Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
உங்க லவ்வர் காபி பிரியரா? அப்படினா அவங்க கூட நீங்க 'எப்படி' டேட்டிங் செய்யணும் தெரியுமா?
உங்கள் காதலன் அலல்து காதலி காபி பிரியராக இருந்தால், பரிசு கொடுப்பது அல்லது அவர்களை ஈர்ப்பது கூட மிகவும் எளிது. சில நல்ல காபி சமையல் குறிப்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் காதலன் அல்லது காதலியை சந்திக்கும்போது அல்லது நண்பர்கள் அல்லது வேறு யாரையாவது சந்திக்கும்போது முதலில் கூறுவது 'காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம்' என்ற வார்த்தைதான். ஒரு உரையாடலுக்கு நல்ல தொடக்கமாக இருப்பது, காபி. இது இருவரின் மனநிலையை அமைதிப்படுத்தி உற்சாகத்தோடும் புத்துணர்ச்சியாகவும் இருக்க வைக்கிறது. சினிமாக்களில் காதல் படங்களில் காட்டப்படும் காட்சி பெரும்பாலும் காபியோடுதான். முதல் சந்திப்பு அல்லது அவர்களின் உணர்ச்சி ரீதியான சந்திப்பு காபியோடு நிறைகிறது.

ஒரு காபி சாப்பிட டேட்டிங்கிற்கு போகலாமா? திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் நிச்சயமாக நிஜத்தில் நாம் அடிக்கடி கேட்கும் உரையாடல் காபி சாப்பிடலாமா? என்பதுதான். உங்களுக்கு வாசனை ஒவ்வாமை இல்லாவிட்டால் காபி ஒரு அற்புதமான மனநிலையை உங்களுக்கு கொடுக்கும். உங்கள் காதலரை ஒரு நல்ல காபியுடன் டேட்டிங் செய்வதால், பெறும் நன்மைகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

முதலாவதாக இருப்பது
காபி பிரியர்கள் பெரும்பாலும் விழித்திருப்பார்கள். நீங்கள் பல்வேறு சாகசங்களைச் செய்ய விரும்பும் போது இது ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும். அந்த பயணங்களை மேற்கொள்வது, ஒரு கூட்டாளருடன் நீங்கள் எப்போதும் செய்ய விரும்பும் சில செயல்களைச் செய்வது பற்றி அவர்கள் அனைவரும் அதிக மனநிலையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் காதலன் அல்லது காதலியை நல்ல காபி கிடைக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

மகிழ்ச்சியான மனநிலை
காபி நம் மனநிலையை அமைதிப்படுத்துகிறது. உங்க காதலன் அல்லது காதலி காபியை உட்கொண்டவுடன், அவர்களின் மனநிலை உயர்கிறது. மேலும் அவை அனைத்தும் உங்களுடன் இருக்கும்போது மகிழ்ச்சியாக மாறுகிறது. ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, 4 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பவர்கள் 20 % குறைவான மன அழுத்தத்தை கொண்டிருப்பார்கள் என்கிறது.

பரிசளிப்பது எளிது
உங்கள் காதலன் அலல்து காதலி காபி பிரியராக இருந்தால், பரிசு கொடுப்பது அல்லது அவர்களை ஈர்ப்பது கூட மிகவும் எளிது. சில நல்ல காபி சமையல் குறிப்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள், காபியைப் பற்றி கொஞ்சம் படித்து, காபி தொடர்பான பரிசுகளை குவளைகள் மற்றும் நல்ல காபித்தூள் போன்றவற்றை வாங்கிக்கொடுங்கள். இதற்கு ஆன்லைன் ஷாப்பிங் உங்களுக்கு உதவும்.

நகரத்தில் சிறந்த காபிகளை அருந்துங்கள்
நீங்கள் ஒரு காபி பிரியருடன் நபருடன் டேட்டிங் செய்வதால், நீங்கள் உண்மையில் பல காபி இடங்களுக்குச் செல்வீர்கள். மேலும் இந்த பானத்தில் நீங்கள் எங்கு பெறுகிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். சில டேட்டிங்கிற்கு பிறகு நீங்கள் ஒரு காபி ரசனையாளராக மாறுவீர்கள்.

அவர்களை உற்சாகப்படுத்துவது எளிது
எல்லா கஃபேக்களிலும் வேறு பல விருப்பங்கள் இருப்பதால் உங்களுக்கு காபி பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. நீங்கள் சாப்பிடக்கூடிய பல சிற்றுண்டிகள் உள்ளன. உங்கள் காதலன் அல்லது காதலி நல்ல மனநிலையில் இல்லை என்றால் நீங்கள் செய்ய வேண்டியது அவர்களை ஒரு நல்ல காபி இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த சேர்க்கைகளை வாங்கிதருவதுதான். எனவே நீங்கள் அவர்களுக்கு பிடித்த நபராக மாறுவீர்கள்.ஏனென்றால் ஒரு நல்ல கப் காபியை எதுவும் வெல்ல முடியாது!



Click it and Unblock the Notifications
