For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இடத்தை விட்டு வரமாட்டேன் ஓர் விலைமாதுவின் கண்ணீர் வேண்டுகோள்! my story#285

|

வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் நாம் எதிர்ப்பார்த்தபடியே நடக்கிறதா என்ன? யாரோ வழிகாட்டுகிறார்கள் யார் யாரோ நம்மை வழிநடத்துகிறார்கள். அந்த பாதையின் முடிவு குறித்து யாருக்கும் எதுவும் தெரிவதில்லை.

தடம் மாறிச் செல்கிறாய் என்று ஆழ்மனது நம்மை எச்சரித்தாலும் எங்கே தடுத்து நிறுத்துவது என்பதெல்லாம் சாத்தியமில்லை. நம்பி உடன் பழகிய நபர்களே நமக்கு துரோகம் இழைத்துவிடும் போது அதிலிருந்து மீண்டு வரப்பார்ப்போமா அல்லது அவர்கள் காட்டிய வழி தவறு அதிலிருந்து நம்மை மீட்க வேண்டும் என்று சிந்தித்து செயல்படுவோமா?

வாழ்க்கை குறித்த ஓர் பயம் எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது அதை பயன்படுத்திக் கொண்டு அந்த பயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் விளையாட அங்கே பாதிக்கப்படுவது நாமாகத்தான் இருப்போம். இங்கே பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட ஒரு பெண் தன் கடந்த காலத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

எனக்கு இப்போ வயசு 32. பத்து வருசமா இதே தொழில்ல தான் இருக்கேன்... சந்தோசமாத்தான் இருக்கேன்... இருக்க இடம் மூணு வேல சாப்பாடு, நைட்டு சரக்குன்னு இருக்கு. என்னைய நம்பி யாரும் இல்ல எனக்கு சோறு கிடைக்குதோ இல்லையோ புள்ளைக்கு புருஷனுக்கு சம்பாதிச்சு போடணும்னு அவனுக வயித்துக்கு சோறு போடணும்னு அவசியமில்ல...

இதுல எங்கயிருந்து சந்தோசம்... துக்கம்னு எல்லாம் வருதுன்னு தெரியல.

Image courtesy

 #2

#2

இங்க வந்த புதுசுல என்னைய எல்லாம் ஒரு மாதிரி பரிதாபமா பாப்பாங்க சிலர் ரொம்ப கேவலமா பாப்பாங்க. நம்மள ஒரு மனுஷனா ஏன் உயிருள்ள ஒரு பொருளாவே மதிக்க மாட்டாங்க அப்ப எல்லாம் ரொம்ப வலிக்கும்... அப்பறம் போகப்போக அது எல்லாம் பழகிடுச்சு.

கஸ்டமர்னு வர்றவங்க சில சமயம் அடிப்பாங்க, சிகரெட்டால சூடு வைப்பாங்க, ஒரு மனுஷனா ஏன் உயிருள்ள ஒரு ஜீவனா கூட நினைக்கமாட்டாங்க ...

Image Courtesy

#3

#3

இங்க இருக்குற ஜனங்க எப்போவாவது போதையில வீட்ட நினச்சு அவங்களோட குழந்த, பெத்தவங்கள நினச்சு அழுவாங்க இங்க இருந்து எப்டியாவது தப்பிச்சு போய்டணும்னு தினம் தினம் அழுவாங்க... ஆனா எனக்கு அப்டி தோணினதில்ல. சாவுற வரைக்கும் இங்கேயே இருந்து செத்து போய்டணும்னு தோணும்.

இத வெளிய சொன்னா அப்பயும் அசிங்கமாத்தான் நம்மள பேசுவாங்க... நீ எல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்திருக்க மாட்ட அது இதுன்னு ரொம்ப அசிங்கமா பேசுவாங்க.

Image Courtesy

#4

#4

எனக்கு ரெகுலரா கஸ்டமர் வந்திடுவாங்க. பெரும்பாலும் கஸ்டமர் சொல்ற இடத்துக்கு போக வேண்டியதா இருக்கும்... நைட் நேரத்துல எங்கள மாதிரி பொம்பளைங்கள வெளிய தனியா பாத்தா சும்மா விடுவாங்களா?

போய்ட்டு வர்றதுக்குள்ள பெரும் ரோதனையா இருக்கும். ஐநூறு ரூபாய்ல இருந்து ஆயிரம் ரூபா வரைக்கும் கொடுப்பாங்க அத அப்டியே மேடம் கையில கொடுத்துடணும்... சில சமயம் எல்லாம் மேடமே டைரக்டா டீலிங் பேசி காசு வாங்கியிருப்பாங்க... ரிட்டர்ன் போக ஒரு ஐம்பது ரூபா காசு கொடுன்னு கேட்டா கூட கொடுக்க மாட்டானுங்க...

Image Courtesy

#5

#5

இதுக்கு சீசன் டைம் எல்லாம் ஒண்ணும் இல்ல... இந்த சீசனுக்கு கஸ்டமர் நிறைய வருவானுங்கன்னு நம்ம கணிச்சு சொல்லவே முடியாது. ஆரம்பத்துல சம்பள தேதி அன்னைக்கு வந்து குமிவானுங்க... ஆனா இப்போ அப்டியெல்லாம் இல்ல மேடமும் ஆன்லைன்ல பணம் வாங்கிப்பாங்க

அதனால எல்லா நாளும் ஒரே மாதிரி தான். எதாவது முக்கியமான விஷேச நாளு... அன்னைக்கு மட்டும் கொஞ்சம் டல்லடிக்கும்... அப்ப எல்லாம் எங்கள மாதிரி கொஞ்சம் வயசானவங்களுக்கு ஆளே கிடைக்காது... ஆனா எல்லா சின்ன புள்ளைங்களும் புக் ஆகிடும்.

Image Courtesy

#6

#6

அப்டி என்னைக்காவது தனியா உக்காந்திருக்குறப்போ நான் இங்க வந்து சேர்ந்த கதைய நினச்சு பாப்பேன்... இப்போ அத நினச்சா சிரிப்பா இருக்கும்... நம்மளோட கதை நமக்கே சிரிப்பு வரணும்னா அதுக்கெல்லாம் ஒரு மனப்பக்குவம் வேணும் தான. இன்னைக்கு என்னமோ சிரிப்பா இருக்கு ஆனா அந்த நாட்கள் ரொம்பவும் கொடுமையானது. எப்பிடி அந்த நாட்கள கடந்து வந்தேன்னு இன்னைக்கும் ரொம்ப வியப்பாதான் இருக்கு.

எங்க ஊருக்கு... அம்மா அப்பாவ பாத்து கிட்டதட்ட பத்து வருசத்துக்கு மேலேயே இருக்கும். இப்ப அவங்க எங்க இருக்காங்க தம்பி எப்டி இருக்கான்... அவன் பைக் வாங்கணும்னு ரொம்ப ஆசப்பட்டான் அது வாங்கிட்டானா? இந்நேரத்துக்கு அவனுக்கு கல்யாணமாகியிருக்கும். பொண்ணு எப்டியிருப்பா ? அம்மா கண்டிப்பா என்னைய திட்டிட்டே இருப்பா இன்னும் கோபம் இருக்கான்னு தெரியல அப்பா வாயவே தொறக்கமாட்டாரு... அப்பாவோட செருமலுக்கும்.. தலையசைவுக்கும் கூட ஒர் அர்த்தம் கண்டுபிடிச்சு அத கேள்வியா நினைச்சுட்டு பதில் சொல்ற பக்குவம் அம்மாவுக்கு மட்டும் தான் வாய்க்கும்.

Image Courtesy

 #7

#7

பொம்பளப்புள்ளைய கண்டிச்சு வளக்கணும்னு வியாக்கானம் பேசுற அறிவாளிப் படையை சேர்ந்தவங்க என் குடும்பம். வாசலுக்கு கூட சாதரணமா நிக்க விட மாட்டாங்க ஒரே வீடு ஆனா நான் ஒரு வாழ்க்கையும் என் தம்பி வேறொரு வாழ்க்கையும் வாழ்ந்தோம். இறுக்கப்பிடிச்சு கூண்டுல அடச்சு வச்சு ரொம்ப நசுக்குனனாலையோ என்னவோ விட்டா போதும் வெளிய பறக்கணும்னு தோண ஆரம்பிச்சிடுச்சு

ஜெயிலுக்குள்ள இருந்து கொஞ்ச வெளி உலகத்துக்க பாக்கணும்னு தோணுச்சு ஆனா வெளிய போன என்னால திரும்ப உள்ள போகவே முடியல..அப்டி வெளிய வந்த என்ன அவங்க யாரும் ஏத்துக்கவும் தயரா இல்ல.

Image Courtesy

#8

#8

வழக்கம் போல அந்த ஜெயிலுக்குள்ள இருந்து தப்பிக்க எனக்கு உதவினது ஒரு காதல்... எங்க காதல் கதையில சுவாரஸ்யமா சினிமாவுல காட்டுற மாதிரி பாத்து பாத்து சிரிக்கிறது, சித்த பிரம்ம புடிச்ச மாதிரி எங்கேயோ பார்த்துட்டு எதாவது யோசிச்சுட்டு இருக்குறது இரவு பகல் பாக்காம போன் பேசுறது நீ இல்லன்னா நான் இல்ல.... நம்ம கடைசி வரைக்கும் ஒண்ணா இருக்கணும்னு டயலாக் பேசுறது. அம்மு... செல்லமேன்னு கொஞ்சுறது அதெல்லாம் எதுவும் இல்ல.

எங்க குடும்பத்துல இருக்குற அந்த மூணு முகத்த தாண்டி நாலாவதா ஒரு புது முகத்த பாத்தேன்... ஒரு ஆச்சரியம்.என்னோட ஆச்சரியத்த நான் விடுக்குற விருப்பமா எடுத்துக்கிட்டான். அவ்ளோ தான். தயக்கங்களோட பேச ஆரம்பிச்சோம்.

Image Courtesy

 #9

#9

எந்த நெருக்கடியும் வர்ல திடீர்னு ஒரு நாள் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னான் நான் தலையாட்டிட்டு அவன் பின்னாடியே வந்துட்டேன். நாங்க பேச ஆரம்பிச்ச மூணு மாசத்துல இந்த சம்பவம் நடந்திடுச்சு...

எதப்பத்தியும் யோசிக்கல.... யோசிக்கத் தோணல அம்மா அழுதுட்டே இருந்தா... அப்பா ரொம்ப அசிங்கமா திட்டினாரு தம்பி உன் மேல ரொம்ப கோபத்துல இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு வாரம் அங்க இங்கன்னு சுத்தினோம் கோவில்ல வச்சு தாலி கட்டினான். அவன் ஃபிரண்டு வீடுன்னு ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான். நம்ம வீடு பாக்குற வரைக்கும் இங்க தங்கிக்கோன்னு சொல்லிட்டான். நான் போய் நல்ல வேலையா பாத்துட்டு வீடு தேடிட்டு வரேன் நைட்டுக்குள்ள வந்திடுவேன்னு சொல்லிட்டு போனான் இந்த பத்து வருஷத்துல இன்னும் ஒரு இரவு கூட வர்ல போல போனவன் போனவன் தான்.

#10

#10

அப்பறம் தான் அவன் கொண்டு வந்து விட்டது அவன் ஃபிரண்ட் வீடு இல்ல ப்ராத்தல் நடக்குற வீடு என்னைய ஒரு லட்ச ரூபா பணத்துக்கு வித்துட்டு போயிருக்கான்னே தெரிஞ்சது.... நிறைய அழுதுட்டேன் இதுக்கு மேல கண்ணீர் எல்லாம் இல்ல அதான் இப்போ உக்காந்து அத நினச்சு சிரிக்கிறேன்.

சில யுனிஃபார்ம் போட்டவங்க ஒரே கலர்ல டிரஸ் போட்டவங்க பேப்பரும் பேனாவும் எடுத்துட்டு கேமராவ தூக்கிட்டு இங்க அடிக்கடி வருவாங்க எல்லார்ட்டையும் உக்காந்து கதை கேப்பாங்க... ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்து மாத்திர கொடுப்பாங்க. என்கிட்டயும் இந்த கதைய நிறைய தடவ கேட்டிருக்காங்க உங்கள இங்க இருந்து ரிலீஃப் பண்ண நாங்க ஹெல்ப் பண்றோம். ஒரு புது வாழ்க்கைய தொடங்குங்க வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர்றோம், கவுன்சிலிங் கொடுக்குறோம்னு நிறைய சொல்வாங்க...

#11

#11

அவங்க கிட்ட சொல்றதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். இல்லங்க இங்க இருந்து வர்றமாதிரி இல்ல... நான் சாவுற வரைக்கும் இங்கேயே இருக்கணும்னு ஆசப்படறேன்.

உனக்கு என்ன பயித்தியமா?ன்னு அட்வைஸ் பண்ணுவாங்க இன்னொரு பக்கம் ரொம்ப அசிங்கமா என்னைய திட்டுவாங்க. சிலர் என் புருஷனுக்காக சாவுற வரைக்கும் காத்திருக்குறதா அவங்களாவே நினச்சுப்பாங்க... அதான் வித்துட்டு போய்ட்டான் அப்பறம் என்ன காத்திருக்குறது?? வெளிய வந்துட்டேன் எனக்கு இந்த தொழில விட்டா வேற எதுவும் தெரியாது. எனக்கான தேவைகள பூர்த்தி செஞ்சுக்குறேன். எனக்கான வேதனைகள நானே சுமக்குறேன். இதே போதும்னு நினைக்கிறேன் அதத் தாண்டி வேறெந்த காரணமும் இல்ல காரணங்கள யோசிக்கவும் தெம்பு இல்ல.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship my story women life
English summary

Prostitute Women Shares Her Story

Prostitute Women Shares Her Story
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more