இந்த ஐந்து செயல்கள் தாம்பத்திய வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்!!

Posted By:
Subscribe to Boldsky

எல்லாரும் எல்லா செயல்பாடுகளிலும் பக்காவாக இருந்துவிட்டால் இந்த உலகம் என்றோ சொர்க்க பூமியாகியிருக்கும். அது நேற்றும் நடக்கவில்லை, இன்றும் நடக்கவில்லை, நாளையும் நடக்க போவதில்லை. இல்லறம் என்பது நமக்கான ஓர் சிறய பூமி. அதை நாம் தான் அழகாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் வாரத்தில் ஒருமுறையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும்? - ஆய்வு தகவல்கள்!

மற்றவரைக் கண்டு பின்பற்ற முடியாது. ஏனெனில், உங்களது மனோபாவமும், அடுத்தவருடைய மனோபாவமும் என்றுமே ஒத்துப் போகாது. கணவன் மனைவி ஆகிய நீங்கள் இருவரும் தனித்தன்மைக் கொண்டவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இல்லறத்தில் மிக முக்கியமான ஒன்று தாம்பத்தியம்.

திருமணமான புதியதில் அனைத்து தம்பதிகளும் செய்யும் பொதுவான தவறுகள்!!

தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படும் பட்சத்தில் இல்லறத்தில் விரிசல் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக இந்த ஐந்து செயல்கள் படுக்கையறை வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொய் புரட்டு கூறுவது

பொய் புரட்டு கூறுவது

சிலர் தான் தான் பெரிய இது.., என்பதை போல காட்டிக் கொள்ள ஊரெங்கும் பொய் புரட்டு கூறி திரிவது மட்டுமில்லாமல், வீட்டிலும் வெட்டி வீறாப்புடன் திரிவார்கள். இது இல்வாழ்க்கை மட்டுமின்றி, தாம்பத்திய வாழ்க்கையையும் சேர்த்து பாதிக்கும்.

வீண் அனுமானம்

வீண் அனுமானம்

இப்படி இருக்குமோ, அப்படி செய்திருப்பார்களோ.. என்று தங்கள் மனைவி மீது, குழந்தைகள் மீது சிலர் வீணாக அனுமானம் செய்துக் கொள்வார்கள். இது மிகப்பெரிய முட்டாள்தனமான செயல். இது ஒரு தீய குணாதிசயம்.

தவறான அணுகுமுறைகள்

தவறான அணுகுமுறைகள்

உணவுப் பழக்கம் மற்றும் வேலை முறை, சோம்பேறித்தனம் போன்றவற்றின் காரணமாக உடல் பருமன் அல்லது உடல்நல பிரச்சனைகளில் நீங்களாக ஏற்படுத்திக் கொள்வது. எனவே, ஆரோக்கிய பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கெத்து காட்டுவது

கெத்து காட்டுவது

உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் தான் உங்களது ஆசையை வெளிப்படுத்த வேண்டும். அன்யோன்யமான விஷயங்களில் கூட கெத்துக் காட்டக் கூடாது.

அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல்

அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல்

உங்கள் துணையின் முன்பே அடுத்தவர் மீது அதிகமான அன்பு செலுத்துதல் கூட உங்களது இல்லற, தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் ஒன்று தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Things You Have To Quite For Better Bed Life

Five Things You Have To Quite For Better Bed Life,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter