For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க காதலால உங்கள் நண்பர்கள் அனுபவிக்கும் தொல்லைகள் என்ன தெரியுமா?

|

"உனக்கு ஒன்னு நான் நான் இறங்கி வருவன் டா... நம்ம நட்புக்காக தான் என் உயிரை தருவேன் டா.." இந்த பாடல கேட்கும்போது நண்பர்கள் எல்லாருக்கும் இவ்வளவு சந்தோஷமா இருக்கும். நமக்காக உயிரை கூட விடுற நண்பர்கள் கிடைச்சிருக்கிறது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், அவங்க காதலிக்கும்போதும் சரி, காதலில் தோல்வியடையும்போது சரி உங்க உயிரை உங்க நண்பர்களே எடுத்துருவாங்க...

Signs Your Relationship Is Messing With Your Friendships

90 கிட்ஸ் மற்றும் 20 கிட்ஸ் என்று டிரெண்டில் போயிக்கொண்டிருந்தாலும், இரண்டு கிட்ஸ்லாலும் பாதிக்கப்படுறது அவங்களோட ஃப்ரண்ஸ்தான். டீன் ஏஜ்ல இருக்குற பசங்க, பொண்னுங்க இரண்டும் பேரும் இப்ப இருக்குற காலகட்டத்தில் லவ் பண்ணாதவங்கனு பார்த்தா நூற்றுக்கு ஒரு சதவீதம் தான் இருப்பாங்க. மீதி எல்லாரும் லவ் பண்னிகிட்டு தான் இருக்கிறாங்க. அப்படி லவ் பண்ணுறவங்களோட ஃப்ரண்ஸ் என்ன பாடுபடுறாங்கனு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நியாயம் வேணாமா?

ஒரு நியாயம் வேணாமா?

உங்க ரூம் மேட்ஸ்க்கு லவ் வந்துடுச்சுனா போதும் ஃப்ரன்ஸ்ச பாடா படுத்தி எடுத்துடுவாங்க. அப்படி என்னலாம் பண்ணுவாய்ங்கணு பார்போம். நைட் எல்லாம் தூங்க விடாம டேய் நிலாவுல என் ஆளூ தெரியுரா மச்சினு சொல்லுவாங்க. சரின்னு நிலாவ பார்தா அன்னைக்கு அமாவாசையா இருக்கும். அப்ப நமக்கு வரும் பாருங்க வெறி.

அதகூட விடுங்க, இத அவன் கிட்ட கேட்கும்போது, அன்னைக்கும் இது மாதிரி தான்டா சொன்ன நிலாவுல என் ஆளூ தெரியுறானு. ஆனா அன்னைக்கு பெளர்ணமி இன்னைக்கு அமாவசை. இன்னைக்கு நிலாவே வராது அதுல என் ஆள் தெரியுரானு சொல்லுரியே இது நியாயமானு கேட்டா? லவ்ல இது எல்லாம் சகஜம் மச்சினு ஒரு பதில் சொல்லுவாங்க பாருங்க... அப்படியே அசுர வா அசுர வாங்குற பிஜியமோட ஒரு அருவாளை எடுத்து வெட்டிடலாம்னு தோணும்.

மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பது

மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பது

"ஃபோனை காதில வைச்சா ஒரு நச்சுனு நச்சுனு தொல்லை" நம்ம கவுண்டமணி சார் சொல்லுற மாதிரி. நாள் முழுக்க பேசியே ஃப்ரண்ஸ சாகடிப்பாங்க. ம்ம்..சொல்லு, அப்புறம் அப்படினு பேசுன நாளு வார்த்தையே பேசி நம்ம காதுல ரத்தத்தை வர வச்சிடுவாங்க நம்ம நண்பர்கள்.

அவங்க ஃபோன்ல சார்ஜ் தீர்ந்துபோய் சுவிட்ச் ஆப் ஆகிடுச்சினா. உடனே நம்ம ஃபோனுக்கு கால் பண்ணி தொல்லை பண்ணுவாங்க. நம்ம அப்பதான் சீரியசா பப்ஜி விளையாடிக்கிட்டு இருப்போம். அப்ப வர கோபத்துல உண்மையான பப்ஜி கேம் விளையாடனும் தோணும்.

பாடலால் படும் தொல்லைகள்

பாடலால் படும் தொல்லைகள்

காதலிக்கிற ஃப்ரண்ஸ் படுத்துன பாட்டுல நைட் லேட்டா தூங்கிருப்போம். ஆனா காலையில தூங்க விடாம லவ் பாட்ட போட்டுவிட்டு தூக்கத்த கெடுப்பாங்க பாருங்க.. உங்களுக்கெல்லாம் கும்பிபாகம் தான்டா வரும்னு மனசுல நெனச்சிட்டு அப்படியே கனவுல வந்த கீர்த்தி சுரேஷ்ச தேடிக்கிட்டு இருப்பாங்க.

இவங்கதான் சூப்பர் சிங்கரின் அடுத்த டைட்டில் வின்னருனு நினைச்சிட்டு பாடுகிற பாடல கேட்கும்போது காதில யாரோ ஈயத்தை காய்ச்சி ஊத்துற மாதிரி ஒரு ஃபீல் ஆகும். ஒசானானு பாட சொன்னா ஏன்டா ஒப்பாரி வைக்கிறனு நம்ம கண்ணுல இருந்து தண்ணி வந்துடும்.

MOST READ: பெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கின்றதாம் தெரியுமா?

மொக்க கவிதையால் காதில் வரும் ரத்தம்

மொக்க கவிதையால் காதில் வரும் ரத்தம்

மத்த இம்சையெல்லாம் பொருத்துக்கலாம்னு பார்த்தா அடுத்த ஒரு ஆயுதத்தை கையில எடுப்பங்க பாருங்க. அது பேருதான் கவிதை. காதலிக்க ஆரம்பிச்சாலே கவிஞர் வைரமுத்து மாதிரி கவிதை அருவியா வந்து கொட்டுதுனு சொல்லி அதுல நம்மல முக்கி சாகடிப்பாங்க.

"காட்டுல இருக்குது சிங்கம்... நீ தான் என்னோட தங்கம்னு" ஒரு மொக்க கவிதைய சொல்லுவாங்க. அப்படியே சுவத்துல முட்டிகிட்டு சாகலாம்னு தோனும். இதுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் டா மச்சான்னு சொல்லுவாங்க. அட போங்க பாஸ் நா ரூம் காலி பண்ணிட்டு போறன்னு சொல்லிட்டு அதே ரூம்ல தான் இருப்போம்.

தேய்ந்து அழுது கொண்டிருக்கும் கண்ணாடி

தேய்ந்து அழுது கொண்டிருக்கும் கண்ணாடி

உலக அழகி ஐஸ்வரியா ராய் கூட இவங்கிட்ட தோந்துபோய்டுவாங்க. அந்த அளவுக்கு எப்ப பாத்தாலும் கண்ணாடி முன்னாடியே நின்னுகிட்டு சிரிக்குறது, மேக்கப் போடுறது, அடிக்கடி ட்ரெஸ் சேன்ஞ் பண்ணுறதுனு செஞ்சிக்கிட்டே இருப்பாங்க. கண்ணாடிக்கு கண் இருந்தா அழுதுடும். கூடவே நம்மள வச்சி நல்லா இருக்கேனானு நல்லா செய்வாங்க.

ஒரு சின்ன சண்டை வந்தாலும் உடனே 2 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுல இருந்து இப்ப நடந்தது வரை ஒன்னுவிடாமா சொல்லி பொலம்புவாங்க.. அவ ஆள் கிட்ட கூட இவ்வளவு பேசியிருப்பாளானு தெரியாது. அன்னைக்கு நைட் தூங்க மாதிரிதான். அவ லவ்வர் கூட வெளிய போறப்ப நம்ம வரலனு சொன்னாலும் கம்பல் பண்ணி கூட்டிடுபோய் தனியா தனியா தவிக்க விட்டுருவாங்க.

MOST READ: உங்களுக்கு பிடிச்ச பொண்ணு உங்கள காதலிக்கணுமா? இத பண்ணுங்க போதும்...!

ரொம்ப நல்லவர்களா நடந்து கொள்ளும் நண்பர்கள்

ரொம்ப நல்லவர்களா நடந்து கொள்ளும் நண்பர்கள்

அப்புறம் எப்ப பார்த்தாலும் லவ் சாங்க கேட்டுகிட்டு தேஞ்சி போன ரேடியோ மாதிரி பாடுறது கேக்கும் போது இப்பவே பாழங்கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்காலம்னு தோனும். நைட் தூங்கும் போது கூட தூக்கத்துல உலரது, எனக்கு அப்படி கனவு வந்துச்சி, இப்படி கனவு வந்திச்சினு மனுசன போட்டு சாக அடிக்கிறது.

என் ஆளூ இப்படி அப்படினு சொல்லும்போது, நம்ம மட்டும் சிங்கிளா இருக்கோம்னு தோனும். அப்புறம் கமிட்டாகி நம்மள சாகடிக்கிற மாதிரியே, இன்னொருத்தர நம்ம சாகடிக்கனுமானு ரொம்ப நல்லவங்களா நடந்துப்போம் (மைண்ட் வாய்ஸ்: லவ் பண்ண யாரும் கிடைச்சிருக்க மாட்டங்க). யாரு கூட வேணாலும் ஃப்ரண்டா இருக்கலாம். ஆனா லவ் பண்ணுறவங்க கூட மட்டும் ஃப்ரண்டா இருக்க கூடாது சொல்லுவாங்க. ஏன்னா லவ் பண்றவனோட இருக்குறதும், கெட்டு போன சட்னியா சாப்பிடறதும் நமக்கு தான் பிரச்சனை பாஸ். இது மாதிரி நாட்டுல நிறைய பேர் கஷ்டபட்டுட்டு இருக்காங்க.... இன்னும் கஷ்டபடவும் இருக்காங்க....

நண்பன் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும், அவங்களுக்கோ, அவங்க காதலுக்கோ ஏதோ ஒரு பிரச்சனைனா முன்னாடி முதல் ஆள வந்து நிக்கிறது நண்பர்கள்தான். அதனால உங்க ஃப்ரண்ஸ் படுற கஷ்ட பார்த்து கொஞ்சமா டார்ச்சல் பண்ணுங்க.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Relationship Is Messing With Your Friendships

Here are the signs how your relationship is messing with your friendships.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more