For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீ வேண்டாம் போ... அதை எப்படிச் சொல்லலாம்?

By Ashok CR
|

காதல் வயப்படாத மனிதரை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். காதல் வயப்பட்டு ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிப்பது என்பது எல்லா ஆண்களுக்குமே கடினமான ஒன்றாகும். அந்த பெண் தன் காதலை ஏற்றுகொள்ளுவாளா அல்லது நிராகரித்து விடுவாளா என்ற பயம் இருக்கும். அதனால், நீங்கள் அந்த பெண்ணிடம் உங்கள் காதலை தெரிவிக்கும் முன் அந்த பெண்ணிற்கு உங்கள் மேல் விருப்பம் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

இளம் வயதில் காதல் வயப்படுவது என்பது பொதுவான ஒன்றாகும். இது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எப்பொழுதுமே இருந்துவரும் ஒன்றாகும். நீங்கள் அழகான பெண் என்றால் கண்டிப்பாக பல வாலிபர்கள் உங்கள் மேல் காதல் வயப்பட்டு உங்களை சுற்றி வருவார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். நமக்கு சிலரை பிடிக்கும் சிலரை பிடிக்காது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லோரிடமும் காதல் வயப்பட முடியாது. சிலரின் அழகும் திறமையும் உங்களை ஈர்க்கும். ஆனால், எப்பொழுதுமே அப்படிதான் இருக்கும் என்று இல்லை. சில கடினமான சந்தர்ப்பங்களை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.

காதலை நிராகரிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதனை நீங்கள் திறமையாக கையாள வேண்டும். ஏன்னென்றால், ஒவ்வொரு நபரும் வேறுபட்டு இருப்பார்கள் அதனால் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு முறைகளை கையாள வேண்டும். உங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தாலே சிலர் விலகி விடுவார்கள். ஆனால், ஒரு சிலரிடமோ நாம் கடினமான முறையை கையாள வேண்டிவரும். எல்லோருமே கெட்டவர்கள் அல்ல. உங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்பதை அவருக்கு புரியவைக்க வேண்டும். அந்த நபரைப்பற்றியும் சந்தர்ப்பத்தையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரும் அந்த நபரிடம் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், உங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் காதலை நிராகரிக்கலாம். இதோ இந்த சந்தர்ப்பங்களை கையாளுவதற்கும் காதலை நிராகரிப்பதற்கும் சில வழிகளை படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிப்படையாக சொல்லுதல்

வெளிப்படையாக சொல்லுதல்

காதலை நிராகரிப்பதற்கு இதுதான் சிறந்த வழியாகும். பணிவான முறையில் அவரிடம் உண்மையை வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். உங்களிடம் காதல் வயப்படுபவர்கள் அனைவரிடமும் அதனை நிராகரிப்பதற்கான காரணத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரிடம் வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். சில அரிய சந்தர்ப்பங்களில் நீங்கள் ஏன் அவர் காதலை ஏற்க மறுக்கின்றீர்கள் என்பதை சொல்ல வேண்டி வரும்.

நண்பராக ஏற்று கொள்ளுங்கள்

நண்பராக ஏற்று கொள்ளுங்கள்

நீங்கள் அவரை காதலிக்க விரும்பவில்லையென்றாலும், அவர் ஒரு சிறந்த நண்பர் என நீங்கள் நினைத்தால் அவரை நண்பராக ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் எனத் தெரிவியுங்கள். இது உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த நண்பர் கிடைக்க உதவும். இது சரியான முறையில் காதலை நிராகரிப்பதற்கான வழிகளில் ஒன்றாகும்.

உறுதியாக சொல்லுங்கள்

உறுதியாக சொல்லுங்கள்

அவர் காதலை நிராகரிப்பதாக நீங்கள் கூறிய பிறகும் மீண்டும் உங்களிடம் தெரிவித்தால், நீங்கள் அவரிடம் உறுதியாக கூறிவிட வேண்டும். இதுதான் அவரை கையாளுவதற்கான ஒரே வழி. இதுதான் காதலை நிராகரிப்பதற்கான இன்னலான வழியாகும். நீங்கள் அவரை விரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை தெரிவிக்க வேண்டும். உங்களின் எரிச்சல் மூலமாக தெரிவிக்க வேண்டும்.

உங்கள் விருப்பமின்மையை தெரிவிக்க வேண்டும்

உங்கள் விருப்பமின்மையை தெரிவிக்க வேண்டும்

உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் என்றால் இதற்கு சற்று பயப்படுவார்கள். மீண்டும் மீண்டும் வற்புறுத்தல் செய்தால் நீங்கள் அவரை வெறுக்கத் தொடங்கி விடுவீர்கள் என்பதை அவரிடம் கூறுங்கள். இதுவே தெளிவான முறையில் காதலை நிராகரிப்பதற்கான வழியாகும். மிகவும் கடுமையாக கூறவேண்டாம்.

நடிக்க வேண்டும்

நடிக்க வேண்டும்

நீங்கள் புத்திசாலித்தனமாக கையாள நினைத்தால், இது தான் காதலை நிராகரிப்பதற்கான சிறந்த வழியாகும். அவரிடம் சிறிது நடிக்க வேண்டும். எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிர்பாராத நபரிடம் இருந்து காதல் விருப்பம் வந்தால், இந்த காதல் உங்களை மிகவும் வருத்தபடச் செய்துவிட்டது என்று கூறுங்கள்.

புறக்கணிக்க வேண்டும்

புறக்கணிக்க வேண்டும்

எதுவுமே முடியவில்லை என்றால், காதலை நிராகரிப்பதற்கான ஒரே வழி இதுதான். அவரை புறக்கணிக்க வேண்டும். நீங்கள் அவரை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றீர்கள் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். சிலர் இதை அவமானமாக எண்ணி உங்களை விட்டு விலகிவிடுவார்கள். இந்த அறிவுரைகள் உங்களுக்கு கண்டிப்பாக உதவி புரியும்.

உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் இருந்து நீக்கி விட வேண்டும்

உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் இருந்து நீக்கி விட வேண்டும்

நீங்கள் அவர் காதலை நிராகரிப்பது எனது முடிவு செய்து விட்டீர்கள் என்றால், அவருடனான தொடர்பை முற்றிலுமான நீக்குவதற்கு உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் இருந்து அவரை நீக்கிவிடுங்கள். நீங்கள் அவருடன் நண்பராக இருக்க முடியாது என்பதை கூறிவிடுங்கள்.

நீங்கள் அவரோடு நண்பராக இருப்பதற்கு அவர் உங்களை நண்பராக எண்ணி நண்பராக நடத்தினால் மட்டுமே நீங்கள் இருவரும் நண்பர்களாக இருக்க முடியும். இந்த அறிவுரைகள் உங்களுக்கு கண்டிப்பாக உதவி புரியும். முயற்சி செய்யுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Reject A Proposal Effectively

It is never easy to turn down a proposal so easily and you need to deal with it tactfully. This is because each person is different and there are different ways to handling a person. A clue of dislike may be enough for some and for some you really need to handle it the harsh way.
Desktop Bottom Promotion