For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை

By Mahibala
|

ஒன்றாக சேர்ந்து படிக்கும் இடத்திலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ ஒன்றாக பஸ்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது என நம்முடைய வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க நேரிடும் ஒரு நபரின் மீதுதான் பெரும்பாலானோருக்கும் காதல் உண்டாகிறது.

அதேபோல தான் சினிமா நடிகர், நடிகைகளின் காதல் என்பது மிக அதிகமாக பொதுவெளியில் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் சினிமா மீதும் காதல் மீதும் அவர்களுக்கு இருக்கிற ஈர்ப்பு தான்.

rajini to vijay

குறிப்பாக எல்லா நடிகர், நடிகைகளின் காதல் கதைகளை கேட்க நேரிட்டாலும் அதில் ஒரு சிலருடைய காதல் கதைகள் நமக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். ஏனென்றால் அவர்கள் நம்முடைய மனதுக்கு நெருக்கமான ஸ்பெஷல் பர்சனாக இருப்பார்கள். அப்படி நம்முடைய மனம் கவர்ந்த முக்கிய மற்றும் முன்னணி நடிகர், நடிகையர்களின் காதல் கதைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கிசுகிசுக்கள்

கிசுகிசுக்கள்

பெரும்பாலும் எல்லா முக்கிய பிரபல கதாநாயகர்கள், நாயகிகளின் சினிமா அனுபவங்களில் அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உடன் நடிப்பவர்களுடன் இணைத்து கிசுகிசுக்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. சிலர் அதற்கு ரியாக்ட் செய்வதுண்டு. மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டவர்கள் அதை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு கடந்து சென்றுவிடுவதுண்டு. அதெல்லாம் தாண்டி வருகிறவர்கள் தான் ஃபீல்டில் நிலைத்து நிற்கிறார்கள். அப்படி வந்த கிசுகிசுக்களை கடந்த வந்த விதம் பற்றியும் காதல் வயப்பட்டது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

MOST READ: இந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்

ரஜினி

ரஜினி

ரஜினி பார்ப்பதற்கு தான் மிகவும் சாதுவானவர். அவருடைய வாழ்க்கையிலும் காதல் விளையாட்டுக்கள் இல்லாமலா இருக்கும். பழைய தமிழ் நடிகையான லதா எம்ஜிஆர், சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் பிறகு ரஜினி கூடவும் நடித்தார். அவரை ரஜினி காதலித்ததாகவும் அதற்காக எம்ஜிஆர் ரஜினியை மிரட்டித் தாக்கச் சென்றதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்தன. அதன்பின்னர் அமைதி காத்த ரஜினி லதா என்ற பெயரில் உள்ள ஒரு பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

1980 களில் பல படங்களில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த கமல்ஹாசனுடன் ஸ்ரீதேவிக்குக் காதல் இருப்பதாகவும் இருவரும் மிகவும் சரியான ஜோடி என்று ஒட்டுமொத்த தமிழ்நாடே பேசியது. ஆனால் அப்போதே ஸ்ரீதேவி அதை மறுத்துவிட்டார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்றும் சொன்னார். அதன்பின் பாலிவுட் சினமா இயக்குநரும் தயாரிப்பாளருமான போனி கபூரை காதலித்து இரண்டாவது மனைவியானார்.

காதல் நாயகன் கமல்ஹாசன்

காதல் நாயகன் கமல்ஹாசன்

காதல் என்றாலே கமல்ஹாசன் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். தன்னுடைய இளமை காலம் முதலே பல கிசுகிசுக்களை சந்தித்தவர் கமல். வாணி, சரிகா, கௌதமி என மூன்று மனைவிகளுடன் வாழ்ந்தவர். மூன்று பேருமே காதலித்து மணமுடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சில காலம் இவர் சிம்ரனுடன் காதலில் இருந்ததான கிசுகிசுக்கள் வந்தபோது தான், சரிகா இவரை விட்டு பிரிந்து சென்றார். அதோடு மட்டுமில்ல, ஆரம்ப காலம் தொட்டே ஹீவித்யாவுடன் கமலுக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததாக மிகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

MOST READ: சீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...

அஜித்

அஜித்

இளம்பெண்களின் ஆசை கனவு நாயகனாக அரவிந்தசாமிக்கு அடுத்ததாக உலா வந்தவர் என்றால், அது அஜித் தான். தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான புதிதில் அஜித் தன்னுடன் நடித்த சுவாதியை காதலித்ததாக செய்திகள் பரவ ஆரம்பித்தன. ஆனால் அதன்பின் அற்த கிசுகிசு முடிந்தவுடனேயே அஜித்துக்கும் அவருடன் காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீராவுடன் அஜித்துக்கு பயங்கரமான காதல் என்றும் அவர்கள் இருவரும் வெளியில் சென்றதுபோன்ற சில புகைப்படங்களும் ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் ஹீரா, அஜித் இருவருமே அதங்கு எதிர்ப்பு சொல்லவில்லை. இந்நிலையில் தான் அமர்க்களம் படத்தில் நடித்த ஷாலினையை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணம் அஜித் - ஹீரா மற்றும் விஜய் - ஷாலினி என்ற இரண்டு கிசுகிசுக்களுக்குமே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது என்றே சொல்லலாம்.

குஷ்பு

குஷ்பு

சி்ன்னத்தம்பி படம் வெளியான சமயத்தில் பிரபு - குஷ்பு காதல் கதை உருவானது. அதனால் சிவாஜி வீட்டில் ஏராளமான பிரச்சினைகளும் உண்டாகின. பிரபு தனக்கு தாலி கட்டாமலேயே தன்னுடன் குடும்பம் நடத்தி வருவதாக குஷ்புவும் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அதன்பின் குஷ்பு - கார்த்திக் பற்றிய காதல் கதைகள் வெளியாகின. ஆனா்ல அவர்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் என்று வெளியில் சொல்லப்பட்டது. அதன்பின்னர் தான் சுந்தர்.சி மீது குஷ்புவுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

சிம்பு

சிம்பு

கமல்ஹாசனுக்கு அடுத்ததாக அதிகம் காதலில் சிக்கியது என்றால் அது நம்ம எஸ்டிஆர் சிம்பு தான். யாரைப் பார்த்தாலும் காதலில் விழுந்துவிடுவார். அப்படி அவர் ரஜினியின் மகளும் தனுஷின் தற்போதைய மனைவியுமான ஐஸ்வர்யாவை காதலித்து, அவர் இவரை விட்டுவிட்டு தனுஷை திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்தது தான். அடுத்ததாக நயன்தாராவை உருகி உருகி காதலித்தார். அடுத்ததான ஹன்சிகா. அதுவும் பிரேக் அப். அடுத்து யாரென்று தெரியவில்லை.

 நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா இயல்பிலேயே மிகவும் இளகிய மனம் கொண்டவர். அதனால் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு காதலில் விழுந்து விடுகிறார். அந்த வகையில் நயன்தாராவின் முதல் காதல் என்றால் அது சிம்பு என்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். அவர்களுடைய சில அந்தரங்கக் காட்சிகள் கூட வெளியாகியது. அதன்பின் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, வில்லு படத்தில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தபோது, பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. அந்த சமயத்தில் நயன் மிகவும் தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் விமர்ச்சிக்கப்பட்டார். இவருக்காக பிரபுதேவா தன்னுடைய மனைவியை விவாகரத்தும் செய்தார். அதன்பின் ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்கள் வந்தபோது ஆர்யாவுடனும் சேர்த்து பேசப்பட்டார் நயன்தாரா. அதற்குப் பிறகுதான், நானும் ரௌடி தான் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார் நயன். இதோ இப்போ அப்போ என்று அவர்களுடைய கல்யாணப் பேச்சுக்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.

MOST READ: ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...

விஜய்

விஜய்

தன்னுடைய தந்தை இயக்கிய படங்களில் மட்டுமே ஆரம்ப காலங்களில் விஜய் நடித்து வந்தார். அந்த சமயங்களில் தன்னுடைய ரசிகன், விஷ்ணு போன்ற படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த சங்கவியுடன் தீவிர காதலில் இருப்பதாக செய்திகள் பரவின. அதன்பின் விஜய்யின் வளர்ச்சி வேறு ஒரு தளத்துக்குப் போன பின், காதலுக்கு மரியாதை அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. அந்த படத்தைப் பார்த்துவிட்டு, தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் இது சினிமாவே இல்லை, விஜய் ஷாலினிக்கு இருக்கிற உண்மையான காதல் என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின், கில்லியில் தொடங்கி, திருப்பாச்சி, குருவி என தொடர்ந்து நடித்த த்ரிஷாவையும் விஜய்யையும் வைத்து காதலர்கள் என கிசுகிசுக்கள் வந்தன. இதற்கிடையில் தான் லண்டனைச் சேர்ந்த சங்கீதாவை மணந்து தன்மீதான கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

rajini to vijay - celebraties love and gossips

Tamil cinema, which has produced some wonderful on-screen romances over the years, has not failed to play cupid off-screen as well, in the lives of famous celebrities. While many stars fall in love with each other, only few go on to tie the knot and live a happy life ever after.
Story first published: Thursday, February 14, 2019, 12:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more