For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த 5 குறுஞ்செய்தியை உங்கள் மனைவிக்கு அனுப்பினால் உளவியல் மாற்றம் ஏற்படும்!

|

கணவன், மனைவி உறவு என்பது தோழமை, தாய்மை, தியாகம், ஆசான், குழந்தைத்தனமான வேடிக்கை என அனைத்தும் கலந்த ஓர் அஞ்சறைப் பெட்டி. ஏறத்தாழ இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் இல்லறம் எனும் சமையலில் ருசி குறைந்துவிடும். அப்படி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

இந்த கேள்விக்கான விடையை தான் அனைவரும் தேடுகிறார்கள். ஆனால், இந்த விடை மிகவும் எளிதானது, அது அவரவர் கைகளில் தான் இருக்கிறது என பலருக்கும் தெரிவதில்லை. உங்கள் மனைவியை உங்கள் பாதியாக நினைத்து, அனைத்தையும் சரி சமமாக முன்னுரிமை கொடுத்து பகிர்ந்துக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டாலே போதும்.

உங்கள் நாளில் நடக்கும் நிகழ்வுகள், நடந்த நிகழ்வுகள், நடக்கப் போகும் நிகழ்வுகள் என அனைத்திலும் உங்கள் மனைவியின் பங்கு அதற்கான பாராட்டு இது தான் ஓர் உறவின் சிறப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதை சரியாக கடைப்பிடித்தாலே போதும் உங்கள் இல்லறம் என்றுமே கமகமக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாராட்டு

பாராட்டு

உங்கள் மனைவிக்கு தேவையான பாராட்டு என்பது, அவர் உங்களுக்காக சமைத்த உணவு நன்றாக இருக்கிறது என்பது போன்றவை தான், மிகவும் சாதாரணமானது. உங்களுக்காக அவர்கள் மனம் மகிழ்ந்து செய்யும் வேலைகளுக்கு, நீங்களும் மனம் மகிழ்ந்து பாராட்டும் போது இல்லறம் மென்மேலும் சிறக்கும்.

நன்றி கூறுதல்

நன்றி கூறுதல்

உறவுகளுக்கு மத்தியில் நன்றி தேவையற்றது என்பார்கள். ஆனால், உண்மையில், நன்றி தான் ஓர் மனிதனை உயர்த்தும். ஆம், இது நட்பு, அலுவலக தோழர்கள், உறவினர்கள் என அனைவர் மத்தியிலும் உங்கள் நற்மதிப்பை உயர்த்தும். மனைவி உங்களுக்கு உதவும் ஒவ்வொரு தருணத்திலும் நன்றி கூறி பாருங்கள் உறவில் பிணைப்பு மேலும் இறுக்கமடையும்.

நினைவுகள் நியாபகப்படுத்துதல்

நினைவுகள் நியாபகப்படுத்துதல்

வேலைக்கு மத்தியில், நீங்கள் ஓய்வு நேரத்தில், ஏதேனும் ஓர் நினைவுகளை நியாபகப்படுத்தி ஓர் குறுஞ்செய்தியை தட்டிவிட்டு பாருங்கள், அவர்களது முகம் நாள் முழுக்க மலர்ந்தே இருக்கும். மாலை உங்களை தேடி அவர்களது கால்கள் தரையிலேயே மிதந்தப்படி இருக்கும்.

கேள்வி கேட்பது

கேள்வி கேட்பது

நீங்கள் எந்த ஒரு விஷயம் செய்யும் போதும் நீங்களாக தனித்து முடிவெடுக்காமல், இது சரியா இருக்குமா, இல்ல வேற எதாவது பார்க்கலாமா... இன்னிக்கி எங்க போகலாம்.. என அவர்களிடமும் கேள்வி கேட்டு முடிவெடுக்கும் போது உறவின் மதிப்பு கூடும், மனைவிக்கு உங்கள் மீதான காதலும் சேர்ந்து கூடும்.

தருணங்களை பகிர்ந்துக் கொள்வது

தருணங்களை பகிர்ந்துக் கொள்வது

நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது, அலுவலகத்தில் பணிபுரியும் போது நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை உடனே உங்கள் மனைவியுடன் குறுஞ்செய்தி மூலமாக அல்லது கால் செய்து பகிர்ந்துக் கொள்ளுங்கள். இது, நீங்கள் அவருக்கு அளிக்கும் முன்னுரிமையை எடுத்துக் காட்டும். மனைவி எப்போதும் தன் கணவனிடம் எதிர்பார்ப்பது இந்த முன்னுரிமையை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Send These Five Texts To Your Partner Everyday To Make Her Feel Happy

Send These Five Texts To Your Partner Everyday To Make Her Feel Happy. Researches says, this is one kind of Psychological Effect.
Story first published: Monday, December 14, 2015, 13:25 [IST]
Desktop Bottom Promotion