For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஒரு மோசமான சுயநலவாதியை காதலிக்கிறீங்கனு அர்த்தமாம்!

சுயநல குணம் கொண்டவர்களைக் கையாள்வது மிகவும் கடினம், ஏனெனில் அவர்களின் மனதில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது.

|

சுயநல குணம் கொண்டவர்களைக் கையாள்வது மிகவும் கடினம், ஏனெனில் அவர்களின் மனதில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. அவர்கள் உங்களுக்கு உதவலாம், பின்னர் சாதாரணமாக நடந்து கொள்ளலாம், ஆனால் அவர்கள் மனதில் என்ன சுயநல நோக்கம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

Signs You Are the Selfish Partner in Your Relationship

உங்கள் வாழ்க்கையில் ஒரு சுயநல நபரைக் கொண்டிருப்பதே சவாலக இருக்கும் பட்சத்தில், நீங்கள் அப்படிப்பட்ட ஒருவருடன் காதலில் இருந்தால் அது முழுமையான நரகமாகும். அதற்கும் மேல், உங்கள் உறவில் நீங்கள் சுயநல நபராக இருந்தால் என்ன செய்வது? உங்கள் காதலில் நீங்கள் சுயநலவாதிகளாக இருக்கிறீர்களா என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் விரும்பும்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பது

நீங்கள் விரும்பும்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பது

ஒவ்வொரு முறையும் உங்கள் துணை உங்களுடன் கலந்துரையாடி, அவர்கள் தங்கள் சொந்த மகிழ்ச்சியைக் கைவிடுவதன் மூலம் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்தால், உங்கள் உறவில் நீங்கள் சுயநலவாதி என்பதற்கு இது ஒரு பெரிய அறிகுறியாகும். இருப்பினும், இது ஆரோக்கியமானதல்ல. இது மனக்கசப்புக்கு வழிவகுக்கும், இது உறவை அழிக்கக்கூடும்.

அமைதியாக டார்ச்சர் செய்வது

அமைதியாக டார்ச்சர் செய்வது

பக்குவமான முறையில் கடினமான உரையாடல்களுக்குப் பதிலாக, உங்கள் துணை உங்களுடன் கலந்துரையாட எவ்வளவு விரும்பினாலும் அமைதியாக இருக்க நீங்கள் எப்போதும் முடிவு செய்கிறீர்கள். உங்கள் துணை மீது உங்களுக்கு காயம் அல்லது கோபம் வரும்போது நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்காதது சுயநலமாகும்.

நீங்கள் எப்போதும் சரியானவர் என்று வலியுறுத்த முயற்சிப்பது

நீங்கள் எப்போதும் சரியானவர் என்று வலியுறுத்த முயற்சிப்பது

உங்கள் சொந்தக் கண்ணோட்டத்திற்கு மட்டுமே நீங்கள் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தால், உங்கள் உறவு தோல்வியடையும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் கூட்டாளரின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் இருந்தால், உங்கள் சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் உண்மையில் இந்த உறவில் மட்டுமே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் துணையை அடிக்கடி சுயநலவாதி என்று கூறுவது

உங்கள் துணையை அடிக்கடி சுயநலவாதி என்று கூறுவது

நம்மைப் பற்றி நமக்குப் பிடிக்காத குணங்களை பொறுத்துக்கொள்வது மிகவும் கடினம். ஆகவே, துணையை சுயநலவாதிகள் என்று குற்றம் சாட்டும்போது அதன் அர்த்தம் என்னவெனில், அவர்கள் உங்கடைய சுயநல விருப்பங்களை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான்.

துணை உங்களுக்காக மாற வேண்டும் என்று நினைப்பது

துணை உங்களுக்காக மாற வேண்டும் என்று நினைப்பது

உங்கள் துணை உங்கள் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அவர்களின் ஆளுமை மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றுவார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு உறவில் சுயநலத்துடன் செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் விருப்பப்படி அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள முயற்சித்தாலும், அது நீண்ட காலத்திற்கு உதவப்போவதில்லை.

உங்கள் துணையின் தேவையை புறக்கணிப்பது

உங்கள் துணையின் தேவையை புறக்கணிப்பது

ஆரோக்கியமான உறவின் ஒரு முக்கிய பகுதி, நம் கூட்டாளருக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதைப் பற்றி அறிந்திருப்பதுடன், குறைந்தபட்சம் நேரத்தின் ஒரு பகுதியையாவது, அவர்களின் விருப்பங்களுக்கு இடமளிக்க முயற்சிப்பதாகும். உங்கள் துணையை நீங்கள் எப்போதும் மகிழ்விக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. உங்கள் கூட்டாளியின் தேவைகளை புரிந்து கொண்டாலே போதும்.

உறவை முறித்துக் கொள்வதாக மிரட்டுவது

உறவை முறித்துக் கொள்வதாக மிரட்டுவது

உங்கள் துணையை விட்டு வெளியேறுவதாக நீங்கள் தொடர்ந்து மிரட்டினால், அவர்கள் உங்களை நம்புவதற்கு வாய்ப்புகள் குறைவு. தங்கள் கூட்டாளரை உண்மையாக நேசிக்கும் ஒருவர் போதுமான அளவு முதிர்ச்சியடைந்து, போதுமான சுய விழிப்புணர்வைக் கொண்டிருப்பார்,நீங்கள் விரும்பும் ஒன்றை பெறாத காரணத்தினால் நீங்கள் விரும்பும் ஒருவரைக் கைவிடுவதாக அச்சுறுத்துவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You Are the Selfish Partner in Your Relationship

Take a look at some signs that suggest you are the selfish person in your relationship.
Story first published: Saturday, July 3, 2021, 11:34 [IST]
Desktop Bottom Promotion