For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இப்படி எல்லாம் சந்தேகப்பட்டா என்ன பண்றது... ஆண்கள் குமுறும் உண்மை காதல் சம்பவங்கள்!

  By Staff
  |

  இவற்றில் பெரும்பாலானவை எல்லா காதல் உறவுகளிலும் காணப்படும் நிகழ்வுகள். பெண்களுக்கு எப்போதுமே ஆண்கள் மீது ஒரு பாதுகாப்பின்மை இருப்பது உண்டு. அதற்கு காரணம் ஆண்கள் ஒரு கலா ரசிகர்கள்.

  யார் அந்த கலா என்றெல்லாம் கேட்க கூடாது. ஆண்களுக்கு லட்சுமி போல காதலி / மனைவி இருந்தால்... எதிரே வரும் பெண்ணை திரும்பி பார்க்க தான் செய்வார்கள். அதற்கென அந்த பெண் பின்னாடியே போய்விடுவார்கள் என்று சந்தேகிப்பது தவறு.

  Secret Confession: This What Men Confess About Their Girlfriends Extreme Insecurity

  உண்மையில் பெண்கள் மனதில் இருப்பது சந்தேகமோ, பாதிகாப்பின்மை உணர்வோ இல்லை. அது ஒரு விதமான பொசசிவ்நஸின் அதீத வெளிபாடு. அதற்கு இனிமேல் தான் பெயர் வைக்க வேண்டும்.

  ஆனால், தங்கள் காதல் உறவில், காதலிகளின் இந்த பாதிகாப்பின்மை உணர்வால் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து ஆண்கள் பகிர்ந்திருக்கும் சுவாரஸ்யமான தகவல்கள்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  என் மொபைலில் முதலில் 300க்கும் மேற்பட்ட காண்டாக்ட்ஸ் இருந்தன. ஆனால், இப்போது 111 காண்டாக்ட்ஸ் தான் இருக்கிறது. இதற்கு முழு காரணம் எனது காதலியின் பாதுகாப்பின்மை. அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிறைய காண்டாக்ட்ஸ் அழித்துவிட்டேன்.

  #2

  #2

  அனைவரும் என் காதலி அவர்களை வெறுக்கிறாள், அவர்களிடம் கோபமாக நடந்துக் கொள்கிறாள் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மை என்னவெனில், அவளுக்கு கூச்சமும், என்மீதான பொசசிவ்வும் அதிகம். அதனால் அவளுக்குள் ஏற்படும் பாதுகாப்பின்மை தான் மற்றவர்கள் பார்வைக்கு கோபக்காரி போல வெளிப்படுகிறது.

  #3

  #3

  நான் எந்த ஒரு பெண்ணுக்கு கால் செய்தாலும், அவர் உறவினர், தோழி, உடன் பணிபுரியும் பெண் யாராக இருந்தாலும் சரி, அவளுக்குள் ஒரு பாதிகாப்பின்மை ஏற்படும். ஒருவேளை நான் பேசும் பெண் அவ்வளவு அழகில்லை என்றால் மட்டுமே அவள் மனம் சாந்தமடையும். இது அவளுக்குள் இருக்கும் பாதிகப்பின்மையின் வெளிப்பாடு.

  #4

  #4

  என் கடந்த காலத்தை நினைத்தே என் காதலி பாதுகாப்பின்மையாக உணர்கிறாள். நான் முன்னாடி வேறொரு பெண்ணை காதலித்து வந்தேன். அதை அறிந்தே அவள் என்னை ஏற்றுக் கொண்டால். என் கடந்த வாழ்க்கை பற்றி முழுவதும் அவள் அறிவாள். என் எக்ஸ் உடன் நான் உறவு கொண்டிருந்தது உட்பட நான் அவளிடம் உண்மையை மறைக்காமல் கூறிவிட்டேன். ஆனாலும், என் மீது அவளுக்கு ஒரு பாதுகாப்பின்மை உணர்வு இருந்துக் கொண்டே இருக்கிறது. இதை எப்படி போக்குவது என்று எனக்கு தெரியவில்லை.

  #5

  #5

  எனது காதலியின் பாதுகாப்பின்மை காரணத்தால், என் நெருங்கிய நட்பை இன்று நான் இழந்திருக்கிறேன். இதை எப்படி எடுத்துக் கொள்வது, நான் செய்வது சரியா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஒரு ஆண், பெண்ணுடன் நட்புடன் இருக்க முடியாது என்று ஒரு பெண்ணே கருதுவது மிக மோசமான கருத்தியல்.

  #6

  #6

  இது கொஞ்சம் விசித்திரமானது... என் காதலி அவளது சிரிப்பு சப்தம் சார்ந்து பாதுகப்பின்மை கொண்டிருக்கிறாள். அவளது சிரிப்பு சப்தம் கொஞ்சம் வினோதமாக இருக்கும். அதனால், நான் அவளை வெறுத்து விடுவேனோ அல்லது மற்றவர்களை அவளை ஏளனமாக பார்ப்பார்களோ என்று பதட்டம் அடைகிறாள். இதனால் அவள் அதிகம் சிரிப்பதே இல்லை.

  #7

  #7

  என் காதலி என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே தயக்கம் காட்டுகிறாள். அதற்கு காரணம் அவளது முகத்தில் இருக்கும் பருக்கள். பருக்கள் அசிங்கம் என்று கருதுகிறாள். ஆகையால், அவள் என்னுடன் புகைப்படமே எடுத்துக் கொள்வதில்லை. நான் என் வாழ்வில் மிகவும் அழகான பெண்ணாக அவளை காண்கிறேன். ஆனால், அவளே அவளை அழகில்லை என்று கருதுகிறாள்.

  #8

  #8

  என் காதலி பாதுகாப்பின்மை உணர்வதற்கு நானே தான் காரணம். சென்ற வருடம் நான் அவளை ஏமாற்றிவிட்டேன். நான் பிறகு, அவளுடன் இருக்க வேண்டும் என்று சண்டையிட்டு மீண்டும் இணைந்தோம். இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்று, நான் அவளிடம் சத்தியம் எல்லாம் செய்தேன். ஒருவேளை, நான் அவளது குறுஞ்செய்தி அல்லது வீடியோ காலுக்கு உடனே ரிப்ளை செய்யவில்லை என்றால்... நான் மீண்டும் தவறு செய்கிறேன் என்று கருதுகிறாள்.

  #9

  #9

  என் மீது பாதுகாப்பின்மை உணர்கிறாள் என் காதலி. ஆகையால் எனது முன்னாள் காதலியை அனைத்து சமூக தளங்களிலும் எனது முகவரியில் இருந்து பிளாக் செய்துவிட்டாள். இது விசித்திரமாக இருக்கிறது. அவளுக்கு என் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை.

  #10

  #10

  இந்த உலகிலேயே பாத்காப்பின்மை அதிகமாக உணரும் ஜீவன்கள் பெண்கள் என்று கருதுகிறேன். நாங்கள் இருவரும் ஒரு வருடமாக காதலித்து வருகிறோம். ஆனால், நான் அவளை நிஜமாகவே ஈர்ப்பாக உணர்கிறேனா என்ற சந்தேகம் இன்னும் அவளுக்குள் இருக்கிறது. அவளது லாஜிக்கை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.

  #11

  #11

  நான் ஒரு புதிய நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறேன் என்றால், முதலில் என் காதலி கேட்கும் கேள்வி, அங்கே எத்தனை பெண்கள், என் டிப்பார்ட்மெண்ட்டில் எத்தனை பெண்கள். அவர்களில் எத்தனை பேர் திருமணமானவர்கள் என்று தான். நானும் அவளும் ஐந்தாண்டுகளாக காதலித்து வருகிறோம். என்னால் அவளை எப்படி நம்பிக்கை கொள்ள வைக்கிறது என்று தெரியவில்லை.

  #12

  #12

  அவள் அழகு என்று அவளே நம்ப மறுக்கிறாள், அவள் முகம், ஹேர் கலர், புன்னகை என்று அவளை அவளே வெறுக்கிறாள். மேலும், நானும் அவளை வெறுக்கிறேன் என்று அவளே கருதுகிறாள். இதற்கு எல்லாம் எப்படி ஒரு தீர்வு காண்பது. இப்படியான அவளது குணத்தால் எங்கள் காதல் நாளுக்கு, நாள் வறண்ட நிலமாய் மாறி வருகிறது.

  #13

  #13

  நானும் காதலித்து வருகிறேன், என் சகோதரனும் காதலித்து வருகிறான். எங்கள் இருவர் காதலுக்கும் எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டனர். என் காதலியை ஆரம்பம் முதலே பெற்றோர் சொந்த மகள் போல தான் நடத்தி வருகிறார்கள்.

  ஆனால், என் சகோதரனின் காதலி மீது அவர்களுக்கு ஆரம்பத்தில் பெரிதாக பெற்றில்லை. அந்த பெண் இல்லாத போது அவள் குடும்பத்தில் எப்படி இனைவால், நடந்ந்துக் கொள்வார் என்று சோகமாக பேசுவார்கள். ஆனால், அந்த பெண் வீட்டுக்கு வந்தால், அவளையும் தங்கள் மகள் போல தான் நடத்துவார்கள்.

  இதனால், தன்னை குறித்தும் என் பெற்றோர் பின்னாடி ஏதாவது தவறாக பேசுவார்களா என்று என் காதலி சந்தேகம் கொள்கிறாள். அப்படி இல்லை என்ற எத்தனையோ முறை சொல்லியும் அவள் கேட்பதை இல்லை.

  #14

  #14

  என் காதலியின் உயரம் கொஞ்சம் குறைவு. அதனால், எனக்கு ஏற்ற ஜோடி அவள் இல்லை என்று அவள் கருதுகிறாள். நான் அவளிடம் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்று கூறிய போதும் கூட, அவள் மனம் இன்னும் பாதுகாப்பின்மையாக உணர்கிறது. இதை காரணம் காட்டி நாம் பிரிந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறாள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Secret Confession: This What Men Confess About Their Girlfriends Extreme Insecurity

  Secret Confession: This What Men Confess About Their Girlfriends Extreme Insecurity
  Story first published: Monday, June 11, 2018, 11:11 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more