For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதல் முறிவதற்கான மோசமான சில காரணங்கள்!!!

By Maha
|

காதலில் சுவாரஸ்யம் இல்லாவிட்டால், அந்த காதல் விரைவில் முறிந்துவிடும். ஆகவே அவ்வப்போது காதலிப்பவர்கள், தங்கள் காதலை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயல வேண்டும். அதில் அவ்வப்போது, துணையுடன் வெளியே செல்வது, வித்தியாசமான பொருளைப் பரிசாகக் கொடுத்து அதிர்ச்சியை தருவது என்று இருந்தால், நிச்சயம் காதல் அழியாமல் எப்போதும் நிலைத்து இருக்கும். ஆனால் அது எதுவும் இல்லாமல், எப்போதும் ஒரே மாதிரி சென்றால், காதலே போர் அடித்து மற்றவர்களின் மீது மனதை அலை பாயச் செய்யும். பிறகு காதலித்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரிய நேரிடும்.

காதலில் பிரிவு இருக்கிறதென்றால், அது இருவரும் சரியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்படும். ஆனால் சிலருக்கோ எவ்வித சரியான காரணமும் இல்லாமல், சாதாரண சிறு விஷயத்திற்காக பிரிந்துவிடுகின்றனர். மேலும் தற்போது பெரும்பாலானோர் இப்படி தான் பிரிகின்றனர். அது என்ன காரணங்கள் என்று தெரிய கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மற்றவர்களின் அழகை ரசிப்பது

மற்றவர்களின் அழகை ரசிப்பது

அழகை ரசிப்பது தவறில்லை. அதிலும் காதலிப்பவர்களுடன் வெளியே செல்லும் போது, சற்று மற்றவர்களின் அழகை ரசிப்பதற்கு தடையைப் போடுவது சிறந்தது. ஏனெனில் தன் காதலன் தன்னைப் பார்க்காமல் வேறு யாரையோ பார்த்து சைட் அடிக்கிறான் என்ற கோபம் அனைத்து பெண்களுக்கும் வரும். இந்த காரணத்தினால் பலரது காதல் முறிந்துள்ளது. இதை பெண்கள் மட்டுமின்றி, சில ஆண்களும் செய்கிறார்கள். குறிப்பாக காதலன்/காதலியை கழற்றிவிட நினைப்பவர்கள் இத்தகைய செயலை செய்வார்கள்.

குறை கூறுவது

குறை கூறுவது

சிலர் எப்போது பார்த்தாலும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அதற்கு காலம், நேரம் என்ற எதுவும் இல்லை. அனைத்து நேரங்களிலும், எதை செய்தாலும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். இதனால் பலர் ஆத்திரமடைந்து காதலை முறித்துக் கொள்வார்கள்.

திருமணம்

திருமணம்

காதல் பிரிவிற்கு திருமணம் என்ற ஒரு வார்த்தையும் காரணம். ஏனெனில் இருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில் இருப்பார்கள். அதை சரியாக புரிந்து கொள்ளாமல், என் நம்பிக்கை இல்லையோ என்று சந்தேகம் குடிப்புகுந்து பிரிந்து விடுகின்றனர்.

ரொமான்ஸ்

ரொமான்ஸ்

காதலிக்கும் போது முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது போன்றவை சாதாரணம் தான். ஆனால் அந்த எண்ணத்தில் எப்போதுமே பழகினால், அது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்தி, விலக ஆரம்பிப்பார்கள்.

சகிப்புத்தன்மையின்மை

சகிப்புத்தன்மையின்மை

காதலிப்பவர்கள் இருவருக்கும் ஒரு சில விஷயங்கள் தான் ஒத்து போகும். பல விஷயங்கள் எதிராக இருக்கும். இப்படி இருக்கையில் ஒரு காலக்கட்டத்தில் சகிப்புத்தன்மை குறைந்து, இருவருக்கும் உள்ள காதலானது மறைந்து, பிரிவை ஏற்படுத்தும். இந்த நிலையில் பிரிவு ஏற்பட்டால், பிரிவிற்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

என்ன நண்பர்களே! மேற்கூறியவை சரிதானா? வேறு ஏதாவது இருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bad Reasons For Breakup In Love

Here are some reasons for breakup in love. Take a look...
Story first published: Saturday, November 22, 2014, 13:33 [IST]
Desktop Bottom Promotion