காதலில் விழ விரும்பும் நபரா நீங்கள்? இந்த நான்கையும் மறக்கக்கவே கூடாது!!

Posted By:
Subscribe to Boldsky

இப்போதுள்ள தலைமுறைக்கு முதிர்ச்சி கொஞ்சம் குறைவு தான். சில விஷயங்களில் அவர்கள் வளர்ந்தும் குழந்தையாகவே இருக்கிறார்கள். சிறு வயதில் நமது நண்பன் வீட்டில் ஏதாவது புதியதாக வாங்கினால், அதை நம் வீட்டிலும் வாங்க கூறுவோம். பதின் வயதில் அவன் சைக்கிள் போன்ற ஏதாவது வாங்கினால், "அது எனக்கும் வேணும்..." என்று அடம்பிடிப்போம்.

ஆனால், பருவ வயதை கடந்த பின்னரும் கூட, இதே மனோபாவத்தை காதலிலும் கடைப்பிடிப்பது தவறு. ஏனெனில், காதல் தானாக நடக்க வேண்டிய ஒன்று. நாமாக தேடித் போகலாம், ஆனால் அது எந்நாளும் உண்மையான காதலாக இருக்காது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழக்கத்தை ஏற்படுத்துங்கள்

வழக்கத்தை ஏற்படுத்துங்கள்

உங்களிடம் இல்லாத சில வழக்கங்களை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வீடு, வேலை என்று மட்டுமில்லாமல். சமூக வேலை, நண்பர்கள் வட்டாரத்தை பெரிதுப்படுத்துவது, அவ்வப்போது அனைவரையும் நேரில் பார்ப்பது, ஏதேனும் ஓர் செயலில் உங்களை ஈடுப்படுத்திக் கொள்வது என மக்கள் உங்களுடன் தொடர்பில் உள்ளவாறு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், பலர் உங்களுடன் நட்புறவில் இணையும் வாய்ப்புகள் அதிகரிக்கும், அதுவே பின்னாளில் காதலாக கூட மாறலாம்.

பொறுமை கடலினும் பெரிது

பொறுமை கடலினும் பெரிது

பழமொழி ஆயினும் கூட பொன்னான மொழி இது, "பொறுமை கடலினும் பெரிது". அவசர அவசரமாக ஒருவர் மீதி ஆசைக் கொள்ள வேண்டாம், அது எப்போதுமே காதலாகாது. உங்களுக்கான நபர்கள் இங்கு ஏராளம், அதில் உங்களுக்கு ஏற்றவர் யார் என்று கண்டறிவது தான் சிரமம். எனவே, பொறுமை காத்திருங்கள்.

மனசோர்வு அடைய வேண்டாம்

மனசோர்வு அடைய வேண்டாம்

நட்பு வட்டாரத்தில் காதல் உறவில் இருக்கும் நண்பர்கள் உங்களை கேலி, கிண்டல் செய்யலாம். இதற்கு நீங்களே கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில், சிலர் சென்ற வாரம் ஓர் பெண்ணையும், இன்றொரு பெண்ணையும் பிடித்திருக்கிறது என குரங்கை போல தாவிக் கொண்டே இருப்பார்கள். இந்த மனோபாவம் உள்ளவர்களுக்கு காதல் எப்போதுமே செட்டாவாது!!

நேரத்தை முதலீடு செய்ய வேண்டாம்

நேரத்தை முதலீடு செய்ய வேண்டாம்

காதலை தேடி நேரத்தை முதலீடு செய்வதால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதை நீங்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். ஹார்ட் வர்க் செய்தால் பயன் கிடைக்கும் என்பதற்கு இது தொழில் அல்ல. உங்களுக்கானவர் எங்கும் சென்றுவிட மாட்டார். உண்மையில் நீங்கள் உங்கள் வேலையில், தொழிலில் கவனம் சிதறாது இருந்தாலே காதல் தானாக கைக்கூடும்.

நேரடியாக வெளிப்படுத்த வேண்டாம்

நேரடியாக வெளிப்படுத்த வேண்டாம்

நீங்கள் பிடித்தப் பெண்ணை கண்டவுடன், உங்களை பற்றி நீங்களே பெரிதாக பில்டப் கொடுக்க வேண்டாம். எப்படியாவது அவர்களாகவே உங்களை பற்றி அறிந்துக்கொள்ள முனையும்படி செய்யுங்கள். காதல் எனும் காத்தாடிக்கு நூலை அதிகமாகவும் விட கூடாது, விடாமலும் இருக்க கூடாது. இதை நீங்கள் முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Four Tips To Help Your Love Search

Are you the person trying to fall in love with someone? These four tips will help your love search.