உடலுறவு வாழ்க்கை குறித்து அனைவரும் கேட்க தயங்கும் கேள்விகள்!!

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு சார்ந்த விஷயங்களில் தெரிந்தவர்களை விட, தெரிந்தது போல நடிப்பவர்கள் தான் அதிகம். எங்கே இது சார்ந்த சந்தேகங்கள் கேட்டால், தன்னை ஒன்றும் தெரியாதவன் போல கருதிவிடுவார்களோ என்ற எண்ணத்திலேயே கடைசி வரை ஒருசில விஷயங்கள் குறித்து நம்மில் பலர் கேள்வி எழுப்புவதே இல்லை.

திருமணத்திற்கு முன்பு உடலுறவை பற்றி கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய கேள்விகள்!!!

இவ்வாறு நீங்கள் கேள்வி கேட்க தவறும் சில விஷயங்களினால் உங்கள் உடலுறவு வாழ்க்கையே கூட பாதிக்கப்படலாம். நடுத்தெருவில் அசிங்கமாக திட்டிக் கொள்ளும் பழக்கத்தை கூட கெத்தாக நினைக்கும் பலர், இதை பற்றி மறைமுகமாக கூட கேட்டு தெரிந்துக் கொள்வதில்லை. அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய உடலுறவு வாழ்க்கை குறித்த கேள்விகள் பற்றி இனிக் காண்போம்....

உடலுறவு பற்றி தம்பதிகள் கேட்க தயங்கும் கேள்விகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயாகரா எப்படி வேலை செய்கிறது?

வயாகரா எப்படி வேலை செய்கிறது?

வயாகரா இரத்த நாளங்கள் இலுகுவாக செய்கிறது, இதனால் இரத்த ஓட்டம் சீராகும். ஆண்கள் விறைப்படைய இது தான் முதல் காரணம். இரத்த நாளங்கள் இலகுவாக ஆவதினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இப்படி தான் உடலுறவிற்கு வயாகரா பயனளிக்கிறது.

டெஸ்டோஸ்டிரோன் என்ன செய்கின்றன?

டெஸ்டோஸ்டிரோன் என்ன செய்கின்றன?

உடலின் பல இடங்களில் எலும்புகளின் வலிமை, தசை வளர்ச்சி, பாலியல் ஈடுப்பாடு / உணர்ச்சி மற்றும் செயல்பாடு போன்றவற்றை அதிகப்படுத்த செய்கிறது டெஸ்டோஸ்டிரோன். உடற்பயிற்சி உங்களது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்கிறது. மேலும், உடற்பயிற்சி செய்து தசையை வளர்த்து, கொழுப்பை கரைத்தால் டெஸ்டோஸ்டிரோன் அளவு தானாக உயரும்.

உடலுறவு நல்ல உணர்வை தருவது ஏன்?

உடலுறவு நல்ல உணர்வை தருவது ஏன்?

அதிக செறிவுள்ள நரம்புகள் ஆணுறுப்பு / பெண்ணுறுப்பு இடத்தில் தான் முடிவடைகிறது. இதனால் தான் அதிக உச்சம் காணப்படுகிறது. டோபமைன் தூண்டிவிடப்படுவதால் மூளையில் இருந்து ஓர் இனிமையான உணர்வு பிறக்கிறது.

மேக வெட்டை மற்றும் கிளமீடியா எப்படி ஏற்படுகிறது?

மேக வெட்டை மற்றும் கிளமீடியா எப்படி ஏற்படுகிறது?

மேக வெட்டை மற்றும் கிளமீடியா (gonorrhea and chlamydia) ஆகிய இரண்டுமே உடலுறவு மூலமாக ஏற்படும் நோய் தான். நேரடியாக பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவதால் தான் இந்த இரண்டு நோய்களும் அதிகம் ஏற்படுகிறது. ஆன்டி-பயாடிக்ஸ் மூலமாக பிறப்புறுப்பு பகுதியில் தொற்றும் இந்த நோயை குணப்படுத்த முடியும். மருத்துவம் செய்ய தவறினால் இது இனப்பெருக்க குறைபாட்டை ஆண், பெண் இருவர் மத்தியிலும் ஏற்பட காரணமாக அமையும்.

உடலுறவின் போது வலி ஏற்படுவது ஏன்?

உடலுறவின் போது வலி ஏற்படுவது ஏன்?

பெண்ணுறுப்பின் ஆழத்தை விட ஆணுறுப்பு தடிமனும், நீளமும் அதிகமாக இருப்பதும் தான் முக்கிய காரணம். இதன் அளவு வேறுபாடு பெரியளவில் அதிகரிக்கும் போது ஆரம்ப நாட்களில் உடலுறவின் போது வலி ஏற்படலாம். சில சமயங்களில் பெண்ணுறுப்பில் தொற்று / புண் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கூட உடலுறவின் போது வலி ஏற்படலாம். தொடர்ந்து வலி இருந்து வந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Intercourse Related Questions You Must Know

You must know the answers for these five intercourse related questions, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter