TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
அவள் வீட்டுத் தோட்டத்தில் வாடகைப் பூ நான், வாடியப் பூவும் நான்... - My Story #244
கிட்டத்தட்ட நான் அவள மறந்தே போயிட்டேன்னு தான் சொல்லணும். ஆனா, அவளோட நினைவுகள் என் மனசுல இருந்து மறைஞ்சு தான் இருக்க தவிர, அழிஞ்சு போகல. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை, எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சிருச்சு. நான் எதிர்பார்த்தது விட, நான் நேசிச்சத விட ரொம்ப அழகான, கனிவான பொண்ணு இப்போ என் லைப்ல இருக்கா.
நான் எப்பவுமே அவளோட வாழ்க்கையில திரும்ப போகக் கூடாதுன்னு தான் இருந்தேன், இருக்கேன். அதே மாதிரி தான் அவளும் இருப்பான்னு நெனச்சேன். ஆனா, அவ திரும்பி என் வாழ்க்கையில வந்தா. ஒரு தடவ இல்ல, மூணு தடவ.
ஃபர்ஸ்ட் லவ் யாரால தான் மறக்க முடியும் சொல்லுங்க. மறைக்க வேணா முடியுமே தவிர மறக்கவெல்லாம் முடியாது. நீங்க உங்க ஃபர்ஸ்ட் லவ் மறந்துட்டீங்களா? முடியாதுங்க.
ஃபர்ஸ்ட் லவ் ஒரு தழும்பு மாதிரி அது மறையாது. பிளாஸ்டிக் சர்ஜெரியே பண்ணாலும் கூட, அந்த இடத்துல ஒரு தழும்பு இருந்ததற்கான எண்ணம் நமக்குள்ள இருந்துக்கிட்டே தான் இருக்கும். இப்ப கிட்டத்தட்ட என்னோட நிலைமை இதுதான்.
கல்யாணம்...
அப்போ நான் வெளியூர்ல வேலை பண்ணிட்டு இருந்தேன். ஏற்கனவே அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சுன்னு அண்ணா, அக்கா எல்லாம் எனக்கு போன் பண்ணி சொல்லிட்டாங்க. நான் எங்க தப்பான முடிவு எடுத்திடுவேனோன்னு அக்காவுக்கு பயம். அப்பப்ப கால் பண்ணி பேசிக்கிட்டே இருப்பாங்க. ஆனால், மியூச்சுவலா பேசி தான் நாங்க விலகினோம்ன்னு அவளுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும்.
வேற ஒருத்தனா?
அக்கா அவளுக்கு கல்யாணம்ன்னு சொல்லி ரெண்டு, மூணு நாள் இருக்கும். என்னதான் எல்லாமுமே கைமீறி போயிடுச்சுன்னு தெரிஞ்சும் கூட, அது நடந்து ஒருசில வருஷம் ஆயிடுச்சுனாலும் கூட... திடீர்ன்னு ஒருநாள், அவ பக்கத்துல வேற ஒருத்தன் நிக்கப் போறான்னு தெரிய வந்தப்போது எப்படி சொல்றதுன்னு தெரியல... அதுவொரு விதமான வலி. அத எல்லாம் எக்ஸ்ப்ளைன் பன்னன முடியாது.
போன் நம்பர்...
நாங்கள் பிரிஞ்ச இந்த மூணு வருஷத்துல நானோ, அவளோ எங்க மொபைல் நம்பர மாத்தல. அவ மாத்துலன்னு எனக்கும் தெரியும், நான் மாத்தலன்னு அவளுக்கும் தெரியும். ரெண்டு பேரோட வாட்ஸ்அப் ஸ்டோரி மாத்தி, மாத்தி நாங்க பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்.
ஆனா, என் போன் நம்பர் என்னன்னு அக்காக்கிட்ட இருந்து கேட்டு வாங்கியிருக்கா. அக்காவே அத கால் பண்ணி சொன்னாங்க.
பதட்டம்!
கிட்டத்தட்ட அவளோட குரல கேட்டு மூணு வருஷம் ஆச்சு. போட்டோ கூட அப்பப்ப, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்ல பார்க்க முடியும். ஆனா, அந்த குரல்... எனக்குள்ள ஒரு பதட்டம் தொத்திக்க ஆரம்பிச்சது. அன்னிக்கி அக்கா போன் பண்ணி சொன்னதுல இருந்து ஆபீஸ்ல வர்க் பண்ணவே முடியல.
நாள் முழுக்க கால் தரையில படவே இல்ல. நான் ஒரு இடத்துல கூட ஒழுங்க நிற்கல. ஒரு கட்டத்துக்கு மேல ஆபீஸ்ல உட்கார முடியல. அதனால, எப்பவும் நைட் எட்டு மணிக்கி கிளம்புறவன். சாயந்திரம் அஞ்சு மணிக்கே கிளம்பிட்டேன்.
கால்..
நான் பார்க்கிங்ல பைக் எடுத்துட்டு இருந்தப்ப கால் பண்ணா... எடுக்குறதுக்குள்ள கால் கட் ஆயிடுச்சு. பைக் அண்டர்கிரவுண்ட் ஃப்ளோர்ல இருந்து மேல எடுத்துட்டு வந்து நிறுத்தி வெச்சுட்டு கால் ட்ரை பண்ணேன். பிஸி, பிஸின்னே வந்துட்டு இருந்துச்சு. ஆறேழு தடவ ட்ரை பண்ணிட்டு விட்டுட்டேன். நான் ட்ரை பண்ண நிறுத்துன அடுத்த பத்தாவது செகண்ட் அவக்கிட்ட இருந்து கால். அதே நம்பர்ல இருந்துதான் கூப்பிட்டா.
நான் போகல..
நான் எங்க இருக்கேன், எப்படி இருக்கேன், என்ன வேலை பண்றேன்னு எல்லாமே அக்காக்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டு, திரும்ப அதே கேள்விய என்கிட்டயும் கேட்டா. நானும் அவளுக்கு தெரியாத மாதிரியே நெனச்சுக்கிட்டு பேசுனேன். அஞ்சு நிமிஷம் தான் பேசியிருப்போம். கல்யாணத்துக்கு கண்டிப்பா வான்னு கூப்பிட்டா. சரின்னு சொன்னாலும். அவ கல்யாணத்துக்கு போக எனக்கு மனசு இல்ல. அண்ணா, அக்கா யாரும் என்ன கட்டாயப்படுத்தல. நானும் போகல. இப்படி தான் முதல் தடவ ஒரு போன் கால் மூலமாக வந்துட்டு போனா.
பார்மலா....
அவளுக்கு கல்யாணம் ஆன அடுத்த வருஷமே எனக்கும் கல்யாணம் நிச்சயம் ஆச்சு. நான் அவளுக்கு கால் பண்ணி எல்லாம் கூப்பிடல. ஆனா, அண்ணாவும், அம்மாவும் தான் அத்தை வீட்டுக்கு போய் கூப்பிட்டுட்டு. அவளையும் நேர்ல பார்த்து இன்வைட் பண்ணாங்க.
அக்கா மட்டும் என்ன ஒரு தடவ பார்மலா கூப்பிடுன்னு சொன்னாங்க. நானே அவ கல்யாணத்துக்கு போகல, ஏன்னு அவளுக்கே தெரியும். கண்டிப்பா நான் கூப்பிட்டாலும் அவளும் வர போறது இல்ல. இது உனக்கே தெரியும்ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
அவ வந்தா...
ஆனா, என் கல்யாணத்துக்கு அவ வந்தா. முகூர்த்தம் முடிஞ்சு ஒரு பத்து நிமிஷம் இருக்கும். நான் சரியா கவனிக்கல. அக்கா தான் மேடைக்கு வந்து என்கிட்ட சொன்னாங்க.
எனக்கு புடிச்ச அதே கிரீன் கலர்ல ட்ரஸ் போட்டு வந்திருந்தா. இதெல்லாம் தற்செயலா? இல்ல அவ தெரிஞ்சா பண்றாளான்னு எனக்கு தெரியல. அப்பறம் எல்லாரையும் போல அவளும் வந்து போட்டோ எடுத்துட்டு கிளம்பிட்டா. மண்டபத்த விட்டு அவ கிளம்பினாலும், என்னைவிட்டு கிளம்ப ரெண்டு மூணு நாள் ஆச்சு.
மீண்டும் மறந்தேன்...
அப்பறம் லைப், வர்க், கல்யாணம்ன்னு கொஞ்சம் மாறிடுச்சு. நான் சொன்ன மாதிரியே என்னைவிட, என்னையும், என்னோட வர்கையும் நேசிக்கிற ஒரு பொண்ணு. அவ என் மேல இத்தன பாசம் வைக்க முடியுமான்னு அடிக்கடி சந்தேகம் எனக்குள்ள வரும். ஆனால், அவ முடியும், முடியும் நிரூபிச்சுட்டே இருந்தா. ஒரு மனைவியா மட்டுமில்லாம, மகளா, அம்மாவா எல்லாவுமா இருக்க ஒரு மனைவி கிடைக்கிறது வரம். அந்த வரம் எனக்கு கிடைச்சத நெனச்சு நானே ஆச்சரிய்ப்படுறேன்.
மூணாவது தடவையா...
திரும்பவும் நான் அவள மறந்து தான் போயிருந்தேன். வாட்ஸ்அப்ல கூட அவ வைக்கிற ஸ்டேடஸ் இல்ல டிபி நான் செக் பண்ணது இல்ல. டோட்டலா என் வாழ்க்கை வேற ஒரு பாதைக்கு மாறி பயணம் செஞ்சுட்டு இருந்துச்சு. திரும்பவும் அவ வந்தா... மூணாவது தடவையா... நம்பர் மாத்திட்டேன். இதுதான் என் புது நம்பர்ன்னு சொன்னா. ஒருவேளை அவ என்ன மறந்திருந்தா இத பகிர்ந்துக்க வேண்டிய அவசியமே இல்ல. இல்ல ஏதாவது வாட்ஸ்அப் ஃபேமிலி க்ரூப்ல சேர்த்தி ஒண்ணா எல்லாத்துக்கும் அனுப்பிட்டாளான்னு சந்தேகமும் இருக்கு.
உங்களால புரிஞ்சுக்க முடியிதா?
நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி மறச்சு வெச்ச அந்த தழும்ப, அவ அடிக்கடி... அது மறைஞ்சு தான் இருக்கே தவிர, மறந்து போகலன்னு நினைவுப்படுத்திட்டே இருக்கா. இந்த காதல் எந்த மாதிரியான டிசைன். இது ஏன் இப்படி தொல்லை பண்ணுது. விடவும் முடியல, விடாம இருக்கவும் முடியல.
இப்படியான ஒரு விடாத கருப்பா.... உங்களையும் நிச்சயம் ஒரு முதல் காதல் விரட்டிக்கிட்டே இருக்கும். என்னோட இந்த கதை உங்களுக்கு அத நினைவுப் படுத்தி இருந்தா... மச்சி! நீயும் என் இனமே... என்னோட உணர்வு என்னன்னு உன்னால மட்டும் தான் புரிஞ்சுக்க முடியும்.