For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி காதலர் தினமே கிடையாது - காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக அரசு அறிவிப்பு

காதலர் தினத்தை பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்று சகோதரிகள் தினமாக அறிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பி வருகிறது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இது.

By Mahibala
|

காதலர் தினம் என்று சொன்னாலே உண்டாகிற சந்தோஷத்துக்கும் புத்துணர்ச்சிக்கும் அளவிருக்காது தான். காதலர் தினத்தன்று எங்கு வெளியில் போகப் போகிறோம். என்ன கிஃப்ட் வாங்கலாம் என்பது பற்றி ஒரு வாரத்துக்கும் முன்பாக இருந்தே திட்டமிட்டு வைத்து விடுவோம்.

Valentines Day

அந்த நாள் நெருங்க நெருங்க உயிர்கூட்டில் மணி அடித்துக் கொண்டே இருக்கும். நம்முடைய காதல் ஜெயிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் காத்திருப்பையும் தருகிற ஒரு சுகமான வலி தான் காதல். அதன் கொண்டாட்டம் தான் காதலர் தினம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதலர் தினம்

காதலர் தினம்

காதலர் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கும் முன்பாக இருந்தே அதற்கான ஒத்திகைகள் பிப்ரவரி 7 முதலே தொடங்கிவிடும். ரோஸ் தினம், மு்த தினம், புரபோசல் தினம், சாக்லேட் தினம், கட்டிப்பிடிக்கும் தினம் என வரிசையான ஒரு வாரத்துக்கு மனம் கொண்டாட்டத்தில் துள்ளும்.

MOST READ: என் பொண்டாட்டி 15 ஆண்களை ஏமாத்தி இருக்கா... இப்ப நான்... கதறி அழுத 16 வது கணவன்

வந்தது ஆப்பு

வந்தது ஆப்பு

இது உலகம் தழுவிய ஒரு கொண்டாட்டம். இந்த கொண்டாட்டத்து ஒரு நாடு ஆப்பு வைத்திருக்கிறது. தன்னுடைய நாட்டினர் யாரும் காதலர் தினம் இந்த வருடம் கொண்டாடக்கூடாது என்று அந்த நாட்டின் அரசாங்கம் சென்ற ஆண்டே அறிவித்திருக்கிறது. இது அந்த நாட்டு இளைஞர்களுக்கு பெரிய இடி விழுந்தது போல் ஆகியிருக்கிறது. அதனால் இந்த ஆண்டும் இளைஞர்கள் மனக்கலக்கத்தில் தான் இருக்கிறார்கள்.

எந்த நாடு

எந்த நாடு

யாராவது காதலர் தினத்தை போய் கொண்டாட வேண்டாம்னு சொல்லுவாங்களா? அதுவும் ஒரு அரசாங்கமே அப்படி சொல்லுமா என்று குட்டால் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. அதனாலேயே எல்லோருக்கும் அது எந்த நாடு என்று தெரிந்து கொள்ள அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். அது வேற எங்கயும் இல்லங்க. நம்ம பக்கத்துல இருக்கிற பங்காளி நாடு பாகிஸ்தானில் தான் இந்த விநோத முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கட்டாய திருமணங்கள்

கட்டாய திருமணங்கள்

இந்த காதலர் தினத்தன்று காதலர்கள் தனியாகவோ அல்லது பொது இடங்களுக்கோ சென்றால் அங்கு அவர்களை விரட்டிச் சென்று, மிரட்டுவது, அவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது, அது மட்டுமா, அவர்களைக் கட்டாயப்படுத்தி அதே இடத்தில் தாலி கட்டச் சொல்வது போன்ற காரியங்களில் சில மத சார்பு அமைப்புகள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட நிகழ்வதுண்டு.

பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகம்

Image Courtesy

அரசாங்கத்தின் கடந்த ஆண்டு அறிவிப்பை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள மத்திய பஞ்சாப் மாகாணத்தில் ஒரு வேளாண்மைப் பல்பலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஜஃபர் இக்பால் என்பவர் இருக்கிறார். அவர் மற்றுமொரு வித்தியாசமான அறிவிப்பை இந்த பல்கலைக்கழகத்தில் அறிவித்திருக்கிறார். அது என்னன்னு கேட்டா இன்னும் கொஞ்சம் கடுப்பாகிடுவீங்க.

MOST READ: பெண்களுக்கு ஒரே நேரத்துல இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

சகோதரிகள் தினம்

சகோதரிகள் தினம்

காதலர் தினம் கொண்டாடக் கூடாது என்று சொன்னால் கூட, ஏதோ மனதை சமாதானப்படுத்திக் கொண்டு காதலியுடன் போனில் மட்டுமாவது பேசிக்கொண்டு ரகசியமாக கொண்டாடிவிடலாம். ஆனால் அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் என்ன அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தெரியுமா? காதலர் தினத்தை தங்களுடைய பல்கலைக்கழகத்தில் சகோதரிகள் தினமாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

என்ன பரிசு?

என்ன பரிசு?

அப்படி சகோதரிகள் தினமாகக் கொண்டாடப்படும் அந்த நாளில் சகோதரிகளுக்குப் பரிசுப் பொருள்கள், பர்தாக்கள், துப்பட்டா, முகத்தை மூடிக் கொள்ளும் வகையிலான துணிகள் (ஸ்டோல்) போன்றவற்றைப் பரிசுப் பொருள்களாகக் கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

MOST READ: செக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்... நீங்களே படிச்சுப் பாருங்க

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

இந்த அறிவிப்பை அடுத்து அந்நாட்டு இளைஞர்கள் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் காதலர் கொண்டாட்டத்தை தடை செய்ததற்கும் அதை சகோதரிகள் தினமாகக் கொண்டாடுவதற்கும் அதோடு இந்த அறிவிப்பை வெளியிட்ட துணைவேந்தருக்கும் எதிர்ப்புகள் பலமாகிக் கொண்டே போகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pakistan university rebrands Valentine's Day as 'Sister's Day'

A Pakistani university is rebranding Valentine's Day as "Sister's Day", and debating marking the holiday widely seen as a Western import by handing out headscarves and shawls to its female students.
Story first published: Thursday, February 7, 2019, 18:07 [IST]
Desktop Bottom Promotion