விடுமுறை தினங்களில் மனைவியை ஆச்சரியமூட்ட ரொமாண்டிக்கான வழிமுறைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் 99% பேர் வாரத்தில் ஐந்து நாட்கள் உழைப்பதே, வார இறுதியில் இரண்டு நாட்கள் நிம்மதியாக வாழ தான். இந்த சூழ்நிலை உங்கள் வாழ்க்கையிலும் இருக்கிறது எனில், நீங்கள் உங்களுக்கு பிடிக்காத ஏதோ ஒரு வாழ்க்கையை பணம் சம்பாதிக்க மட்டுமே வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.

வார இறுதியில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். அதிலும் திருமணம் ஆனவர்களுக்கு வார இறுதி தான் சொர்கமே. ஆயினும் கூட இந்த இரண்டு நாட்கள் இரண்டு வினாடியை போல கடந்துவிட்டது என புலம்பும் உள்ளங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்கள் மனைவியுடன் விடுமுறை நாட்களை ரொமாண்டிக்காக கழிக்க இதோ சில வழிமுறைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாலை நேரம் வாக்கிங்

மாலை நேரம் வாக்கிங்

கண்டிப்பாக வார வேலை நாட்களில் அந்த களைப்பில் மாலை நேரத்தில் வெளியே செல்ல முடியாது. பெரும்பாலும் உடல் ஒத்துழைக்காது. ஆனால், வார இறுதி விடுமுறை நாட்களில் உங்கள் மனைவியுடன் கைக்கோர்த்து உங்கள் வீட்டு பகுதியில் சுற்றியிருக்கும் தெருக்கள் அல்லது பார்க்கில் சிறிது நேரம் வாக்கிங் சென்று வந்தால் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் இனிமையாக இருக்கும்.

பிடித்த இடங்களுக்கு கூட்டி செல்லுதல்

பிடித்த இடங்களுக்கு கூட்டி செல்லுதல்

பெண்களுக்கு பெரும்பாலும் கோவில் அல்லது ஷாப்பிங் தான் பிடித்தமான இடமாக இருக்கும். நீங்கள் வேலையின்றி இருக்கும் விடுமுறை நேரத்தில் அவர்களை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்வது பெண்களின் மனதிற்கு மட்டுமின்றி, உங்கள் உறவுக்கும் நிறைவு தரும்.

உறவினர் வீடு

உறவினர் வீடு

உறவினர் / நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வருவது உறவை வலுப்படுத்த உதவும். மேலும் இந்த நினைவுகள் உங்கள் இருவரின் உறவில் மேலும் இறுக்கத்தை ஏற்படுத்தும்.

ஒன்றாக சமையல் / வீட்டு வேலைகள்

ஒன்றாக சமையல் / வீட்டு வேலைகள்

விடுமுறை நாட்களை உங்கள் துணையுடன் ஜமாய்க்க வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, அவரது வேலைக்கு ஒத்தாசையாக இருப்பது. இது உங்கள் நாளை மட்டுமல்ல, இரவையும் இனிமையாக்கும்.

கால்களை பிடித்துவிடுவது

கால்களை பிடித்துவிடுவது

என்றாவது நீங்கள் உங்கள் மனைவி அசதியாக வந்து படுக்கும் போது அவருக்கு கால்கை பிடித்துவிட்டதுண்டா? இல்லை என்றால் இந்த வார இறுதியில் செய்து பாருங்கள். ஏன் இன்றே கூட செய்யலாம். தன் கணவன் தனக்காக செய்யும் எந்த வேலையும், செயலும் பெண்களின் மனதில் காதலை பொங்க வைக்கும்.

ஷோ டைம்

ஷோ டைம்

சினிமா, நாடகம், மேஜிக் போன்ற ஏதேனும் கலை நிகழ்ச்சி அல்லது திரையரங்குகளுக்கு அழைத்து செல்லுங்கள். ஏனெனில், தன் கணவன் தன்னை வெளியே இதுப் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வது அவர்கள் ஊர் முழுக்கு கூறி சந்தோசமடையும் செயல் ஆகும்.

நினைவுகளை மீட்டெடுத்தல்

நினைவுகளை மீட்டெடுத்தல்

பைசா செலவில்லாமால் உங்கள் விடுமுறையை மனைவியுடன் ரொமாண்டிக்காக செலவழிக்க வேண்டுமெனில், உங்கள் வாழ்க்கையில் நடந்த இனிமையான, வேடிக்கையான தருணங்களை அசைப்போட துவங்குங்கள். இது நிச்சயம் நல்ல பயனளிக்கும், பொழுது போவதும் தெரியாது, விடிந்ததும் தெரியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try These Romantic Ways To Surprise Your Girl In Holidays

Some Romantic Ways To Surprise Your Girl In Holidays, read here in tamil.
Subscribe Newsletter