நீங்கள் தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 7 அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

வயது, அழகு, வடிவம், மற்றவர் கருத்து, உணர்வுகளில் உண்டாகும் குழப்பம் என சில சமயங்களில் நம்மளை நாமே ஏமாற்றிக் கொண்டு தவறான உறவில் இருப்போம். சிலர் இப்படிப்பட்ட உறவில் நாம் தவறு செய்கிறோம் என தெரிந்தும், மதில் மேல் பூனையை போல ஏதோ சாக்கு சொல்லி உறவை கடத்தி செல்கின்றனர்.

பெண்களின் படுக்கையறையில் இந்த 6 விஷயங்கள் உங்களுக்கு பிடிக்குமா?

உண்மையில் இப்படி முழுமையாக புரியாத, உணராத உறவில் நிலைக்க விரும்புவது, உங்களுக்கு நீங்களே வெட்டிக் கொள்ளும் குழி. ஆம், காதல் உறவு, இல்லற பந்தம் என்பது வாழ்க்கையில் நீங்கள் உயர, அடுத்த நிலைக்கு செல்ல உங்களை ஊக்குவிக்கும் கருவியாகும். இதை தவறாக தெரிந்தெடுப்பது உங்களுக்கு ஓர் பெரும் தலைவலியாக தான் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அறிகுறி #1

அறிகுறி #1

மற்ற உறவுகள்!

அவரால், உங்களது மற்ற உறவுகளும் பாதிக்கப்படும். நட்பு, குடும்ப உறவுகளோடு கூட சரியான நெருக்கம் பாராட்ட முடியாமல் தவிப்பீர்கள்!

 அறிகுறி #2

அறிகுறி #2

குற்றம் சாட்டுவது!

நீங்கள் செய்யும் தவறுகளுக்கு கூட அவரை குற்றம் கூறுவீர்கள். அவரால் தான் நீங்கள் சரியாக செயல்பட முடியாமல் போனது என எண்ணுவீர்கள்.

 அறிகுறி #3

அறிகுறி #3

தன்னம்பிக்கை!

உங்கள் தன்னம்பிக்கை குறையும். நீங்கள் எதற்கும் லாயக்கு இல்லை என உங்களை குறைக்கூறிக் கொண்டே இருப்பர்கள். ஊக்கமளிக்கமாட்டார்கள்.

 அறிகுறி #4

அறிகுறி #4

எல்லைகள் வகுத்தல்!

இந்த எல்லையை தாண்டி உறவில் ஈடுபட கூடாது, நெருக்கம் காட்ட வேண்டாம் என்பதே நீங்கள் உறவில் பொய்யாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். இருவரும் முழுமையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால், காதல் உறவில் இந்த எல்லையே இருக்காது.

 அறிகுறி #5

அறிகுறி #5

நிலை!

அவருக்காக நீங்கள் உங்களது நிலையை குறைத்துக் கொள்வது. காதலில் ஒருவரை ஒருவர் நிலை உயர தான் உதவ வேண்டுமே தவிர, நிலையை சீர்குலைய செய்யக் கூடாது.

 அறிகுறி #6

அறிகுறி #6

கோபம்!

அவர் உங்களை சுற்றி இருந்தால், உங்களுக்கு கோபம் தலைக்கு ஏறும். ஏன், எதற்கு என தெரியாமல், தேவையில்லாத சண்டைகள் எழும்.

 அறிகுறி #7

அறிகுறி #7

நேரம்!

அவருடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்றால் வேண்டா வெறுப்பாக செல்வீர்கள். எப்படா பேசி முடித்துவிட்டு செல்வோம் என்ற நினைப்பு அடிக்கடி வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Signs That You Are Dealing With A Toxic Person In Your Life

These Seven Signs Shows That You Are Dealing With A Toxic Person In Your Life.
Subscribe Newsletter