எனது இல்லீகல் உறவால், என் தாயை இழந்தேன் - #197

Posted By: Staff
Subscribe to Boldsky

அனைவரையும் போல அம்மா என்றால் எனக்கும் மிகப்பெரிய காதல் இருந்தது. மகள்களுக்கு அப்பாக்கள் ஹீரோ, மகன்களுக்கு அம்மா தான் எல்லாமே... முதல் காதலி, ஆதி கடவுள், அழுகையில் மனதை தேற்றிவிடும் தோழி.

அம்மாவை அம்மா என்று அழைப்பதை காட்டிலும் செல்லப்பெயர் வைத்து அழைப்பது மகன்களுக்கு பிடித்தமான செயல். ஆனால், அம்மா பெயரே செல்லமாக இருந்தால். ஆம்! என் அம்மா பெயரே செல்லம்மா தான்.

அவள் மீது யாருக்கும் கோபமே வராது. அவள் வாழ்வில் பெரிய சந்தோஷம் எதையும் கண்டதில்லை. அவள் மரணமும் கூட அவசர கதியாக தான் முடிந்தது.

அவள் இருந்த வரை என் வாழ்வில் அவள் எத்தனை பெரிய பங்கு கொண்டிருந்தாள் என்பதை நான் அறியவில்லை. இறந்த பிறகே தினம், தினம் வருந்தி அழுகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் திருமணம்!

காதல் திருமணம்!

80களில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் என் அம்மா - அப்பா. ஏறத்தாழ பள்ளி படிப்பின் இறுதி ஆண்டிலேயே இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள் என்று அடிக்கடி கதை கூறுவார்கள். அம்மாவின் பெற்றோருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆகையால் நான் பிறக்கும் வரையிலும் அவர்கள் அம்மாவை வந்து பார்க்கவே இல்லை.

என் குடும்பம்!

என் குடும்பம்!

அப்பா, செல்லம்மா, அண்ணா நான். இது தான் எங்கள் குடும்பம். அப்பா கொஞ்சம் கோபக்காரர்.

எப்போதுமே ஆண்கள் வீட்டில் புலியாகவும், வெளியே எலியாகவும் இருப்பார்கள் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எங்கள் வீட்டில் அப்படியே நேரெதிர். அப்பா வெளியே மிகவும் கோபக்காரர். அவர் கோபப்படாத ஒரே ஆள், அவர் கோபத்தை கட்டுப்படுத்தும் ஒரே ஆள் செல்லம்மா தான்.

மகிழ்ச்சியான நாட்கள்!

மகிழ்ச்சியான நாட்கள்!

பி.யூ.சி படித்த தகுதிக்கு அப்பாவுக்கு அரசு வேலை கிடைத்து எங்கள் குடும்பம் நன்றாக தான் வாழ்ந்து வந்தனராம். சரியாக கூற வேண்டும் என்றால் எனக்கு விவரம் தெரியும் வயதுவரை. நல்ல வசதி, ஒவ்வொரு வாரமும் எங்காவது வெளியே கூட்டி சென்று அப்பா அசத்துவார் என்று அண்ணன் நினைவு கூர்ந்து சொல்லும் போதெல்லாம், எனக்கு கொஞ்சம் ஆதங்கம் பிறக்கும். ஏனெனில், அவை எல்லாம் என் நினைவில் இல்லை.

எனக்கு நினைவில் இருப்பது எல்லாம் அப்பா குடித்து வந்து வாக்குவாதம் செய்தவை மட்டுமே.

வேலை பறிபோனது!

வேலை பறிபோனது!

ஒரு நாள் மேலாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தாராம் அப்பா. அதன் பிறகு அரசு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால், லோட் ஏற்றும் இடத்தில் கண்காணிப்பாளர் வேலைக்கு செல்ல துவங்கினார். சம்பளம் குறைவு, ஆகவே கொஞ்சம் நிலை தடுமாற துவங்கினார். கூடவே குடி பழக்கம் ஓட்டிக் கொண்டது.

அப்பாவின் கோபத்தை கட்டுப்படுத்த தெரிந்த அம்மாவிற்கு, அப்பாவின் இந்த புதிய பழக்கத்தை நிறுத்த முடியாவில்லை. வேலை, அலைச்சல் என்று ஏதேனும் காரணம் கூறுவார். ஒருசில வருடங்கள் கழித்தே குடி பழக்கம் கொஞ்சம் குறைந்தது. ஆயினும், நிப்பாட்ட முடியவில்லை. இப்படியான காலக்கட்டத்தில் நான் வளர்ந்தேன்.

அப்பாவின் குடி பழக்கம் காரணத்தால் அம்மா மீது அதிக பாசமும், அப்பா மீது கொஞ்சம் வெறுப்பும் எனக்கு அதிகம்.

12ம் வகுப்பு!

12ம் வகுப்பு!

நான் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அண்ணா கல்லூரி படித்து வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தான். அப்பா, அம்மா இருவரும் போதுமான அளவு சம்பாத்தியத்தில் ஒரு வேலை பார்த்து வந்தனர். ஆகயால், கேட்கும் போதெல்லாம் பாக்கெட் மணி கிடைத்தது. நண்பர்களுக்கு செலவு செய்வதையே வழக்கமாக வைத்திருந்தேன்.

கருப்பு!

கருப்பு!

நான் கருப்பு என்பதை நான் எப்போதுமே ஏளனமாக கண்டதில்லை. யாராவது என்னை கருப்பு என்றலும் கூட, அதை தட்டிவிட்டு சென்றுவிடுவேன். இந்த கருப்பு என்ற ஒன்று என் வாழ்வில் பெரிய தாக்கம் உண்டாக காரணமாக இருந்தது.

நான் சிரித்து, சிரித்து பேசுவதை விரும்பி என்னுடன் நட்பாக பழக பலர் இருந்தனர். ஆனால், யாருக்கும் கருப்பாக இருந்தால் காதல் வராது என்ற அனுபவத்தை கொடுத்தது என் பள்ளியின் கடைசி ஆண்டு.

காதல்!

காதல்!

புகை, மது என எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. ஆனால், இந்த பழக்கம் எல்லாம் இருக்கும் (கொஞ்சம் நிறமாகவும் இருக்கும்) என் தோழர்கள் மீது பெண்களுக்கு வந்த காதல் என் மீது வராதது ஏன் என்ற தாக்கம் என்னுள் அதிகரிக்க துவங்கியது.

இதுகுறித்து என் நண்பர்களிடம் கேட்டால் கேலி செய்தனர். சிலர் "டேய் லவ் எல்லாம் தானா வரும் டா நிறம் எல்லாம் ஒரு பொருட்டே இல்ல" என்றனர். ஆனால், என் மீது யாருக்கும் காதல் வரவில்லையே.

 பிரச்சனை!

பிரச்சனை!

என் பள்ளிக்கு அருகே இருக்கும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணை நான் விரும்பி வந்தேன். நானும், என் தோழர்களும் எப்போதுமே அவளை காண மாலை வேலை அந்த பள்ளி வழியாக நடந்து சென்று வருவோம்.

ஆனால், என் கருப்பு விதி எங்கேயும் என்னை விட்டுவைக்கவில்லை. நான் விரும்பிய பெண் என் தோழனை விரும்பினால்.

இந்த சூழல் தான் என்னுள் காதல் மீதும் கருப்பின் மீதும் பெரும் கோபத்தை உண்டாக்கியது.

உடல்நலம் குன்றி போனேன்...

உடல்நலம் குன்றி போனேன்...

பள்ளிப் படிப்பு முடிந்த காலம்.... ரிசல்ட் வரவில்லை... விடுமுறை நாட்களில் வெயிலில் விளையாடி மகிழ்ந்த காரணத்தால் உடல்நலம் கொஞ்சம் குண்டி போனேன். என் அத்தை அட்மினாக பணிப்புரியும் மருத்துவமனைக்கு தான் எப்போதுமே செல்லும் வழக்கம்.

அத்தை உடன் இருப்பதால், அப்பா, அம்மா அண்ணா இரவு மட்டும் வந்து பார்த்து செல்வார்கள். அண்ணன் இரவு என்னுடன் உறங்கிக் கொள்வான்.

நர்ஸ்!

நர்ஸ்!

அப்போது தான் என்னை கவனித்துக் கொள்ளும் நர்ஸ் உடன் பழக்கம் ஏற்பட்டது. என்னை போலவே கருப்பால் வஞ்சிக்கப்பட்ட பெண் அவள். ஆனால், அவளுக்கு என்னை விட ஐந்தாறு வயது அதிகம். ஆயினும், "கருப்பு" என்ற வஞ்சனை எங்கள் இருவருக்குள் ஒரு ஈர்ப்பை வரவழைத்தது.

அன்று இரவு ஷிப்ட் அவளுக்கு. என் வாழ்க்கை புராணத்தை முழுவதும் கூறினேன். அம்மா இல்லாத அவளுக்கு என் அம்மாவை மிகவும் பிடித்துப் போனது. ஆகையால், மறுநாளில் இருந்து அம்மா வந்தால் உடனே வந்து பார்த்து செல்வாள்.

வீட்டில் ஒருத்தியானாள்...

வீட்டில் ஒருத்தியானாள்...

நான் ஒரு வாரம் கழித்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகும் கூட அவளை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வருவேன். விடுப்பு நாளில் அவள் எங்கள் வீட்டுக்கு வருவாள். நாங்கள் இருவரும் கோவில், படம், வெளியிடங்கள் எல்லாம் சென்று வர துவங்கினோம்.

எங்களுக்கு நட்புறவு இருந்த போதிலும், என்னை விட ஆறு வயது மூத்தவள் என்றதால் நாங்கள் சகோதர உறவில் பழகுவதாக தான் அனைவரும் கருதினார்கள்.

பாசம்!

பாசம்!

அம்மாவுக்கும் அவளை மிகவும் பிடித்து போகவே, நேரம் இருந்தால் மாதம் சில நாள் எங்கள் வீட்டிலேயே தங்கி செல். இல்லையேல் நீ இங்கேயே தங்கினாலும் கூட எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று கூறினார். மகள் இல்லாத குறையாக அவளை பார்த்துக் கொண்டார் அம்மா.

ஓரிரு மாதங்கள் இப்படியாக தான் நகர்ந்தது எங்கள் உறவு. என் அண்ணனும் அவள் மீது அதிக பாசம் செலுத்தினான்.

ஒரு நாள்...

ஒரு நாள்...

ஒருமுறை எங்கள் வீட்டில் அவள் ஒரு வாரம் தங்கியிருந்தால். எனக்கு ரிசல்ட் வந்துவிட்டது. எந்த கல்லூரியில் சேர வேண்டும், என்ன துறை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பெரும் குழப்பம்.

நானும், அவளும் தான் பல கல்லூரிகளுக்கு சென்று துறை வாரியாக விசாரித்து வந்தோம்.

அன்று வெயில் அதிகமாக இருந்த காரணத்தால் மதியம் விரைவாக வீடு திரும்பினோம். உடல் அசதியாக இருக்கிறது என்று குளித்து வர சென்றாள். எங்களுக்குள் இருந்த நட்பு திசை மாறியது அன்றைய தினம் தான். அதை காதல் என்று தவறாக புரிந்து இணைந்தோம்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

அதன் பிறகு அவள் பலமுறை எங்கள் வீட்டுக்கு வந்து செல்வாள். காதல் என்ற பெயரில் பலமுறை எல்லை மீறினோம்.

அந்த காலக்கட்டத்தில் தான் அம்மா திடீரென ஒருநாள் அலுவலகத்தில் மயங்கி விழுந்துவிட்டார் என்ற அழைப்பு வந்தது. அதே மருத்துவமனையில் தான் சேர்த்தோம். பல பரிசோதனைகள் செய்தனர். முடிவில் அம்மாவிற்கு புற்றுநோய் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்கள்.

மார்பக புற்றுநோய், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை அகற்ற வேண்டும் என்றனர்.

அறுவை சிகிச்சை முடிந்தது. அம்மா மிகவும் நலம் குன்றி போனாள். எப்போதுமே அவள் அருகில் ஒருவர் இருக்க வேண்டும் என்ற நிலை. அவள் தான் வந்து அம்மாவை அடிக்கடி பார்த்துக் கொள்வாள். அந்த கட்டத்தில் அவள் மீது அம்மாவுக்கு இன்னும் பாசம் அதிகரித்தது.

குட்டு உடைந்தது!

குட்டு உடைந்தது!

ஒரு நாள் அம்மா மருந்து உட்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.

அன்று எங்களுக்குள் இருந்த ஈர்ப்பு, நாங்கள் செய்த காரியம் அம்மா கண்டிருப்பாளோ என்ற சந்தேகம் இன்று வரை எனக்குள் இருக்கிறது. நாங்கள் கொஞ்சி குலாவி கொண்டிருக்க, இடையே ஒருமுறை அம்மாவின் இருமல் சத்தம் எங்களை தடுத்தது.

அதன் பிறகு அம்மா அவள் மீது பாசமாக இல்லை. என் மீதும் கூட. எந்த உதவியாக இருந்தாலும் என்னை அழைக்கும் அம்மா, அண்ணனை அழைக்க துவங்கினாள்.

இழந்தேன்!

இழந்தேன்!

அவளது அழைப்பை மட்டுமல்ல, அடுத்த இரண்டே மாதத்தில் அவளையும் நான் இழந்தேன்.

தான் மகளாக கருதிய பெண்ணுடன், இப்படியான உறவில் என் மகன் இருக்கிறானே என்ற எண்ணம் அவரது உடல்நலத்துடன் சேர்த்து மன நலத்தையும் பாதித்திருக்கலாம். புற்று நோயை தாங்கிக் கொண்ட செல்லம்மாவால் எனது இந்த தகாத உறவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இறந்துவிட்டாளோ என்ற வலி என்னுள் பல ஆண்டுகள் கழித்தும் நீடித்து நிலைக்கொண்டு இருக்கிறது.

நான் செய்த பாவத்திற்கான தண்டனையை இன்றும் அனுபவித்து வருகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: I Lost My Mom Because of Illegal Relationship!

My Story: I Lost My Mom Because of Illegal Relationship!
Story first published: Thursday, March 8, 2018, 13:32 [IST]