பெண்களே... ஆண்களைக் கவர வேண்டுமா? அப்படின்னா இந்த 7 தப்புக்களை செய்யாதீங்கோ!!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

பெண்களை ஆண்கள் கவர முயற்சிக்கும் போதும் சரி, ஆண்களை பெண்கள் கவுக்க நினைக்கும் போதும் சரி... பலமுறை இரு தரப்பினருமே குப்புற விழுந்து, மூக்கு உடைபட்டு, அசடு வழிவது வழக்கம்!

அதிலும், ஆண்களைக் கவர்ந்திழுக்க முயற்சிக்கும் வேளையில் 'எல்லாம் சரியாகத்தான் போய்க்கிட்டு இருக்கு' என்று பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, சில இடத்தில் சறுக்கி விடுவார்கள். அவர்கள் செய்யும் சில முட்டாள் தனமான தவறுகளால், அந்த ஆண்கள் கதி கலங்கிப் போய்விடுவார்கள். அதே நேரத்தில், அவர்களுடைய நட்பும் பறிபோய் விடும்.

பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

இப்படி ஆண்களைக் கவர முயலும் பெண்கள் செய்யும் 7 பொதுவான தவறுகளைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓவர் மேக்கப் செய்வது

ஓவர் மேக்கப் செய்வது

'இன்னிக்கு இவன எப்படியும் கவுத்திரணும்' அப்படின்னு நினைத்துக் கொண்டு ஒரு பெண் தன்னை அளவுக்கு அதிகமாக அலங்கரித்துக் கொள்வாள். ஆனால் அந்த அலங்காரம் எல்லாம் அந்த ஆணுக்குப் பெரும்பாலும் அலங்கோலமாகத் தான் தெரியும். சில சமயம், ஆண்கள் பயந்தடித்து ஓடிப் போகும் அளவுக்கு பெண்கள் மோசமாகத் தங்களை அலங்கரித்திருப்பார்கள்!

டேட்டிங்கிற்கு லேட்டாக வருவது

டேட்டிங்கிற்கு லேட்டாக வருவது

கஷ்டப்பட்டு ஒரு ஆணைக் கவர்ந்திழுத்து, டேட்டிங்கிற்கும் ஏற்பாடு செய்து விடுவாள் அவள். ஆனால், குறிப்பிட்ட அந்தத் தேதியில் அவன் காத்துக் கொண்டிருக்கும் போது, இவள் சாவகாசமாக லேட்டாக வந்து சேருவாள். இதனால் அந்த ஆண் கடுப்பாகிப் போய்விடுவான்.

உடம்பு மெலிவதற்கு சாப்பிடாமலிருப்பது

உடம்பு மெலிவதற்கு சாப்பிடாமலிருப்பது

தான் ஸ்லிம்மாக இருந்தால், தன்னுடைய பாய் ஃப்ரெண்டுக்கு மிகவும் பிடிக்கும் என்று கருதும் சில பெண்கள், பட்டினியாகக் கிடந்து தங்களை வருத்திக் கொள்வார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்கள், தன் பெண் துணை பார்ப்பதற்குக் கொஞ்சமாவது சதைப் பிடிப்போடு இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.

குட்டை ஆடைகளை அணிவது

குட்டை ஆடைகளை அணிவது

தன் நண்பனைக் கவர்வதற்காகவும், தன்னுடைய தோலை அவனுக்கு அதிகமாகக் காட்டுவதற்கும், பெரும்பாலான பெண்கள் மிகவும் குட்டையான ஆடைகளை அணிவார்கள். அவர்கள் அப்படி அணிவதை எந்த ஆண் துணையும் கட்டாயம் விரும்ப மாட்டான். ஒன்று மட்டும் நிச்சயம்; பெண்கள் இப்படி வெளிக்காட்டும் அங்கங்களை வேறு பல ஆண்கள் தான் விழுங்கி விடுவதைப் போல் பார்ப்பார்கள்.

யாரோ போல் காட்டிக் கொள்வது

யாரோ போல் காட்டிக் கொள்வது

ஏதோ வித்தியாசமாக நடந்து கொள்வதற்காக, ஒரு பெண் தன் குணத்தை மாற்றி, தன்னை வேறு யாரோ போல் தன் பாய் ஃப்ரெண்டிடம் காட்டிக் கொள்ள நினைப்பாள். ஆனால் இதை ஆண்கள் விரும்புவதில்லை. தன்னுடைய பெண் துணை ஒரு கண்ணியமானவளாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவான்.

தன்னைத் தாழ்த்திக் கொள்வது

தன்னைத் தாழ்த்திக் கொள்வது

எப்படியாவது விரைவில் வாழ்க்கையில் செட்டிலாகி விட வேண்டுமென்பதற்காக, சில பெண்கள் பொறுமையிழந்து, அவசர அவசரமாக ஆண் துணையைத் தேர்ந்தெடுப்பார்கள். இதில், தங்களுடைய மதிப்பையே அந்தப் பெண்கள் குறைத்துக் கொள்வார்கள்.

எதிர்மறையாகச் சிந்திப்பது

எதிர்மறையாகச் சிந்திப்பது

தன்னை உண்மையிலேயே ஒரு ஆண் விரும்புவானா, தான் அதற்குத் தகுதியானவள் தானா என்று பல பெண்கள் நெகட்டிவ்வாகவே நினைப்பதுண்டு. தன்னிடம் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும், பாஸிட்டிவ் என்ற வார்த்தையே அவர்களுக்கு மறந்து போயிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Mistakes Women Make when Trying to Attract Men

Here are 7 of the most common mistakes women make when trying to attract men.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter