பிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா, தவறா?

Posted By:
Subscribe to Boldsky

காதல் சுகம் தரும் என்றும், வலி தரும் என்றுப் பட்டிமன்றம் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காதல் ஒரு அஞ்சறைப் பெட்டி என தெரிவதில்லை. அது அனைத்தும் கலந்த ஒரு கலவை என அவர்கள் அறிவதில்லை.

கசப்புப் பிடிக்காது என்றால் பின் உடல் எப்படி குணமாகும். அதுப் போல தான் காதலும். சண்டை, பிரச்சனை, வலி இதெல்லாம் வேண்டாம் முத்தமும், மொத்தமும் இன்பம் மட்டுமே வேண்டும் எனில் இங்கு யாரும் காதல் கொள்ள இயலாது.

ஒருவேளை அப்படி ஒரு உறவு உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அது காதலாக இருக்காது. காதலில் பிரிவுகள் சகஜம் தான், ஆனால், அந்த பிரிவிற்கு பின் உங்கள் காதலில் ஏற்படும் மாற்றங்கள் வேறு விதமாக இருக்கும்.

அப்படி ஏற்படும் அந்த மாற்றங்களில் நன்மைகள் அதிகமா இல்லை, தீமைகள் அதிகமா என்பதைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரிதல்

புரிதல்

காதல் பிரிவிற்கு பின் இணையும் காதல் ஜோடிகளில் புரிதல் அதிகம் இருக்கும். மீண்டும் ஒரு புரிதலற்ற காரணத்தினால் பிரிந்துவிட கூடாது என கவனமாக இருப்பார்கள்.

சொந்தம் கொண்டாடுதல்

சொந்தம் கொண்டாடுதல்

"என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.." என்பது போல சொந்தம் கொண்டாடுதல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆண்களை விட பெண்கள் மிகவும் அன்யோன்யம் ஆகிவிடுவார்கள்.

முதிர்ச்சி

முதிர்ச்சி

காதலில் ஒரு முதிர்ச்சி ஏற்படும். எதையும் யோசித்து முடிவெடுக்கும் பழக்கம் அதிகரிக்கும். இந்த முதிர்ச்சி பல சண்டைகள் ஏற்படாது தடுக்கும்.

அக்கறை

அக்கறை

புரிதல் மற்றும் முதிர்ச்சியின் பிள்ளையாய் உங்கள் காதலில் அக்கறை அதிகரிக்கும். மீண்டும் ஒரு பிரிவை ஏற்க மனம் தயாராக இருக்காது. முன் ஏற்பட்ட காயத்தை இந்த அக்கறை எனும் மருந்து மிக வேகமாக ஆற்றும்.

ரொமான்ஸ்

ரொமான்ஸ்

மிஞ்சுதலை விட, கொஞ்சுதல் அதிகரிக்கும். முதிர்ச்சியின் காரணமாய் எல்லை மீறல்கள் இல்லாத மெய் காதல் வெளிப்படும். இது உங்கள் காதலின் அஸ்திவாரத்தை வலுவாக்கும்.

சொல்லிக் காட்டுவது

சொல்லிக் காட்டுவது

நன்மைகள் போலவே தீமைகளும் இருக்கிறது, சின்ன சின்ன விஷயங்களில், "அன்று நீ அப்படி செய்துவிட்டு போனவன் தானே" என்று சொல்லிக் காட்டும் குணம் எட்டிப்பார்க்கும்.

சந்தேகம்

சந்தேகம்

ஒவ்வொரு உறவையும் கொள்ளும் நச்சு தான் சந்தேகம். எந்த காரணத்தினால் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தீர்களோ அது அவ்வப்போது மனதை அரிக்கும். இப்போதும் அவன் அவ்வாறு தான் இருக்கிறானா? அவள் மாறியிருக்க மாட்டாளோ? என சந்தேகம் மனதினுள் அடிக்கடி எட்டிப்பார்க்கும்.

சுபம்

சுபம்

சொல்லிக் காட்டுதல், சந்தேகம் இந்த இரண்டு தீமைகளை வென்றுவிட்டீர்கள் என்றால் உங்கள் காதல், மனதில் இருந்து திருமணத்திற்கு செல்ல எந்த தடையும் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Advantage And Disadvantage Of Loving The Same Person After The Breakup

Do you know about the advantages and disadvantages of loving the same person after the break up? read here.
Story first published: Monday, April 6, 2015, 16:54 [IST]
Subscribe Newsletter