ஆண்களைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்!!!

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

ஒரு பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது முடியாத காரியம் என்று அனைவருக்கும் தெரியும். இதே பதிலையே ஆண்களுக்கும் பொருத்தி விட முடியும் என்கிறது EHC-யின் ஆய்வுக்குழு ஒன்றின் அறிக்கை. ஆண்களின் மனதைப் பற்றிய ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இது உங்களுக்கான கட்டுரையே.

ஆண்கள் தங்களுடைய ரகசியங்களை அப்பட்டமாக மறைக்கிறார்கள் என்று கூற முடியாது. இந்த விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டாலும் கூட பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஆண்கள் ரகசியங்களைக் காப்பாற்ற விரும்புவார்கள். ஆனால் அதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். பெண்களே! சில நேரங்களில் அறியாமையும் கூட வரம் தான். ஆனால், இந்த கட்டுரையில் உங்களவரின் ஆழ்மனதில் உள்ள ரகசியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
'அந்த' மாதிரி படம்!

'அந்த' மாதிரி படம்!

ஆம், எல்லா நேரங்களிலும் பார்க்கும் அடிமையாக இல்லாவிட்டாலும், அவர் ‘அது' மாதிரி படங்களை இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. ஆனால், இந்த படங்களை பார்த்து அவர் அவ்வப்போது ரசித்துக் கொண்டிருப்பார். இந்த விஷயத்தை மறைக்கக் காரணமாக இருப்பவை 2 விஷயங்கள்: உங்களை விட்டு விட்டு வேறொரு பெண்ணை வீடியோ திரையில் பார்ப்பதை அவர் மறைக்க விரும்புதல் மற்றும் உங்களுடைய விருப்பத்தை அப்படியே நிறைவேற்ற விரும்புதல். ஆனால், இவற்றைப் பார்ப்பதில் அவர் ஆனந்தமடைகிறார். இருவரும் சேர்ந்து பார்க்கவும் கூட சில நேரங்களில் விரும்பினாலும், உங்களை "மூட்"-க்கு கொண்டு வருவதற்காக முயற்சி செய்வார். ஆனால், அதே போல நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லமாட்டார்.

பிற பெண்களை நோட்டமிடுவார்

பிற பெண்களை நோட்டமிடுவார்

ஆம், ஆண்கள் சில நேரங்களில் இதையும் செய்வார்கள். அவர்களுடைய புத்திக்கூர்மையைப் பற்றி ஆகா ஒஹோ என்று சொல்லாவிட்டாலும், உண்மையாக பெண்ணை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என அவர் நம்புவார். இம்மாதிரியான பெண்களுக்காக உங்களை மாற்றி விடுவார் என்று நீங்கள் கருத வேண்டாம். சும்மா, சூப்பரான ஃபிகர்களை சைட் அடிப்பது மட்டுமே இதன் நோக்கமாகும். ஒரு பெண்ணுடைய கழுத்து வளைவுகளிலோ அல்லது ஷார்ட் ஸ்கர்ட்-ன் தோற்றத்தையோ அவர் பார்க்க முயல்வார். ஆனால், இந்த விஷயத்தைப் பற்றி உங்களிடம் சொல்லி நல்ல பிள்ளையாக இருக்க முயற்சி செய்வார்.

மேக்கப் பயம்

மேக்கப் பயம்

நீங்கள் மேக்கப் போட வேண்டாமென்று அவர் சொல்லப் போவதில்லை. போட்டுக் கொள்ளும் லிப்ஸ்டிக் அல்லது கண் மையின் அளவை அளவாக வைத்திருக்கச் சொல்வார். ஆம், அவருக்கு மேக்கப் பிடிக்கும், ஆனால் அதீதமான மேக்கப் அவரை பயமுறுத்தும். ஆனால், உங்களிடம் இதைச் சொன்னால் வருந்துவீர்கள் என்று, மேக்கப் பற்றி தன்னுடைய எண்ணங்களை வெளியிட மாட்டார்.

தனிமையே என் துணைவன்

தனிமையே என் துணைவன்

ஆண்கள் எந்த நேரத்திலும் தனிமையில் இருப்பதை மிகவும் விரும்புவார்கள். அந்த நேரங்களில் உங்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.

பாராட்டுங்கள்

பாராட்டுங்கள்

பெரும்பாலும் பெண்கள் மட்டுமே புகழ்ச்சியை, பாராட்டுகளை விரும்புவார்கள் என்பது நடைமுறையிலுள்ள உண்மை. ஆனால், ஆண்களும் இதே எண்ணங்களை கொண்டிருப்பார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு. இவ்வாறு புகழ்ச்சியை விரும்புவதை அவர்கள் வெளியிட விரும்பமாட்டார்கள். ஆனால் நீங்கள் புகழ்ந்து சொன்னதை என்றும் மறக்க மாட்டார்கள்.

படுக்கையறை விளையாட்டு

படுக்கையறை விளையாட்டு

ஆண்களுக்கும் பெண்களைப் போல சில வெட்கப்படும் சுபாவங்கள் உள்ளன. அவருக்கும் உங்களைப் போலவே பயங்களும் உள்ளன. குறிப்பாக முதல் முறை, சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கும் போது அவர் மிகவும் பதட்டமாக இருப்பார்.

நீயில்லாமல் நானில்லை!

நீயில்லாமல் நானில்லை!

நீங்கள் மட்டுமே அவரை இழக்க விரும்பாதவர் இல்லை. அவரும் தான் உங்களை இழப்பதை விரும்பமாட்டார். ஆனால், இந்த விஷயத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளமாட்டார். அது அவருடைய ஆழ்மனதில் இருக்கும். ஆகவே நீங்கள் விரும்பிக் பகிர்ந்து கொண்டிருக்கும் உறவை எப்பொழுதும் இழக்கமாட்டீர்கள் என்று நம்புங்கள்.

மூடு இல்லையே…

மூடு இல்லையே…

ஆம், இதையும் நம்புங்கள். ஆண்கள் எப்பொழுதும் மூடுடன் இருப்பதில்லை. அவர்களும் கூட சில நேரங்களில் சோர்வாகவும், அயற்சியுடனும், பதட்டமாகவும் இருப்பார்கள். ஆனால், மூடுடன் இருப்பதைப் போலவே முயற்சி செய்து கொண்டிருப்பார். எனவே, அவர் சுறுசுறுப்பாக செயல்படவில்லை என்றால், இதுதான் காரணமாக இருக்கும்.

முதலில் பணம்

முதலில் பணம்

தங்களுக்கு முதலில் தேவைப்படுவது பணம் தான் என்பதை ஆண்கள் எப்பொழுதும் பெண்களிடம் மறைத்து வருவார்கள். எப்பொழுதும் தங்களை முதன்மையாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் பெண்கள் யாரும் இதை விரும்ப மாட்டார்கள். ஆனால், தங்களுடைய துணைவியை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தான் ஆண்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஆண்கள் என்ன மாதிரியான ரகசியங்களை உங்களிடமிருந்து மறைத்திருந்தாலும், போதுமான அளவிற்கு விரும்புவதும் மற்றும் அம்மனிதரைப் புரிந்து கொள்வதும் நல்லதொரு உறவை வளர்த்து மகிழ்ச்சியாகவும், உறுதியாகவும் வைத்திருக்கும். மீண்டும் காதலியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secrets of Men Women Should Know

We know that it is almost impossible to know a woman completely. EHC’s research team has found out a similar situation with men. If you like to take a trip to your man’s mind, you are reading the right material. Here are some secrets of men women should know. Read on to know more about them...
Story first published: Saturday, November 29, 2014, 13:18 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter