சர்வதேச ஆண்கள் தினம்: ஆண்களின்றி பெண்கள் இல்லை, பெருமைப்பட்டுக்குங்க!!

Posted By:
Subscribe to Boldsky

மகளிர் தினம், உலக அன்னையர் தினம், என இதுவரை பெரும்பாலும் நாம் பெண்கள் சார்ந்த தினங்களை தான் கொண்டாடி வருகிறோம். அதற்கு அடுத்து பார்த்தல், ரக்ஷாபந்தன் என்று சொல்லி ராக்கி கட்டி நம்மை கண்கலங்க வைத்து பெண்கள் ஓர் தினத்தை வருடாவருடம் தவறாமல் கொண்டாடி வருகிறார்கள். இப்படியே போனா, ஆண்கள் எங்கு தான் செல்வது என்று குமுறுபவரா நீங்கள்?

கவலையே வேண்டாம், நமக்கும் இருக்கிறது ஓர் நாள் சர்வதேச ஆண்கள் தினம். ஒவ்வோரு வருடமும் நவம்பர் மாதம் 19 நாள் சர்வதேச ஆண்கள் தினம் என்பதை மறக்க வேண்டாம், இந்த நாளை கொண்டாடாமல் இருந்திட வேண்டாம். என்ன தான் பெண்கள் நம்மை வார்த்தைகளால் கொட்டி, திட்டித் தீர்த்தாலும், நாம் இன்றி அவர்களால் மட்டும் இருக்க முடியுமா என்ன?

ஆண்கள் இன்றி பெண்கள் இல்லை என சில சூழல் இருக்கின்றன. அவற்றை பெண்களும் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருத்தரிப்பு

கருத்தரிப்பு

காலம், காலமாக நாங்கள் இன்றி நீங்கள் இல்லை என்பதற்கு முதலாக எடுத்து வைக்கப்படும் செயல், கருத்தரிப்பு தான். அட, என்ன தான் டெக்னாலஜி வளர்ந்தாலும் இங்க நாம தானே கில்லாடி!!!

காவலன்

காவலன்

என்ன தான் தோழி, காதலி, மனைவி, அம்மா என அனைவரையும் கிண்டல், கேலி செய்து விளையாடினாலும். அவர்களுக்கு பாதுகாவலனாக இருந்து எப்போதும் காப்பது ஆண் தான். இதை கொஞ்சம் காலரை தூக்கிவிட்டபடி சொல்லிக் கொள்ளலாம்.

மகிழ்விப்பது

மகிழ்விப்பது

உடல் ரீதியாக இருந்தாலும் சரி, மனம் ரீதியாக இருந்தாலும் சரி, ஓர் பெண்ணை முழுவதுமாக மகிழ்விப்பது ஆண் தான். இதை பெண்களால் கூட மறுக்க முடியாது. காதலனாக மட்டுமின்றி, தோழனாக கூட ஒரு பெண்ணின் முழு புன்னகைக்கு பின் மறைந்திருப்பவன் ஆண் தான்.

சிறந்த அடிமை

சிறந்த அடிமை

பெண்கள் ஷாப்பிங் செல்லும் போது கூலி (பர்ஸ்) கொடுத்து கூலியாக வேலை செய்பவன் ஆண். ஷாப்பிங் செய்ய பெண்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியை விட, தான் சம்பாதித்த பணத்தில், தன் தங்கை, காதலி, அம்மா போன்றவர்களுக்கு பொருட்கள் வாங்கி தருவதில் ஆண் மகனே அதிக மகிழ்ச்சி அடைகிறான். ஆண் மற்றவரை மகிழ்விக்க தன் வலியையும் மறைத்து வாழ்பவன் என்பதே நிதர்சனம்.

வாழ்க்கை முழுமை அடையாது

வாழ்க்கை முழுமை அடையாது

ஓர் பெண்ணின் வாழ்க்கை ஆண் இன்றி முழுமை அடைவதில்லை. அதே போல தான் பெண்ணின்றி ஆணும் முழுமை பெறுவதில்லை. பெண்களின் கனவுகளை வளர்க்க ஆண் வியர்வை சிந்துகிறான், தகப்பனாக தொடங்கி கணவனாக முடிவு வரை.

தோள் கொடுக்கும் தோழன்

தோள் கொடுக்கும் தோழன்

பெண்கள் துவண்டு போகும் ஒவ்வொரு தருணத்திலும் அவளை மீட்டெடுப்பவன் ஆண் தான். தகப்பனாக, சகோதரனாக, தோழனாக, காதலனாக ஓர் ஆண் பெண்ணுக்கு எப்போதுமே உறுதுணையாக தான் இருக்கிறான்.

தோழன்

தோழன்

எத்தனை பணம் கொடுத்தாலும் பெண்ணுக்கு ஓர் நல்ல தோழன் கிடைப்பது என்பது வரம் போன்றது. எந்த ஒரு பெண்ணும் தனக்கு அமைந்த அந்த தோழமையை இழக்க விரும்புவதில்லை. அந்த சூழலை எந்த உண்மையான தோழனும் ஏற்படுத்துவதில்லை.

வழிகாட்டி

வழிகாட்டி

ஒரு பெண் வலுவிழந்து காணப்படும் போது அவளை பற்றி அவளுக்கே எடுத்துக் காட்டி, அவளை நல்வழி படுத்தும் ஓர் நல்ல வழிகாட்டியாக இருப்பது பெரும்பாலும் ஓர் ஆண்மகன் தான். அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு உறவின் பரிமாணத்தில் ஆண் துணையாக வந்து செல்கிறான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

International Men's Day Special Proud To Be Men

Celebrate International mens day with your gorgeous man by your side. Here are some of the reasons why we women cant live without a man!
Story first published: Thursday, November 19, 2015, 16:19 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter