For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  3 குழந்தைகள், 25 வயதில் கணவர் மரணம், 50 வயதில் கண்ட முதல் காதல்!

  By Staff
  |

  இது வங்காள தேசத்தை சேர்த்த புகைப்பட கலைஞர் மற்றும் மனிநேய ஆர்வலருமான ஜிஎம்பி ஆகாஷ் என்பவரது முகநூலில் பதிவு செய்யப்பட்ட மனதை உருக்கும் உண்மை கதையின் தமிழாக்கம்...

  என் கணவர் இறந்த போது, எனக்கு வயது 25. எங்களுக்கு மூன்று குழந்தைகள். கணவரின் இறுதி சடங்களை செய்ய, என்னிடம் இருந்த இரண்டு தங்க வளையல்களை விற்றேன். அப்போது எனக்கு உதவவோ, உறுதுணையாக இருக்கவோ யாரும் இல்லை. எங்கே செல்வது, என்ன செய்வது என்ற புரியாமல் நட்டாத்தில் நின்றுக் கொண்டிருந்தேன். நான் பிழைக்க என் கையில் எதுவுமே இல்லை. நாட்களை கடக்க, பசியாற சாலை ஓரங்களில் ரொட்டி விற்க துவங்கினேன்.

  ரொட்டி விற்ற பணத்தை சிறுக, சிறுக சேமித்தேன். கடந்த இருபது வருடங்களில் ரொட்டி, முட்டைகள் விற்று எனது குழந்தைகளை பாதுகாத்து, உணவளித்து, படிக்க வைத்து வருகிறேன். இந்த இருபது வருடமாக என்னால் இந்த சிறிய வீட்டுக்கு வாடகை அளித்து, எனது உணவகத்தை மட்டுமே நடத்தி வர முடிகிறது. இதன் மூலம் வருமானம் வைத்து என் குழந்தைகளுக்காக சொந்த கிராமத்தில் சிறிய இடத்தை வாங்கி வைத்துள்ளேன். அங்கே அவர்களுக்காக வீடும் கட்டிவிட்டேன். அவர்கள் திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கடுமையான நாட்கள்...

  கடுமையான நாட்கள்...

  எனக்கு இப்போது வயது ஐம்பது. சரியாக எனது வாழ்வில் பாதிநாளை நான் தனிமையில் தான் வாழ்ந்து வந்துள்ளேன். இந்த பயணத்தில் பல கடுமையான நாட்களை நான் கடந்து வந்துள்ளேன். இங்கே என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாக்க பல காரியங்கள் நான் செய்துள்ளேன். என் மீது அன்பு செலுத்தவோ, என்னை அக்கறையாக பார்த்துக் கொள்ளவோ இங்கே யாரும் இல்லை. என் தனிமையான நாட்களில் என்னுடன் பேசவும், மோசமான நாட்களில் என் தனிமையில் துணையாக இருக்கவும் யாரும் இல்லை. நான் தனியாகவே இருக்கிறேன்.

  ஒரு நாள்...

  ஒரு நாள்...

  ஒரு நாள் என் உணவகத்திற்கு ஒரு தொழிலாளி வந்தார். அவர் தினமும் என் உணவகத்திற்கு மத்திய உணவு உண்ண வருபவர் தான். அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அதை கவனிக்கும் போதெல்லாம் சாப்பிட துவங்குவார். மற்ற நேரங்களில் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்த பின்னரும் அவர் நீண்ட நேரம் என் உணவகத்திலேயே இருப்பார். நான் கேட்காமலேயே எனக்கு உதவ ஆரம்பித்தார். சாப்பிட வருவோருக்கு உணவு பரிமாறுவார், பாத்திரங்கள் கழுவ உதவுவார். அனைத்து வகையிலும் என் உணவகத்தில் உதவிகள் செய்தார். எனக்கு அவரை பிடிக்க ஆரம்பித்தது, அவர் மீது காதல் கொண்டேன்.ஒரு நாள் என்னை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக கூறினார்.

  அச்சம்

  அச்சம்

  ஆனால், அவரிடம் அப்போது எனது விருப்பதை கூற என்னால் இயலவில்லை, இந்த ஊரும், அதன் மக்களும் என்ன நினைப்பார்கள் என்ற அச்சம் என்னுள். அதற்கெல்லாம் மேலாக என் பிள்ளைகள். இந்த வயதான காலத்தில் காதல், திருமணம் எல்லாம் எப்படி. நான் தனியாக இருக்கிறேன் என கவலைப்பட யாரும் இல்லை. ஆனால், இந்த விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க பெரும் கூட்டமே இருக்கிறது. எனக்கும் எனக்கு துணையாக ஓர் நபர் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என் குழந்தைகள் மீது நான் அதிக பாசம் கொண்டுள்ளேன். அவர்களை தாண்டி எனக்கு எதுவும் தேவையில்லை.

  ஊருக்கு கிளம்பினேன்...

  ஊருக்கு கிளம்பினேன்...

  ஆகவே, எனது உணவகத்தை மூடிவிட்டு பேசாமல் ஊருக்கே சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆகையால், இத்தனை நாட்கள் நான் சம்பாதித்த நற்பெயரும் மோசமாகாது. குழந்தைகளுடன் என் கிராமத்தில் வாழலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், அந்த நபர் என்னை விடுவதாய் இல்லை. என்னை பின்தொடர்ந்து என் கிராமத்திற்கே வந்தார். என்னை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக என் குழந்தைகளிடம் கூறினார். அவரை அவமானப்படுத்தி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தி விரட்டினார்கள்.

  அவமானப்படுத்தினார்கள்...

  அவமானப்படுத்தினார்கள்...

  அதை எல்லாம் என்னால் காண இயலவில்லை, அவரிடம் இந்த கிராமத்தை விட்டு சென்றுவிடும் படி கெஞ்சினேன். என் பேச்சை கேட்டு அந்த கிராமத்தை விட்டு வெளியேறினார். அந்த நிகழ்வுக்கு பிறகு என் சொந்த பிள்ளைகளே என்னிடம் மோசமாக நடந்துக் கொண்டனர். என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். நான் அவர்களுக்காக என்னவெல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதை அவர்கள் ஒரே நொடியில் மறந்துவிட்டனர். என்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் பிடுங்கிக் கொண்டு என்னை மீண்டும் தெருவில் விட்டனர்.

  மீண்டும்...

  மீண்டும்...

  நான் மீண்டும் எனது உணவகதிற்கே திரும்பினேன். அவமானப்படுத்திய பிறகு அந்த நபர் மீண்டும் வரமாட்டார் என்றே கருதினேன். ஆனால், எனக்காக தினமும் அவர் காத்திருந்தார். மீண்டும் என்னை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக கூறினார். நாங்கள் ஒருவரும் கடந்த ஐந்தாண்டுகளாக ஒன்றாக தான் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து ஒரு சிறிய உணவகத்தை நடனத்தி வருகிறோம். நான் சமைக்கிறேன், என் கணவர் உணவு பரிமாறி, பாத்திரங்களை கழுவி வைத்துவிடுவார். என்னை காட்டிலும் அதிக வேலை அவர் தான் செய்கிறார். அவர் எப்போதுமே ஒரு வாக்கியம் கூறுவதுண்டு.. "நான் உன் வாழ்வில் மகிழ்ச்சியை அளிக்க வந்துள்ளேன்"

  கவலையில்லை...

  நான் ஐம்பது வயதில் திருமணம் செய்துக் கொண்டேன் என என்னை பார்த்து சிரிக்கும் மக்கள் இருக்கிறார்கள். சில சமயம் அவர்கள் என்னை கேவலமாக காண்பதும் உண்டு. ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் அவர்களை எல்லாம் ஏறெடுத்து பார்ப்பதே இல்லை. இனிமேலும், அவர்களை எல்லாம் எண்ணி கவலைப்பட்டு என்ன பயன். - கொமோலா

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Meet The Woman Who Fall in Love in Age of 50!

  My husband died and left me with my three children when I was 25 years old. I had to sell my only pair of gold bangles for the funeral of my husband.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more