Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
உங்க காதலில் இந்த அறிகுறிகள் இருந்தா உங்க காதலுக்கு தகுதியில்லாத ஒருவரை நீங்க காதலிக்கிறீங்கன்னு அர்த்தம்!
உறவைக் கையாள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. நீங்கள் காதலில் மிகவும் ஆழமாக இருக்கும்போது, உறவுகளில் உண்மையைக் கண்டறிவது மிகவும் கடினமானதாகும்.
உறவைக் கையாள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. நீங்கள் காதலில் மிகவும் ஆழமாக இருக்கும்போது, உறவுகளில் உண்மையைக் கண்டறிவது மிகவும் கடினமானதாகும். சில சமயங்களில் உங்கள் பங்குதாரர் மற்றும் உறவுக்காக நீங்கள் செலுத்தும் நேரம், ஆற்றல் மற்றும் முயற்சிக்கு மதிப்பு இல்லை, அங்கு நீங்கள் மட்டுமே அதிக நேரம் இருப்பீர்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் துணை உங்கள் நேரத்திற்கு மதிப்புள்ளவரா என்பதைக் குறிக்கும் அறிகுறிகளை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலுக்கு நீங்கள் செய்யும் முயற்சியும், செலவழிக்கும் நேரமும் முற்றிலும் பயனற்றதாகும்.

அவர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை
உறவில் முயற்சி செய்ய உங்கள் துணையை தொடர்ந்து நச்சரிப்பது ஆரோக்கியமான அறிகுறி அல்ல. உறவில் போதுமான நேரத்தையும், ஆற்றலையும், முயற்சியையும் அவர்கள் செலவிடவில்லை என்றால், நீங்கள் ஒன்றும் செய்யக்கூடாது, ஏனென்றால் ஒரு நாளில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப அல்லது அழைக்கவோ இயலாத அளவிற்கு யாரும் மிகவும் பிஸியாக இருக்க முடியாது.

அவர்களின் செயல்கள் நியாயமற்றதாக இருக்கும்
உங்கள் துணையின் சந்தேகத்திற்குரிய செயல்களை நீங்கள் எவ்வளவு காலம் நியாயப்படுத்த முடியும்? பொய் சொல்வது, சாக்குப்போக்கு சொல்வது, உங்களை சந்திக்க தாமதமாக வருவது அல்லது சிறிது நேரம் காணாமல் போவது ஆகியவை உங்கள் உறவை மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வைக்கும் சில விஷயங்களாகும்.

தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் பதட்டம்
ஒரு நல்ல உறவில் இருப்பது எளிதான மற்றும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். அந்த உறவில் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் உங்கள் துணை உங்களுக்கு ஆதரவளிப்பவர் மற்றும் உங்களை நிம்மதியாக உணர வைப்பார். இருப்பினும், இது முற்றிலும் எதிர்மாறாக இருந்தால், அத்தகைய நபருக்கு உங்கள் சக்தியையும், காதலையும் வீணடிப்பதில் ஒரு பயனும் இல்லை.

உங்கள் உறவை பற்றி அதிகம் புகாரளிப்பது
சில சமயங்களில் உங்கள் துணையைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் பேசுவது சாதாரண விஷயமாக இருக்கலாம், ஏனெனில் நீங்கள் எப்போதாவது ஒருமுறை மூச்சுவிட வேண்டியிருக்கும். ஆனால் அஅது புகாராக மாறும்போது, ஏதோ தவறு இருக்கிறது. நீங்கள் நீண்ட காலமாக எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கக்கூடாது, நீங்கள் அவ்வாறு செய்தால், உறவில் நீங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உறவில் ஈடுபாடு இல்லாமை
உங்கள் துணை உங்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் உறவில் பாதுகாப்பு உணர்வை வழங்க முடியாவிட்டால், அத்தகைய நபருடன் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் உங்கள் துணையுடன் இருக்கும் போது நீங்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சிகவும் உணர வேண்டும். மாறாக வெறுமையாக உணர்ந்தால் அது அர்த்தமற்ற உறவாகும்.

உங்களை பேச அனுமதிக்காமல் இருப்பது
உறவு என்பது தொடர்பு மற்றும் புரிதல் பற்றியது. உங்கள் பங்குதாரர் தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள மறுத்தால், அவர்கள் உண்மையில் உறவை முன்னோக்கி கொண்டு செல்வதில் முதலீடு செய்ய மாட்டார்கள். அப்படிப்பட்ட உறவு உங்களுக்கு சுமையாகத்தான் இருக்கும்.



Click it and Unblock the Notifications
