உங்கள் உறவிலும் இந்த 12 முதல் முறை தருணங்களை அனுபவித்துள்ளீர்களா???

Posted By:
Subscribe to Boldsky

முதலாவதாக நடக்கும் எந்த ஒரு விஷயமும் மகிழ்ச்சியானது தான் அந்த வகையில் திருமணமான புதிதில் நடக்கும் சில முதல் செயல்கள் உலகிலேயே நீங்கள் தான் மகிழ்ச்சியான நபர் என்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். அது எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் கிடைக்காது. கண்டிப்பாக திருமணமான ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த தருணங்கள் இடம்பெறும்.

திருமண வாழ்வில் ஆண், பெண்ணுக்கு இடையேயான வயது வரம்பு முக்கியம் - அறிவியல் ரீதியான உண்மைகள்!!!

முதல் முத்தம், முதலிரவு என்பதை தாண்டி பல தருணங்கள் இருக்கின்றன. முதன் முதலில் நீங்கள் இருவரும் சேர்ந்து சமைப்பது, ஒருவருக்கு ஒருவர் உதவுவது, வெளியூர் பயணம், அவசரமாக நிகழ்ச்சிக்கு செல்லும் போது உடை மாற்ற உதவுவது போன்றவை முதல் முறை நடக்கும் போது மனதில் எழும் ஓர் வகையான மகிழ்ச்சி ஈடு இணையற்றது...

இதெல்லாம் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் இல்லற வாழ்க்கை வலிமையடையும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழுமையான முதல் முத்தம்

முழுமையான முதல் முத்தம்

உங்கள் துணையிடம் இருந்து கிடைக்கும் முழுமையான முதல் முத்தம். எந்த கட்டாயமும் இன்றி, முழு காதலோடு, அச்சமின்றி, தயக்கமின்றி தரப்படும் அந்த முத்தம் எதற்கும் ஈடாகாது.

அந்த முதல் காலை

அந்த முதல் காலை

திருமணம் முடிந்து இருவரும் ஒன்றாக உறங்கி எழும் அந்த முதல் விடியல் மிகவும் சிறப்பானது ஆகும். உடலுறவு என்பது இரண்டாம் பட்சம் தான். உங்களுக்கு பிடித்தமான நபர், உங்களோடு வாழ்க்கை முழுதும் பயணிக்க போகும் அந்த நபரோடு நீங்கள் எழும் அந்த காலை பொழுது எந்நாளும் நினைவை விட்டு அகலாது.

காதலை உணரும் தருணம்

காதலை உணரும் தருணம்

கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தாலும் கூட, ஏதோ ஓர் நிகழ்வு அல்லது சம்பவம் உங்கள் இருவரையும் காதலை உணர வைக்கும். அந்த முதல் நிகழ்வு மிகவும் உன்னதமானது.

இரவு முழுதும் பேச்சு

இரவு முழுதும் பேச்சு

இருவரை பற்றியும், இருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் இரவு முழுக்க பேசி கழிக்கும் அந்த முதல் முறை மிகவும் இனிமையானதாக இருக்கும். ஏனெனில், முதல் முறை நீங்கள் இருவரும் நிறைய பேசி இருப்பீர்கள், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்திருப்பீர்கள்.

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

முதல் முறை ஒருவருக்கு ஒருவர் "ஐ லவ் யூ" சொல்லிக் கொள்ளும் அந்த தருணம், நாள் நினைவை விட்டு அவ்வளவு எளிதில் மறைந்திடாது. மெல்லிய குரலில், நெருக்கமான பொழுதில் காதலை பரிமாறிக்கொள்ளும் அந்த தருணம் தரும் மகிழ்ச்சி இன்றியமையாத ஒன்று.

பயணம்

பயணம்

நீங்கள் இருவரும் சேர்ந்து வெளியே போகும் அந்த முதல் பயணம். பல கோடி மக்கள் இருந்தாலும் கூட, இவ்வுலகில் நீங்கள் இருவர் மட்டுமே இருப்பதை போன்ற உணர்வை தரும் முதல் பயணம் அது.

படுக்கையறை நிகழ்வுகள்

படுக்கையறை நிகழ்வுகள்

முதல் முறை எங்காவது நிகழ்ச்சிக்கு செல்லும் போது அவசர வேலையில் உங்கள் துணைக்கு நீங்கள் உடை மாற்ற உதவும் அந்த முதல் தருணம் யாராலும் மறக்க முடியாது.

காத்திருந்து பார்ப்பது

காத்திருந்து பார்ப்பது

திருமணத்திற்கு பிறகு, என்றாவது ஓர் நாள் நீங்கள் வெகுநேரம் காத்திருந்து உங்கள் துணையை பார்க்கும் அந்த தருணத்தில், தொலைவில் யாரைக் கண்டாலும் உங்கள் துணையை போலவே தெரியும் அந்த நிகழ்வு.

முதல் முறை நண்பர்களை சந்திப்பது

முதல் முறை நண்பர்களை சந்திப்பது

முதல் முறை உங்கள் துணையின் நண்பர்களை சந்திக்கும் நிகழ்வு, அங்கு நடக்கும் கேலி, கிண்டல் கூத்துகள் போன்றவை என்றென்றும் புன்னகைக்க வைக்கும்.

முதல் சண்டை

முதல் சண்டை

முதல் முறை சண்டையிட்ட பிறகு இனிமேல் சண்டை போட வேண்டாம். எதுவாக இருந்தாலும் விட்டுக் கொடுத்து போகலாம் என்று கொஞ்சி,நெகிழும் தருணம் பொன் போன்றது.

சமைப்பது

சமைப்பது

முதல் முறை என்றாவது இருவருக்கும் விடுமுறை நாளாக இருக்கும் போது சேர்ந்து சமைக்க முற்படுவது. சமையல் ருசியாக இருக்குமோ, இல்லையோ அந்த நிகழ்வு மிகவும் ருசிகரமாக அமையும்.

முதல் பொறாமை

முதல் பொறாமை

உங்கள் துணை மீது வேறொருவர் அதிக உரிமை எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் அந்த முதல் பொறாமை அளவில்லாத பாசத்தின் வெளிப்பாடு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

First-Time Moments That Happen in Relationships

Do you know about the first time moments that happen in relationships which makes you the happiest man in the world? read here in tamil.