உடல்பருமனால் தாம்பத்தியத்தில் ஏற்படும் பாதிப்புகள்...

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் வெறுமென உடல் எடை தாம்பத்தியத்தை பாதிக்கும் என்று தான் கூறுவார்கள். ஆனால், எப்படி பாதிக்கும், எந்த வகையான தாக்கங்களை அது உருவாக்குகிறது என யாருக்கும் தெரியாது.

நேரடியான தாக்கங்கள் என்பது மிகவும் குறைவு. ஆனால், மறைமுகமாக தாக்கங்கள் தான் இதில் அதிகம் இருக்கிறது. தன்னம்பிக்கை இழப்பது, சந்தேகம் வலுப்பது, தவறான எண்ணங்கள் வளர்ப்பது போன்றவையின் காரணமாக தான் தாம்பத்தியம் கெடுகிறது.

ஆனால், இவை ஏற்பட உடல் எடை ஒரு கருவியாக திகழ்கிறது. எனவே அந்த கருவியை நீங்கள் சரி செய்ய வேண்டும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தன்னம்பிக்கை இழத்தல்

தன்னம்பிக்கை இழத்தல்

உடல் எடை உங்கள் தன்னம்பிக்கையை இழக்க செய்யும் என உங்களுக்கு தெரியுமா? ஆம், ஆண், பெண் என இருவர் இடத்திலும் இது தன்னம்பிக்கை இழக்க வைக்கும் கருவியாக திகழ்கிறது.

தன்னம்பிக்கை இழத்தல்

தன்னம்பிக்கை இழத்தல்

தாம்பத்தியத்தில் ஒருவர் சிறந்து செயல்பட முடியவில்லை எனில், தனது மற்ற வேலைகளிலும் கவனம் சிதறவிட ஆரம்பிக்கிறார். இதன் காரணமாக தன்னம்பிக்கை இழக்க நேரிடுகிறது.

தன்னம்பிக்கை இழத்தல்

தன்னம்பிக்கை இழத்தல்

இந்த தன்னம்பிக்கை இழத்தல் ஒருக்கட்டதில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை மட்டுமின்றி, இல்லறமும் சீர்குலைந்து போக காரணமாகிறது.

உடற்சக்தியை குறைக்கும்

உடற்சக்தியை குறைக்கும்

கண்டிப்பாக தாம்பத்தியத்தில் ஈடுபடும் முறையிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தான் இருப்பார்கள். உடல் எடை அதிகமாக இருப்பதால், சிறந்து அல்லது நீடித்து செயல்பட முடியாமல் போய்விடுகிறது.

உடற்சக்தியை குறைக்கும்

உடற்சக்தியை குறைக்கும்

மேலும் சென்ற மாதம் வெளிவந்த ஆய்வில் உடல் பருமன் விந்தணு திறனையும் பாதிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் முக்கிய மரபணுக்கள் திறன் குறைந்து போய்விடும் அபாயம் இருக்கின்றன.

தாக்கம்

தாக்கம்

தன்னம்பிக்கை இழத்தல் மற்றும் திறன்பாடு குறைதல் போன்றவை நிச்சயம் உங்கள் தாம்பத்திய உறவில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.

தாக்கம்

தாக்கம்

பல நிலைகளில் உடலுறவு கொள்வது தான் சிறந்தது அல்ல. ஆனால், நீங்கள் முழுமையாக கூட அனுபவிக்க முடியாத அளவு உங்கள் உடல் எடை இருக்கிறது எனில், கட்டாயம் நீங்கள் உடல் எடையில் ஓர் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது.

எண்ணங்களை பாழாக்கும்

எண்ணங்களை பாழாக்கும்

தாம்பத்தியம் எப்படி எண்ணங்களை பாழாக்கும் என சிலர் எண்ணலாம். கண்டிப்பாக இது நடக்கும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன இருக்கின்றன.

எண்ணங்களை பாழாக்கும்

எண்ணங்களை பாழாக்கும்

ஒருவரால் சரியாக தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை எனில், தன் துணை தன்னை வெறுத்துவிடுவாரோ, அல்லது வேறு துணையை தேடுவாரோ என்ற அச்சம் எற்படும். இது மனித உளவியலின் இயல்பு. இது தொடரும் பட்சத்தில் உறவில் விரிசல் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறந்து விளங்க

சிறந்து விளங்க

உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக மால்களில் வாங்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்ட சோடா பானங்கள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

சிறந்து விளங்க

சிறந்து விளங்க

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்யுங்கள் அது தான் உங்கள் உடல் வலுமையை சமநிலையில் வைக்க உதவும்.

சிறந்து விளங்க

சிறந்து விளங்க

நீங்களே கூட கண்டிருக்கலாம், குண்டாக இருந்த வரை காமெடியன் போல காணப்பட்டவர், உடல் எடை குறைத்தவுடன் மிகவும் கம்பீரமாக, தைரியமாக தென்படுவார்கள். எனவே, உடல் எடையில் கவனம் செலுத்த துவங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Your Weight Affects Your Intercourse Life

In so many ways your weight can affect your love life. So you should control your body weight to make your intercourse life feel good.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter