று அனைவரும் ஒரே அறையில் இருந்தாலும் கூட, முகநூல், வாட்ஸ்-அப் என பிரிந்து தான் இருக்கிறார்கள் பெரும்பாலனா தருணங்களில்.

போதை இல்லாத கனவுகள்

போதை இல்லாத கனவுகள்

பணம், உல்லாசம், செல்வம் என போதை நிறைந்த கனவுகள் தான் இன்று நிறைய இருக்கின்றன. கனவுகளை பின் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறலாம், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக கனவுவை பின் தொடரலாம். ஆனால், நல்ல வாழ்க்கை வேண்டும் என்பதற்காக நமது கனவை இழந்து யாரோ ஒருவர் வெற்றிபெற்ற கனவை நாமும் பின்தொடர்வது எந்த விதத்தில் நியாயம்?

செல்ஃபீ இல்லாத சிரிப்பு

செல்ஃபீ இல்லாத சிரிப்பு

யாரும் சிரிப்பதே இல்லை என்று குற்றம் கூறவில்லை. ஆனால், நாம் நினைவுகளாக சேமிக்கும் புகைப்படங்களில் அமைந்திருக்கும் செல்ஃபீ புன்னகைகள் 99% போலியானவை தான் என்பது யாராலும் மறுக்க முடியாது. வெறும் போட்டோ போஸ்காக தான் இதழில் புன்முறுவல் வருகிறது. இந்த கட்டாய செல்ஃபிக்கள் இல்லாது மகிழ்ந்து பேசிய அந்த தருணங்களே உண்மையான மகிழ்ச்சி.

நிபந்தனைகள் இல்லாத காதல்

நிபந்தனைகள் இல்லாத காதல்

நீ இப்படி தான் இருக்க வேண்டும், இவ்வாறு தான் நடந்துக் கொள்ள வேண்டும். அங்கு செல்லக் கூடாது, முகநூலில் முகப்பு படம் வைக்கக் கூடாது. அந்த லைக் போட்டவன் யார்? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு மத்தியில் காதல் உணர்வெனும் உயிரை இழந்து வெறும் பொம்மையாக தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things This Generation Have To Learn About True Happiness

Things This Generation Have To Learn About True Happiness, take a look.
Desktop Bottom Promotion