Latest Updates
-
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்!
வாழ்க்கைத்துணையுடன் சண்டை போட்ட பிறகு செய்யக்கூடாத 10 விஷயங்கள்!!!
உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் பெரிய சண்டை போட்ட பிறகு உங்களுக்கு ஏற்படும் மனகசப்பு மற்றும் மன வலியை பற்றி உங்களுக்கு புதிதாக விளக்க தேவையில்லை. நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, உங்கள் மனதை விட்டு அந்த அதிருப்தி உணர்வு அவ்வளவு சுலபத்தில் போகாது. உங்களுக்கு எவ்வளவு தான் கோபம் இருந்தாலும், சண்டைக்கு பிறகு நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளது. கோபத்தில் நீங்கள் செய்வது உங்கள் கணவன் அல்லது மனைவியை தான் மேலும் காயப்படுத்தும். இதனால் உங்கள் உறவில் மேலும் விரிசல் தான் ஏற்படும்.
அதனால் சண்டைக்கு பிறகு ரொமான்டிக்காக எதையாவதை முயற்சி செய்ய வேண்டும். அதனால் உங்கள் இருவருக்கும் இடையே ஆன மனக்கசப்பு நீங்கும். ஒரு வேளை, உங்களுக்கு ரொமான்டிக்காக இருக்க தெரியவில்லை என்றால், அவர்களை காயப்படுத்தும் செயலிலாவது இறங்காமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகத் தான் போய் முடியும். மேலும் உங்கள் கணவன் அல்லது மனைவியை எப்படி தண்டிக்கலாம் என்பதையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எப்படி சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது என்பதை பற்றி ஆலோசிப்பது மட்டுமே.
நீங்கள் நினைப்பதை போல் இல்லாமல் சண்டைக்கு பிறகு சமாதானமாவது சுலபம். உங்கள் ஈகோவை எல்லாம் மூட்டை கட்டி விட்டு, உங்கள் இருவரையும், ஈருயிராக நினைக்காமல் ஒரு உயிராக கருதுங்கள். நீங்கள் தவறே செய்திருந்தாலும் கூட மன்னிப்பு கேட்பதனால் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்.

கைப்பேசியை அணைப்பது
சண்டைக்கு பிறகு தங்கள் கணவன் அல்லது மனைவியை தண்டிக்க நம்மில் பலரும் நம் கைப்பேசியை அனைத்து விடுவோம். உண்மையிலேயே மிக சிறுபிள்ளைதனமான பழக்கம் இது. இப்படி உங்களை தொடர்பு கொள்ளவே முடியாத நிலையை உருவாக்காதீர்கள். இது உங்கள் கணவன் அல்லது மனைவியை வெகுவாக பாதிக்கும். உங்களிடம் மன்னிப்பு கேட்க கூட அவர்கள் கூப்பிடலாம் அல்லவா?

மௌன யுத்தம்
சண்டைக்கு பிறகு உங்கள் கணவன் அல்லது மனைவியின் தொலைப்பேசி அழைப்பை நிராகரிப்பது அல்லது அவர்களின் எஸ்.எம்.எஸ். களுக்கு அமைதி காப்பது ஆகியவைகளை நீங்கள் கடைப்பிடித்தால் அவர்களை தண்டிப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் இது இரண்டு மாதிரியும் விளைவை ஏற்படுத்தும். ஒன்று இதற்காக அவர்கள் வருத்தப்படுவார்கள் அல்லது விலகி போய் விடுவார்கள்.

சண்டைக்கு காரணங்கள் தேடுவது
காரணங்கள் கூறி சண்டையை ஞாயப்படுத்த முயற்சிக்காதீர்கள். சண்டைக்கான முழு பழியையும் தூக்கி உங்கள் கணவன் அல்லது மனைவியின் மீது போடாதீர்கள்.

சீக்கிரமே மன்னிப்பு கேட்பது
சண்டைக்கு பிறகு உடனடியாக மன்னிப்பு கேட்காதீர்கள். விரைவில் மன்னிப்பு கேட்டால், அதை நீங்கள் உணர்ந்து கேட்கவில்லை என அவர் நினைத்து விடுவார்.

சண்டையை முடிக்க படுக்கையில் காதல் கொள்வது
சண்டைக்கு பிறகு உடலுறவு கொள்வது மிகவும் ரொமான்டிக்கான ஒன்றாகும். ஆனால் சண்டையை முடிப்பதற்கு, பேருக்கு உடலுறவில் ஈடுபடாதீர்கள். இன்னமும் கோபம் அல்லது காயம் இருந்தால் உடலுறவில் ஈடுபடாதீர்கள்.

அதையே மனதில் அசை போடுவது
சண்டையை நினைத்து கொண்டே இருக்காதீர்கள். நீண்ட நேரத்திற்கு சண்டையை நினைத்து கொண்டிருந்தால், காயம் பட்ட உணர்வு அல்லது வஞ்சம் தீர்க்கும் உணர்வு வளர்ந்து கொண்டே வரும். உங்கள் சண்டை நிற்காமால் நினைக்காத தூரத்திற்கு சென்று விடும்.

சமுதாய வலைத்தளங்களில் ஸ்டேடஸ் மெசேஜ் போடுவது
சமுதாய வலைத்தளங்களில் சோகமான ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு உங்கள் சண்டையை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டாதீர்கள். உங்கள் மெசேஜ்ஜிற்கு கமண்ட் போடும் உங்கள் நண்பர்கள் என்ன ஆச்சு என கேட்பார்கள். அது உங்கள் கணவன் அல்லது மனைவியின் மீது தப்பான வெளிச்சத்தை உருவாக்கும்.

பொறாமை பட வைப்பது
சில நேரம் எதிர் பாலின நண்பர்களோடு கடலை போட்டால் உங்கள் கணவன் அல்லது மனைவிக்கு பொறாமை ஏற்படும். ஆனால் சண்டை முடிந்த அந்த உணர்ச்சியுள்ள நேரத்தில் இப்படி உங்கள் கணவன் அல்லது மனைவியை பொறாமை பட வைக்காதீர்கள். அது மீண்டும் உங்களேயே தான் தாக்கும்.

குத்திக்காட்டுவது
உங்கள் கணவன் அல்லது மனைவியை எப்போதுமே குத்திக் காட்டிக் கொண்டே இருக்காதீர்கள். தப்பு அவர்களுடையதாக இருந்தாலும் கூட திரும்பி திரும்பி குத்திக் காட்டுவதால் எந்த நன்மையையும் ஏற்பட போவதில்லை.

பிரச்சனையை பேச விரும்பினால் அதை நிராகரிப்பது
சில நேரம் உங்கள் கணவன் அல்லது மனைவி சண்டையை பற்றி பேச விரும்புவார், ஆனால் உங்களுக்கு அதற்கான மனநிலை இல்லாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் கணவன் அல்லது மனைவியின் கோரிக்கையை அப்படியே நிராகரிக்காதீர்கள். நீங்கள் அதற்கான மனநிலையில் இல்லை என்பதையும், அதை பற்றி பின்னர் பேசலாம் என்றும் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.



Click it and Unblock the Notifications