இந்த 6 செயல்களை வைத்து, உங்களை ஒருவர் உண்மையாக காதலிக்கிறார் என அறியலாம்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று காதல் செட் ஆகாத பலரும் பாடும் வரிகள், "உண்மை காதலே இங்க இல்ல சித்தப்பு..." தான். இந்த வரிகளுக்கு ஏற்ப பல இடங்களில் உண்மையான காதலை பார்ப்பது கடினமாக தான் இருக்கிறது. அந்தளவிற்கு கலாச்சார மாற்றங்கள், உறவுகளின் மதிப்பு தெரியாமை அதிகரித்துள்ளது.

அதற்கென உண்மையாக காதலிக்கும் நபர்களே இல்லை என்றும் நாம் கூறிவிட முடியாது. பெரும்பாலும், ஆண் / பெண் இருவரும் தங்களை உண்மையாக விரும்பும் நபர்களை நண்பராகவும், ஆலோசகராகவும் வைத்துக் கொள்கின்றனர். அவர்களது உண்மை காதலி உணராமல், அறியாமல் விட்டுவிடுகின்றனர்.

சிலர், உங்கள் முன், உங்களுக்காக இந்த செயல்களை தொடர்ந்து செய்கிறார் என்றால், அவர் உங்களை உண்மையாக நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறியலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல் #1

செயல் #1

உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செல்லும் இடம் அறிந்து, அங்கு திடீரென சந்தித்தது போல, முகம் முன் தோன்றி, ஆச்சரியமூட்டுவார்கள்.

செயல் #2

செயல் #2

அவர்களது வாழ்வில் நடந்த முக்கியமான விஷயங்களை, வெறுமென செய்தியாக அனுப்பாமல், கால் செய்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வார்கள்.

செயல் #3

செயல் #3

எங்கே வெளிய செல்ல திட்டமிடும் போதும் உங்களையும் உடன் அழைத்து செல்ல விரும்புவார். அதற்காக தன்னால் முடிந்த அனைத்து வகையிலும் முயற்சிப்பார்.

செயல் #4

செயல் #4

நீங்கள் கவலையாக இருக்கும் தருணங்களில் உங்களை ஆசுவாசப் படுத்த தங்கள் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு, உங்களோடு நேரம் செலவழிப்பார்கள்.

செயல் #5

செயல் #5

பலரிடமும் உங்களை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். உங்கள் மீது வைத்துள்ள காதலை பற்றி விவரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் யோசிக்கும் ஒவ்வொரு விஷயங்களிலும், உங்களுக்கான முக்கியத்துவம் இருக்கும்.

செயல் #6

செயல் #6

உங்களுக்காக எதையும் செய்வார்கள். ஓர் உறவின் மதிப்பு என்ன என்பதை உங்களுக்கு புரிய வைப்பார்கள். கசப்பான சம்பவங்களை நீங்கள் தாண்டி உறுதுணையாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

If Someone Really Loves You, They'll Do These Six Things

If Someone Really Loves You, They'll Do These Six Things — A lot,
Story first published: Thursday, September 8, 2016, 17:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter