For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  எல்லா இரவும் ஒருவனுடன் என்பது எப்படி சாத்தியம், இது தான் அவள் கொள்கை - My Story #191

  By Staff
  |

  "ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு உடன்பாடில்லை... எல்லா இரவுகளும் ஒருவனுடன் மட்டும் எப்படி?"

  இது, நாங்கள் இருவரும் பேச துவங்கிய ஆரம்பக்கட்ட கலந்துரையாடலில் அவள் கூறிய வாக்கியம். அவள் பேசியதில் என்னை மிகவும் மனதளவில் பாதித்த, அதிர்ச்சிக்குள்ளாக்கிய வாக்கியமும் இதுதான். ஏனெனில், நான் அவளை காதலித்து வந்தேன்.

  நான் மனதார விரும்பும் பெண் ஒருத்தி, வாழ்நாள் முழுக்க பயணிக்க விரும்பும் பெண் ஒருத்தி... தனக்கு வாழ்நாள் முழுக்க ஒரே நபருடன் இருக்க பிடிக்காது. அனைத்து இரவுகளும் ஒருவனுடன் என்பது சாத்தியமற்றது என்று கூறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  முதல் நாள்!

  முதல் நாள்!

  அன்று தான் நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் எச்.ஆர் டீமில் இருந்து ஒரு எக்சிகியூட்டிவ் பெண் என்னை, நான் பணிபுரியும் அணியுடன் அறிமுகம் செய்து வைத்துவிட்டு. பல டாக்குமென்ட் பேப்பர்களை கொடுத்து ஃபில்லப் செய்ய கூறியிருந்தார்.

  பாதி நாள் அதுக்கே சரியாக போனது. ஏறத்தாழ மூன்று மணியளவில் தான் நான் மதிய உணவு சாப்பிடவில்லை என்ற எண்ணமே மனதில் உதித்தது. சரி இதுக்கு மேல் என்ன சாப்பாடு, காபி, டீ, ஜூஸ் ஏதேனும் ஒன்றை குடித்துவிட்டு இருக்கைக்கு செல்லலாம் என்று ஆபீஸ் கேஃபீடேரியாவுக்கு சென்றனே.

  ப்ப்ப்பபபபா!

  ப்ப்ப்பபபபா!

  கிட்டத்தட்ட சிசிடி லுக்கில் இருந்தது ஆபீஸ் கேஃபீடேரியா. ஒரு ஆப்பிள் ஜூஸ் மட்டும் ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டு ஒரு டேபிளில் அமர்ந்தேன். மெல்ல, மெல்ல அன்றைய தினம் எனக்கு வந்திருந்த ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்த போது, எனது மொபைல் ஸ்க்ரீனை தாண்டி, ஒரு பெண் கடந்து போனாள்.

  நான் முதலில் கண்டது அவளது முகத்தை அல்ல. ப்ப்ப்பபபபா! என்ன பொண்ணுடா இவ... செம்ம ஸ்ட்ரக்ச்ர்... என்ற எண்ணம் தான் முதன் முதலில்... என் வாழ்நாள் முழுக்க பயணிக்க வேண்டும் என்று விரும்பிய பெண் மீது எழுந்தது. அப்போது அழகென்று எதையும் நான் கவனிக்கவில்லை. அங்கும், இங்கும் அலைபாய்ந்த என் கண்கள் சிறிது நேரம் கழித்து தான் அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்தது.

  ஷாக்!

  ஷாக்!

  ஜூஸ் பருகி முடித்தப் பின்னர், அவள் கிளம்பும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணம் ஒரு பக்கம். ஆனால், ஆபீஸ் ஜாயின்ட் செய்த முதல் நாளில் இன்னும் ஒருமுறை கூட என் இருக்கையில் அமரவில்லை என்ற பதட்டம் ஒரு பக்கம். சரி, இதே ஆபீஸ் தான, திரும்ப பார்த்துக்கலாம் என்று எனது இருக்கை நோக்கி சென்றேன்.

  காலேஜில் லேட்டர் என்ட்ரியாக சேர்ந்தால் எப்படி, இதுக்கு முன்ன எங்க படிச்ச, இங்க ஏன் வந்த என்று பல கேள்விகள் கேட்பார்களோ, அப்படியாக எனது டீமில் இருந்த சிலர் என்னிடம் இதே மாதிரியான கேள்விகளை கேட்டனர். எல்லாரும் கேள்விக் கொண்டிருக்க...

  ஒரு திடீர் குரல்...

  "போதும்டா... வந்த முதல் நாளே அவன விரட்டிவிட்டுறாதீங்க... ஓடீர போறான் பயப்புள்ள..."

  திரும்பி பார்த்தால்... நான் கொஞ்ச நேரம் முன்பு ரசித்து பார்த்து கொண்டிருந்த அதே அவள்....!

  சீனியர்!

  சீனியர்!

  அந்த டீமில் இருந்து ஒருசில சீனியர் ஆட்களில் அவளும் ஒருத்தி. ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்டா இருக்கே என்று குழப்பம். ஒருவேளை நம்மை காட்டிலும் வயது மூத்தவளாக இருந்தால்? என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. உடனே, என்னை அந்த ஆபீஸ்க்கு ரெஃபர் செய்த என் தோழனுக்கு கால் செய்து... அவளது வயது என்னவென்று கேட்டேன்.

  "நம்ம பேட்ச் தான்டா... ஆனா, ரொம்ப மூளைக்காரி. ஜாக்கிரதையா இரு. என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்ணுவா. ஆனா, அடமென்ட், கெத்து காமிப்பா" என்று கூறினான்.

  ங்க... டூ ங்கோ....

  ங்க... டூ ங்கோ....

  எனது கோயம்புத்தூர் ஸ்லாங்... அனைவரையும் வாங்க.. போங்க, சாப்பிடீங்களா... என்னங்க... என்று 'ங்க' போட்டு பேசும் மொழி சிலர் ரசித்தனர், சிலர் கேலி செய்தனர். ஆனாலும், எங்க ஊரு ஸ்லாங்கு தான எனக்கு கெத்து. அதில் இருந்து என்னை மாற்றிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. என்னை அப்படி ஒருமுறை டீம்மேட் நபர் ஒருவர் கலாய்த்துக் கொண்டிருந்தார்.

  சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில்... "அம்மாங்கிறதயே... ங்கொ*** ...ங்கோ***.... சொல்ற உன் ஸ்லாங்குக்கு... இவன் ஸ்லாங் எவ்வளவோ தேவல... அடங்கு சரியா" என்று கர்ஜித்துவிட்டு ஓய்ந்தாள்.

  ஒரு நொடி நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

  அன்றைய நாள் மாலை நான் அவளுக்கு நன்றி தெரிவிக்க. ஃப்ரீயா விடு என்றவாறு நகர்ந்தாள்.

  சில நாட்கள் கழித்து...

  சில நாட்கள் கழித்து...

  அதன் பிறகே நான் அவளுடன், ஆவலுடன் பேச துவங்கினேன். அவள் ப்ரேக் போகும் போதெல்லாம் உடன் செல்வேன். அவள் கிளம்பும் போதே நானும் அவளுடன் ஆபீஸில் இருந்து கிளம்புவேன். சில நேரம் பேருந்து பயணங்களில் அவளுடன் அமர்ந்து செல்லும் வரங்களும் கிடைத்தன. அன்றில் இருந்து கூடுதலாக கடவுளை வேண்டவும் ஆரம்பித்தேன்.

  அப்படியாக சில முறை அவளுடன் பேசி பழகிய போது தான் அவள் ஒரு பெண்ணியவாதி என்பதை அறிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால், கொஞ்சம் அரைகுறை பெண்ணியவாதி அவள்.

  கலந்துரையாடல்...

  கலந்துரையாடல்...

  ஒருமுறை பஸ் எதுவும் கிடைக்காத காரணத்தால்... நானும் அவளும் கேப் புக் செய்து கிளம்பினோம். அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் தாண்டி தான் எனது வீடும் இருந்தது. திடீரென பெய்த மழையால் ட்ராபிக் ஜாம், ஜாமென்று இருந்தது. அப்போது அவளுடன் அதிகம், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் நேரமும், வாய்ப்பும் கிடைத்தது.

  தன் வாழ்க்கை குறித்தும், அம்மாவை ஏமாற்றி சென்ற தனது மோசமான அப்பா குறித்தும் பல விஷயங்கள் பகிர்ந்துக் கொண்டாள்.

  ஒருவனுக்கு ஒருத்தி?

  ஒருவனுக்கு ஒருத்தி?

  எங்கள் பேச்சு அரசியல், விளையாட்டு, ஜாதி ஏற்றத்தாழ்வு என பலவற்றை கடந்து கொஞ்சம் காதல், திருமணத்தை நோக்கி நகர்ந்தது. அப்போது தான் என்னை அதிர்ச்சியடைய வைத்தது அவளது சில வாக்கியங்கள்...

  "எனக்கு காதல், கல்யாணம் எல்லாம் ஓகே தான். ஆனா, வாழ்நாள் முழுக்க ஒருத்தன் கூடவே எப்படி? நமக்கு பிடிக்கிற வரைக்கும் வாழலாம். சப்போஸ் அவன் கூட இனிமேல் வாழ முடியாதுன்னு வந்த பிறகும், அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்ட அவன் கூடவே எல்லா ராத்திரியும் படுத்து எழுந்திரிக்கிறது எல்லாம் எப்படி? பொண்ணுங்க ஒன்னும் பிராஸ்ட்டிடியூட் இல்லையே? விருப்பமே இல்லாம தினமும் ஒருத்தன் கூட படுக்க...?"

  டிரைவரும்...

  டிரைவரும்...

  நீங்கள் மேலே படித்த அந்த முத்தான வாக்கியங்களை அவள் கொஞ்சம் கர்ஜிக்கும் தொனியில் பேசினாள். நான் மட்டுமல்ல, டிரைவரும் கூட அதிர்ந்து போனார். ஏன் மழையும் கூட ஓய்ந்தது. ஆனால், ட்ராபிக் மட்டும் ஒரு இன்ச் கூட நகரவில்லை.

  அதற்கு பின் அவளிடம் ஏன் இப்படி சொல்ற, அப்படி எல்லாம் இல்ல, இந்த உலகத்துல நேர்மையா காதலிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க என்று அவளுக்கு பாடம் புகட்ட நான் தயாராக இல்லை. மேலும், அப்படி நான் கூற... அதற்கு அவள் அடுக்கடுக்காக வேறு ஏதாவது கூறி சண்டை கிண்டை வந்துவிடுமோ என்ற அச்சம் என்னுள் அதிகமாக இருந்தது.

  நடந்து சென்றோம்...

  நடந்து சென்றோம்...

  அவளது ஹாஸ்டலுக்கு இன்னும் ஒரு கிலோமீட்டர் தான் இருக்கும்... ஆனால், ட்ராபிக் குறையந்த பாடில்ல. பேசாமல் நடந்தே சென்றுவிடலாம் என்று கேப் கட் செய்துவிட்டு நடக்க துவங்கினோம். நானே விட்டாலும், அவள் அந்த டாபிக்கை விடுவதாக இல்லை போல.

  மீண்டும் தொடர்ந்தாள்....

  மீண்டும் தொடர்ந்தாள்....

  செக்ஸ்ங்கிறது... பிடிச்சவங்களோட, பிடிச்ச வரைக்கும் மட்டும் தான் வெச்சுக்கணும். கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துகிட்டோம்ங்கிற ஒரே காரணத்தால... வேண்டா வெறுப்பா வெச்சிக்கக் கூடாது. அப்படியே, நாம் சில விவாத நிகழ்சிகளில் கேட்டது போலவே, தம்மு, தண்ணி, அது இது என அனைத்திலும் பங்கு கேட்பது போல பேசினாள்.

  அட, போங்க ஜி... இவங்களுக்கு பெண்ணியம்னா என்னனு தெரியில... என்று மனதுக்குள் நொந்துக் கொண்டேன்.

  கல்வி, வேலை!

  கல்வி, வேலை!

  ஆணுக்கு நிகரான சமூக மதிப்பும், இடமும், உரிமை, சுதந்திரம் எல்லாம் பெண்களுக்கு பிறப்பின் அடிப்படையில் கிடைக்க வேண்டும். அதை யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய சூழல் இருக்க கூடாது என்பதே பெண்ணியம். ஒரு சமூகத்தில் ஆண் என்னவெல்லாம், செய்கிறானோ அதை எல்லாம் நானும் செய்வேன் என்பதற்கு பெயர் பெண்ணியம் அல்ல.

  கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பொறுப்பு போன்றவற்றில் சமவுரிமை கேட்பது பிறப்புரிமை. அதை விடுத்து, தம்மு, தண்ணி, கூத்துகளில் சமவுரிமை கேட்பது எப்படியாக சமவுரிமை ஆகும்.

  கொலை!

  கொலை!

  கொலை என்பது தவறு... ஆண் கொலை செய்கிறான் என்று நானும் கொலை செய்வேன் என்று பெண்கள் முனைவது பெண்ணியமா? இல்லை தானே.

  இப்படி ஒரு வகையிரா இருக்கிறது என்றால்... ஆண்களை அடிமையாக வைத்துக் கொள்வது தான் பெண்ணியம் என்று தவறாக அலைந்துக் கொண்டு சில கூட்டம் இருக்கிறது. ஏன், நம்ம ஊரு மாதர் சங்கங்கள் என்றாவது கற்பழிப்புக்கு நீதிக் கேட்டு போராட்டம் செய்துள்ளதா? பீப் சாங்குகளுக்கு தான் அவர்களே போராட்டம் செய்கிறார்கள். இதில், இவளை மட்டும் எப்படி குற்றம் சொல்ல முடியும்.

  டாட்டா!

  டாட்டா!

  சரி திரும்பி நம்ம மேட்டருக்கு வருவோம்...

  ட்ராபிக் மற்றும் மழை காரணமாக ரோடு மோசமான அளவில் நீர் தேங்கி இருந்ததால். ஒரு கிலோ மீட்டார் நடந்து செல்லவே 30 நிமிடங்களுக்கு மேலானது. அப்படியே அவளது ஹாஸ்டல் வந்தது. டாட்டா... பை... நாளைக்கு பார்க்கலாம்.. என்று கூறிவிட்டு... அப்படியே மனதுக்குள்... இதெல்லாம் வெறும் மோகம், ஈர்ப்பு... இவ மேல வந்தது லவ் எல்லாம் இல்லடா... என்று என் மனதிடம் நானே கூறிக் கொண்டு நகர்ந்தேன்.

  முடியலையே!

  முடியலையே!

  என்ன செய்யிறது... நம்ம மனசு ஒரு குழந்தை மாதிரி. அது சொல்றத எல்லாம் உடனே கேட்டுருச்சுன்னா... எல்லாமே நல்லப்படியா நடந்திரும் இல்லையா? என்னதா ஆரம்பத்துல ப்ப்ப்பபபபான்னு சொல்லியிருந்தாலும் அவமேல வெச்ச லவ் உண்மையானது. அவங்க அப்பா, அம்மாவ ஏமாத்திட்டு போனதுனால தான் இப்படி எல்லாம் இவ பேசுறான்னு தோனுச்சு.

  ட்ரை பண்ணுவோம்... முடிந்தால் முடியாததுன்னு ஒண்ணுமே இல்லையே... முயற்சி திருவினையாக்கும்ங்கிற நம்பிக்கையில. இப்ப வரைக்கும் என்னோட லவ் பத்தி அவக்கிட்ட சொல்லாம. ஃபர்ஸ்ட்டு லவ்வுன்னா என்ன? மேரேஜ்ன்னா என்னன்னு புரிய வைப்போம்ன்னு ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நாலஞ்சு மாசமா ட்ரை மட்டும் தான் பண்ணிட்டு இருக்கேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  She is Not Interest in Monogamy, And I Shocked!

  She is Not Interest in Monogamy, And I Shocked!
  Story first published: Saturday, March 3, 2018, 15:40 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more