For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சின்ன பொண்ணு தான் வேணும்னா, என்ன 10 வருஷமா ஏமாத்துனது ஏன்...? - My Story #316

சின்ன பொண்ணு தான் வேணும்னா, என்ன 10 வருஷமா ஏமாத்துனது ஏன்...? - My Story #316

By Staff
|

நானும், அவனும் 2007ல இருந்து காதலிச்சிட்டு வரோம். அப்ப நாங்க காலேஜ் செகண்ட் இயர். ஒரே பிளாக், வேற, வேற டிப்பார்ட்மெண்ட். ஃபர்ஸ்ட் இயர் கல்ச்சுரல்ஸ் டே அன்னிக்கி தான் நாங்க முதல் முறையா அறிமுகமாகிப் பேசிக்கிட்டோம். அதுக்கு முன்னாடி நாங்க ஒருத்தர, ஒருத்தர் மனசுல பதிவாகுற மாதிரி நேருக்கு, நேர் பார்த்துக்கிட்டது கூட இல்ல.

Real Life Story: He Replaced Me with a Young Girl. And Cancelled the Wedding.

அவன் நல்லா பாடுவன். நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். அவன் பாடுன பாட்ட கேட்டு மயங்காத ஆளே இல்லன்னு சொல்லலாம். ஒரே நாள்ல காலேஜ் பாப்புலர் ஆகிட்டான். அதுக்கப்பறம் எதிர்ல பார்த்துக்கும் போது சிரிக்க ஆரம்பிச்சோம். அப்பறம் அது அப்படியே பேசி, பழக வித்திட்டது என் அப்பாவோட ஜாப் ட்ரான்ஸ்பர் தான்.

நான் செகண்ட் இயர் போகும் போது அப்பாவ திருச்சிக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. காலேஜ் ட்ரான்ஸ்பர் பண்ண தான் முதல்ல பிளான் பண்ணாங்க. ஆனா, ஸ்டடீஸ் கெட்டுடும்னு என்ன ஹாஸ்டல்ல சேர்த்துட்டு அப்பா, அம்மா மட்டும் திருச்சி போயிட்டாங்க. சில சமயம், வீக்கென்ட் நான் திருச்சி போவேன், இல்ல அப்பா, அம்மா ஊருக்கு வந்திடுவாங்க.

இந்த காலக்கட்டத்துல தான் நாங்கள் காதலிக்க ஆரம்பிச்சோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்மலான காதல்..

நார்மலான காதல்..

சினிமாவுல, சீரியல்ல வர மாதிரி ரொமான்ஸ் சீன் எல்லாம் எங்க காதல்ல இல்ல. அவன் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்தே ஹாஸ்டல்., நான் செகண்ட் இயர்ல இருந்து ஹாஸ்டல். ஏறத்தாழ நாங்கள காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து ஹாஸ்டல் வாழ்க்கை தான். ஆனாலும், ஒருமுறை கூற நாங்க நெருங்கி உட்கார்ந்து பேசினதே இல்ல.

எப்பவும் என் ஃபிரெண்ட்ஸ் இல்ல, அவன் ஃபிரெண்ட்ஸ் பத்தடி தூரத்துல இருந்துட்டே இருப்பாங்க. நிறையா சமயம், அவன் பாடுறத கேட்டுட்டு எழுந்து வந்ததுண்டு. நீ என்ன காதலிக்கிறியா, நான் பாடுறத காதலிக்கிறியா.. வர, பாடுறத கேட்கிற போயிடுற.. நான் என்ன ரோடியோவான்னு அவன் கிண்டல் பண்ணது கூட உண்டு.

சொடக்கு போட்ட மாதிரி...

சொடக்கு போட்ட மாதிரி...

ஹாஸ்டல் வாழ்க்கை நிஜமாவே மறக்க முடியாத ஒன்னு. நமக்கு புடிச்ச நபர்களோட நிறையா நேரம் ஸ்பென்ட் பண்ண முடியும். அதுக்கெல்லாம் மேல, அவன தினமும் பார்த்து நிறையா பேச முடியும்.

காமன் சப்ஜெக்ட் எல்லாம் நாங்கள் ஒண்ணா ஃபிரெண்ட்ஸ் கூட உட்கார்ந்து படிச்சிருக்கோம். ரொம்ப மெதுவா போயிட்டு இருந்த மாதிரி தான் இருந்துச்சு. ஆனா, மூணு வருஷம் ஏதோ சொடக்கு போட்ட மாதிரி போயிடுச்சு.

சென்னை!

சென்னை!

படிச்சு முடிச்சதும் சென்னையில வேலை. வேற, வேற ஏரியாவுல கம்பெனி இருந்தாலும். ரெண்டு பேரும் ஒரே ஏரியாவுல ரூம் எடுத்து தங்கி இருந்தோம். என் ரூம்ல இருந்து பக்கத்து தெருவுல தான் அவனோட ரூம். அதுனால பாத்துக்குறதுல எந்த கஷ்டமும் இருக்கல. வீக்கென்ட் ஆனா, எங்கையாவது ஒண்ணா வெளிய போவோம்.

வாய்ப்புகள்!

வாய்ப்புகள்!

அவனுக்கு ஐ.டி வர்க் மட்டும் இல்லாம, சில ப்ரைவேட் பார்ட்டி, ஃபங்க்ஷன்ல பாடுறதுக்கான வாய்ப்புகளும் கிடைச்சது. அவனுக்கு பாடகர் ஆகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, அப்பா வற்புறுத்தல் காரணத்தால தான் என்ஜினியரிங் படிச்சான். அவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

இந்த காலக்கட்டத்துல தான் நாங்க ரெண்டு பெரும் பேசிக்கிறது, நேர்ல பாத்துக்குறதுல ஒரு விரிசல் விழுக ஆரம்பிச்சது.

கஷ்டம்!

கஷ்டம்!

வீக்கென்ட் ஆன, ஏதாச்சும் ஃபங்க்ஷன், பார்ட்டி, பாட கூப்பிட்டிருக்காங்கனு கிளம்பி போயிடுவான். முதல்ல எல்லாம் லேட்நைட் வர ஆரம்பிச்சான். அப்பறம் ஈவ்னிங் போயிட்டு மறுநாள் மதியம் மாதிரி தான் வருவான். கேட்டா, கொஞ்சம் பார்ட்டி அது, இதுன்னு சாக்குப் போக்கு சொல்லுவான்.

அவன் குடிக்கிறது எனக்கு பெருசா தப்பா தெரியல. ஆனா, அதுக்கு அடிக்ட் ஆயிட கூடாதுன்னு தான் பயந்தேன். அதே மாதிரி அவன் அடிக்ட் எல்லாம் ஆகல. பார்டினு பாட போனா மட்டும் தான் குடிப்பான்.

8 வருஷம்!

8 வருஷம்!

அப்படி இப்படின்னு எங்கள் லவ் ஸ்டோரி எட்டு வருஷத்த தொட்டுடிச்சு. ரெண்டு பேர் வீட்டுலையும் நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸ்னு மட்டும் தான் தெரியுமே தவிர நாங்க காதலிக்கிறது தெரியாது. அப்ப எனக்கு 26 வயசு. எனக்கு மட்டுமில்ல எங்க ரெண்டு பேருக்குமே. ஆனா, பொண்ணுகளுக்கு 26 கிட்டத்தட்ட டெட் லைன் மாதிரில. அந்த டெட்லைன் எனக்கும் வந்துச்சு.

திருப்பம்...

திருப்பம்...

எங்க வீட்டுலயும் அவன ரொம்ப பிடிக்கும். ஆனா, கல்யாணம் மாதிரியான எண்ணம் எல்லாம் இல்ல. ஆனா, அவங்க வீட்டுல என்ன பிடிக்கும்ங்கிறத தாண்டி, அவங்களே என்ன பெண் கேட்டு, அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முன்வந்தாங்க. ஒரு நாள் அப்பா கிட்ட இருந்த கால் வந்துச்சு.

உனக்கும், அவனுக்கும் வெறும் ஃபிரெண்ட்ஷிப் மட்டும் தானான்னு ஒரு மாதிரி குரல்ல அதட்டி கேட்டாரு. இல்லைப்பா... அது வந்துன்னு நான் இழுத்து பேசுறதுக்குள்ள... அப்பாவே... அவங்க வீட்டுல இருந்து கால் பண்ணி இருந்தாங்க. அவங்களுக்கு உண்ண ரொம்ப பிடிச்சிருக்காம். அவனுக்கு கல்யாணம் பேசி முடிக்க கேட்டாங்க. ஆனா, என்ன இருந்தாலும் உங்க ரெண்டு பேர் கையில தான் முடிவு இருக்குன்னு அப்பா பேச, பேச... நான் எங்கையோ ஆகாயத்துல பறக்க ஆரம்பிச்சுட்டேன்.

விருப்பம் போல...

விருப்பம் போல...

எங்களுக்கு லவ் பண்ணதுல இருந்து, கல்யாணம் வரைக்கும் எந்த பிரச்சனையுமே இல்ல. எல்லாம் அதுவா நடந்துச்சு. சரி! பெத்தவங்களே ஒத்துக்கிட்ட அப்பறம்... அதுவா நடந்த மாதிரி இருக்கட்டும். லவ் பண்ணத எல்லாம் சொல்லிக்க வேண்டாம்னு முடிவு எடுத்தோம். எதுவுமே தெரியாத மாதிரி, உங்களுக்கு ஒகேனா எங்களுக்கும் ஒகேனு தலைய ஆட்டுனோம்.

கொஞ்சம் டைம்...

கொஞ்சம் டைம்...

எங்க ரெண்டு பெரும் குடும்பமும் எல்லா விதத்துலயும் ஒரே மாதிரியானதா இருந்துச்சு. அதனால, ஜாதி, பணம் எதுவும் பிரச்சனையா வரல. பிரச்சனை பண்ணது என் லவ்வர் தான். செட்டிலாக கொஞ்சம் சேவிங்க்ஸ் வேணும். ரெண்டு வருஷம் டைம் வேணும்னு கேட்டான்.

அவன் பையன் ரெண்டு வருஷம் பெருசில்ல. ஆனா, எங்க வீட்டுல ரெண்டு வருஷம் ரொம்ப பெருசு. ரெண்டு மூணு வாரம் பேச்சு வார்த்தை காரசாரமா போச்சு. அதுக்குப்பறம்... ஒகே! எப்படியும் இவங்க தான கல்யாணம் பண்ணிக்க போறாங்கனு சம்மதிச்சுட்டாங்க.

நிறையா ஆஃபர்!

நிறையா ஆஃபர்!

அவனுக்கு பாட நிறையா வாய்ப்புகள் வந்துச்சு. வெளியூர் எல்லாம் போய் பாடிட்டு வந்திருக்கான். எனக்கு அதுல ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு. எப்படியும் சினிமாவுல பாட கூட வாய்ப்பு கிடைச்சிடும்னு பேசிட்டு இருந்தான். எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு.

இந்நேரத்துக்கு எனக்கும் அவனுக்கும் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆயிருக்கனும். ஆனா, ஆகல, கல்யாணம் நின்னுடுச்சு. அதுக்கும் காரணம் அவன் தான்.

சின்ன பொண்ணு!

சின்ன பொண்ணு!

எனக்கும் அவனுக்கும் ஒரே வயசு. இப்ப 29 ஆச்சு. அவனுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆயிடுச்சு. ஆனா, நான் தான் இன்னும் அந்த 10 வருஷ காதலையே நெனச்சுட்டு வாழ்ந்துட்டு வரேன். எங்கையோ வெளியூர்ல பாட பொண்ண ஏற்பட்ட தொடர்பாம். சில சமயம் பாட போறேன்னு என்கிட்டே போய் சொல்லிட்டு அந்த பொண்ண பார்க்க போயிருக்கான்.

ஒருமுறை பார்ட்டியில குடிச்சுட்டு போதையில இருந்தப்ப ரெண்டு பேரும் சேர்ந்து தப்பு பண்ணிட்டாங்களாம். அந்த பொண்ணு நாலு மாச கர்ப்பம். அந்த பொண்ணுக்கு வயசு 21 தான் ஆகுது.

என்ன பண்ண முடியும்?

என்ன பண்ண முடியும்?

10 வருஷ காதலா, இல்ல ஒரு பொண்ணோட வாழ்க்கையானு பார்க்கும் போது.. வாழ்க்கை தான் முக்கியம்னு பட்டுச்சு. அவங்க அப்பா, அம்மா இந்த விஷயம் தெரிஞ்சு ரொம்ப கவலைப்பட்டாங்க.

இந்த ரெண்டு வருஷத்த கெட்ட கனவா நினைச்சு மறந்திடுனு சொல்லி அழுதுட்டு போயிட்டாங்க. எங்க குடும்பங்களுக்கு எங்க காதல் கதை பத்தி தெரியாதனால தாக்கம் கொஞ்சம் கம்மியா இருந்துச்சு.

நடிப்பு!

நடிப்பு!

அப்பவே கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம்னு மட்டும் தன் வருத்தப்பட்டாங்க. அதுலயும்., நல்லவேள கல்யாணத்துக்கு அப்பறம் இந்த மாதிரி தப்பு நடந்திருந்தா என்ன ஆகுறதுன்னு சொல்லி, என் மனச தேத்தவும் முயற்சி பண்ணாங்க.

ஒருவேளை நான் சரியா லவ் பண்ணலையா, இல்ல எங்களுக்குள்ள சினிமாவுல காட்டுற மாதிரியான ரொமான்ஸ் எதுவும் நடக்காததால அவன் வாய்ப்பு கிடைச்சு பயன்படுத்திக்கிட்டானன்னு தெரியல.

ஒன்னு மட்டும் உறுதி... இந்த காலத்துல காதலிக்கிறவங்களவிட, காதலிக்கிற மாதிரி நடிக்கிறவங்க, காதலிக்கிறதா நெனச்சுட்டு வேற ஏதோ பண்ணிட்டு சுத்துறவங்க தான் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: He Replaced Me with a Young Girl. And Cancelled the Wedding.

Real Life Story: He Replaced Me with a Young Girl. And Cancelled the Wedding.
Desktop Bottom Promotion