Latest Updates
-
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
ஒரு பெண்ணை டேட் செய்யும் முன்னர் நீங்கள் அவரிடம் நிச்சயம் கேட்க வேண்டிய 7 கேள்விகள்!
ஒருவரை டேட் செய்யும் முன்னர் அவரிடம் நீங்கள் கேட்க வேண்டிய 7 கேள்விகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
ஏறத்தாழ வேலை கிடைப்பதற்கு முன்னர் இன்டர்ன்ஷிப் போவது போல தான் காதலுக்கு முன்னர் டேட்டிங்கும். அதே பெண்ணுடன் காதலில் இணையவும் வாய்ப்புகள் உண்டு. அல்லது டேட்டிங் உடன் நின்று, வேறு பெண்ணுடன் காதலில் இணையவும் வாய்ப்புகள் அமையலாம்.
அப்படி நீங்கள் முதல் முறையாக ஒரு பெண்ணை டேட் செய்வதாக இருந்தால் இந்த 7 கேள்விகளை முன்கூட்டியே கேட்க வேண்டியது அவசியம்...

கடைசியாக பார்த்த படம் என்ன?
இதற்கு பதில் தெரிந்துக் கொண்டால், அவருக்கு பிடிக்காத படத்திற்கு அழைத்து சென்று மொக்கை வாங்காமல் இருக்கலாம்.

நீங்க என்ன வேலை பண்றீங்க?
முதல் சந்திப்பிலேயே வேலை பற்றி பேசுவது தவறு தான். ஆனால், என்ன வேலை என்று தெரிந்துக் கொண்டால். நாம் சற்று சூதானமாக பதில் அளிக்க உதவியாக இருக்கும். அல்லது அவருக்கே ஏதேனும் குறிப்புகள் கூறி அசத்தலாம்.

உங்க நேட்டிவ் என்ன?
அவர் பிறந்த ஊர் பற்றி கேட்டு அறிந்து கொள்வது. அவரை பற்றி அறிந்துக் கொள்ள, புதிய விஷயங்கள் பேச சௌகரியமாக இருக்கும்.

பிடித்தவை?
அவருக்கு பிடித்தவை பற்றி கேட்பதால், அவருக்கு பிடிக்காதவை பற்றியும் மறைமுகமாக அறிந்துக் கொள்ள முடியும். இதனால் நீங்கள் அவரை மூட்-அவுட் செய்யாமல் இருக்க முடியும்.

விடுமுறை கொண்டாட்டம்?
விடுமுறை நாட்களில் என்ன செய்வீர்கள், எங்கு செல்வீர்கள் என கேட்டறிந்துக் கொள்வதால், நீங்கள் அடுத்த டேட்டிங் செல்ல சிறந்த இடத்தை நீங்களே அவருக்கு பிடித்த மாதிரி தேர்வு செய்து அசத்தலாம்.

திறமைகள்?
அவரது திறமைகள் பற்றி கேட்டறிந்து கொள்வதால், அதை பற்றி சந்தேகங்கள் கேட்பது போல கேள்விகள் கேட்டு அவர் பதில் கூறும் போது பாராட்டி அவரை வெட்கப்பட வைக்கலாம்.

முதல் முத்தம்?
இது ஒரு 50:50 கேள்வி. நீங்கள் கேட்கும் விதத்தில் தான் இருக்கிறது. ஏடாகூடமான தோரணையில் கேட்டால் டேட்டிங்கே கேன்சல் ஆகிவிடும்.



Click it and Unblock the Notifications
