ஆண் கருத்தடுப்பு சிகிச்சை மேற்கொண்ட பிறகு அதிசயிக்க வைக்கும் மாற்றம் - ஆய்வு தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவில் ஈடுபடுவது என்பது இயற்கையானது. ஆனால், குறிப்பிட்ட வயதுக்கு பிறகு கருத்தரிக்க யாரும் விரும்புவதில்லை. மேலும் கருத்தரித்துவிட்டாலும் கருக்கலைப்பு செய்ய மருத்துவரை அணுகவும் தயங்குவார்கள். இதற்கு தீர்வாக அனைவரும் நாடுவது கருத்தடை மாத்திரை மற்றும் ஆணுறை தான்.

சில சமயங்களில் இவையும் பயனற்று போக வாய்ப்புள்ளதால் தம்பதிகள் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள முற்படுவது உண்டு. இதிலும், ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்துக் கொள்வது என்பது தகாத ஒன்று, இழுக்கு என்பது போல பார்க்கும் வழக்கம் நமது ஊர்களில் இருக்கிறது.

ஆனால், சமீபத்தில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இதனால் அதிசயிக்க வைக்கும் மாற்றம் ஆண்கள் மத்தியில் ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறவில் ஈடுபடும் சதவீதம்

உறவில் ஈடுபடும் சதவீதம்

ஆண் கருத்தடுப்பு சிகிச்சைக்கு பிறகு உறவில் ஈடுபடும் சதவீதம் அதிகரிக்கிறதாம். சரசாரியாக 4.9% -ஆக இருக்கும் சதவீதம் 5.9% க்கு உயர்கிறது என ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆறாயிரம் ஆண்கள்

ஆறாயிரம் ஆண்கள்

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் ஆண் கருத்தடை சிகிச்சைக்கு பிறகு உறவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆறாயிரம் ஆண்கள் இதில் கலந்துக் கொண்டு தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர்.

கவலையில்லை

கவலையில்லை

ஆண் கருத்தடை சிகிச்சை மேற்கொண்ட பிறகு கருத்தடை உபகரணங்கள் பற்றிய கவலை இல்லை என்றும். உறவில் துணிந்து ஈடுப்பட முடிகிறது என்றும் இந்த ஆய்வில் கலந்துக்கொண்ட ஆண்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்களின் அச்சம்

ஆண்களின் அச்சம்

விதைப்பையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் உடலுறவில் ஈடுபடும் போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் ஆண்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் கருத்தடை சிகிச்சைக்கு பிறகு கருத்தரிப்பு பற்றிய அச்சம் இவர்களுக்கு துளியும் இல்லை என்பதால் அச்சமின்றி உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஆய்வு தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வாரம்

இரண்டு வாரம்

தற்போதைய நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக ஆண் கருத்தடுப்பு சிகிச்சை 20 நிமிடங்களில் முடிக்கப்படுகின்றன. சிகிச்சை மேற்கொண்ட இரண்டு வாரங்கள் உறவில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். அதன் பிறகு எப்போதும் போல உறவில் ஈடுபடலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

விந்தணு எங்கே செல்கிறது

விந்தணு எங்கே செல்கிறது

விதைப்பையில் இருந்து சிறுநீர் குழாய் வழியாக தான் விந்தணு வெளிப்படும். இந்த இடைப்பட்ட பாதையை தான் சிகிச்சை மூலம் துண்டிப்பு செய்கிறார்கள். இந்த கருத்தடுப்பு சிகிச்சைக்கு பிறகு விந்தணு உடலால் உறிஞ்சப்பட்டுவிடுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை

ஆண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை

ஆண் கருத்தடை சிகிச்சையின் மூலமாக உச்சம் அடைவதிலோ, விறைப்பு தன்மையிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. உடலுறவில் ஈடுபடும் போது ஏற்படும் இன்பத்திலும் குறைபாடு இருக்காது என இந்த ஆய்வை நடத்திய தலைமை ஆய்வாளர் மருத்துவர்.குவோ கூறியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Surprising Side Effect of a Vasectomy

The Most Surprising Side Effect of a Vasectomy. A new research reveals that this procedure may come with an unexpected perk.
Subscribe Newsletter