Just In
- 15 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 1 day ago
மைதா போண்டா
- 1 day ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 1 day ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- News
சென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- கடை ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Movies
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த சம்வங்களால்தான் பெண்கள் ரொமான்டிக்கான காதலை வெறுக்க தொடங்குகிறார்களாம் தெரியுமா?
மனிதர்களாகிய நாம் நம் உறவுகள் நம் வாழ்வில் அமைதியையும் அன்பையும் தரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சொல்வது தவறல்ல. மோசமான உறவில் இருக்க யாருமே விரும்பமாட்டார்கள். எனவே தாங்கள் காதலிப்பவர்கள் சரியானவர்களா என்று அடிக்கடி உறுதிசெய்து கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் எல்லோரும் சரியான நபரைப் பெறுவதில்லை என்பதை நம்மால் மறுக்க முடியாது. அன்பும், அக்கறையும் ஒருவரை காதலிப்பது என்பது மிகவும் கடினமாகும்.
இதன் விளைவாக சிலர் தங்கள் உறவில் ஆர்வத்தை இழக்க நேரிடலாம் மற்றும் யாரையும் ஒருபோதும் தேட விரும்பமாட்டார்கள். இந்த உறவுச்சிக்கல் பெரும்பாலும் பெண்களுக்குத்தான் ஏற்படும். காதலில் விருப்பமில்லாத, ரொமான்ஸ் என்றால் அறவே பிடிக்காத பெண்களை அனைவரும் வாழ்க்கையில் சந்தித்து இருப்போம். அவர்கள் அவ்வாறு மாறியதற்கு பின்னால் நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடினமான முன்னாள் உறவுகள்
தவறான மற்றும் நச்சு உறவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்குப்பின் உறவுகள் மற்றும் ஒருவருடன் டேட்டிங் செய்யும் எண்ணத்தை வெறுக்கக்கூடும் என்பது வெளிப்படையானது. மீண்டும் தங்கள் நம்பிக்கையை வேறொருவருக்குள் வைப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை. உறவுகள் பயமுறுத்துவதாக அவர்கள் காணக்கூடும். மீண்டும் அதே நச்சுத்தன்மையையும் துஷ்பிரயோகத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வது என்று அஞ்சுகிறார்கள்.

அவர்கள் தங்கள் துணையால் ஏமாற்றப்பட்டிருக்கலாம்
ஒரு காலத்தில் தங்கள் கூட்டாளர்களால் ஏமாற்றப்பட்ட பெண்கள் உறவுகள் மற்றும் டேட்டிங் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளலாம். டேட்டிங் மற்றும் உறவுகள் நேரத்தை வீணடிப்பதாக அவர்கள் நினைக்கலாம். அவர்கள் நம்பிக்கையை வெல்லும் ஒரு கூட்டாளரைக் கண்டுபிடித்து, எல்லா உறவுகளும் ஒன்றல்ல என்று நம்பும்படி செய்யாவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருக்க விரும்புவார்கள்.

அவர்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பவில்லை
உறவுகள் மற்றும் டேட்டிங் ஆகியவற்றை வெறுக்கும் ஒரு பெண்ணுடன் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்கினால், அவர் தனது தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறாரா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்? பெண்கள் தங்கள் உறவை வலுப்படுத்துவதற்கும், தங்கள் கூட்டாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் தங்கள் தனித்துவத்தை விட்டுச் கொடுப்பது பெரும்பாலான உறவுகளில் காணப்படுகிறது. அவர்கள் தங்கள் கூட்டாளர்களின் விருப்பத்தேர்வுகள், விருப்பங்கள் மற்றும் கண்ணோட்டங்களில் மகிழ்ச்சியைக் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சில பெண்கள் தங்கள் உறவின் பொருட்டு தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாமல் இருக்கலாம், எனவே அவர்கள் உறவுகளை வெறுக்க முனைகிறார்கள்.

அவர்கள் கமிட்மென்ட்க்கு பயப்படுவார்கள்
உறவில் கமிட்மென்ட் அனைவரையும் பயமுறுத்தும், ஏனெனில் ஒருவர் அவர்களின் உறுதிமொழியைக் கடைப்பிடிக்க வேண்டும். சிலருக்கு அர்ப்பணிப்பு ஒரு தடையாகத் தோன்றலாம். ஒரு உறவில் அர்ப்பணிப்புக்கு அஞ்சும் பெண்கள் ஒன்றில் சேருவதை வெறுக்கக்கூடும். எந்தவிதமான கமிட்மென்ட்டையும் தவிர்ப்பதற்கும், தங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் அவர்கள் அதிலிருந்து விலகி இருக்க விரும்பலாம்.

தங்களைச் சுற்றி மோசமான உறவுகளை பார்ப்பது
சில பெண்கள் உறவுகளை வெறுப்பதற்கான ஒரு காரணம், அவர்களைச் சுற்றியுள்ள உறவுகள் விரைவில் உடைந்தோ அல்லது மோசமாதானகவோ இருக்கலாம். சில சிக்கல்களால் மக்கள் காதல் முறிந்ததும் நம்பிக்கையை இழப்பதையும் கசப்பாக இருப்பதையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். இத்தகைய மனக்கசப்பு மற்றும் கசப்பான உணர்வுகளிலிருந்து விலகி இருக்க, சில பெண்கள் உறவுகள் மற்றும் டேட்டிங் என்ற கருத்தை வெறுக்கக்கூடும்.
கொரோனா சிகிச்சை குறித்து பரவலாக இருக்கும் மூடநம்பிக்கைகள்... இனிமேலும் இதெல்லாம் நம்பாதீங்க...!

சண்டை மற்றும் மோதல் குறித்த பயம்
பெரும்பாலும் தம்பதிகள் தங்கள் உறவில் சில மோதல்களை சந்திக்க நேரிடும். ஏனென்றால், தம்பதிகள் ஒருவருக்கொருவர் உடன்படாத நேரங்கள் இருக்கலாம். உண்மையில், அவர்கள் ஒருவருக்கொருவர் சில பழக்கவழக்கங்களையும் தேர்வுகளையும் விரும்ப மாட்டார்கள். இது சில நேரங்களில் உறவில் பல மோதல்களுக்கு வழிவகுக்கும். எனவே, சில பெண்கள் உறவுகளை வெறுப்பதற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.