விதவிதமான உடைகளால் மட்டும் பெண்களை வசீகரிக்க முடியாது! - சொல்வது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்காவைத் தாண்டி மிகவும் பிரபலமான மக்கள் மத்தியில் அதிகம் பரிச்சயமான நபர் என்றால் அதிபர் ஒபாமாவைச் சொல்லலாம். அமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையுடன் இளம் வயதில் அதிபராகி சாதனை படைத்திருந்தார்.

ஒபாமாவுடன் சேர்த்தே அவரது மனைவி மிச்சேல் மகள்கள் மாலியா மற்று சாஷா இருவரும் சேர்ந்தே பிரபலமடைந்தனர். என்ன தான் நான் அமெரிக்காவின் அதிபர் என்ற அந்தஸ்த்து இருந்தாலும் அதனை சிறிதும் வெளிக்காட்டாமல் மிகவும் எளிமையாகவே நடந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தந்தை :

தந்தை :

அரசியல் களத்தில் நின்று பொதுமக்களின் பிரச்சனைகளையும் உலக நாடுகளின் பிரச்சனைகளையும் கவனித்தாலும் ஒபாமா தன் மகளுக்கு ஓர் சராசரி தந்தையாகவே தன்னுடைய இடத்தை நிறுவினார்.

பள்ளிப்படிப்பு முடிந்து மேற்படிப்பிற்காக ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மகள் மாலியாவை சேர்த்துவிட்டு திரும்பும் போது உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டார். அதை வெளியில் சொல்லும் போது, மகளை விட்டு பிரிவது எனக்கு வருத்தமாக இருந்தாலும் அவள் முன்னால் அழவில்லையே என்று பெருமைபடுகிறேன் என்றார்.

அப்பா :

அப்பா :

தன்னுடைய அதிபர் பதவிக்காலம் முடிந்து பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகள்களை நோக்கி இதுவரை நான் செய்ததிலேயே பெருமைக்குரிய விஷயமாக கருதுவது உங்களுக்கு நான் அப்பாவாக இருப்பது தான் என்றிருக்கிறார்.

குழந்தைகள் தான் எல்லாம் :

குழந்தைகள் தான் எல்லாம் :

ஒபாமாவுக்கு மட்டுமல்ல நம்முடைய எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமே தங்களுடைய எதிர்காலமாக கொண்டிருப்பார்கள். அதற்கு ஒபாமா ஒன்றும் விதிவிலக்கல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் நாம் வாழ்க்கையில் எதைச் சாதித்து இருந்தாலும், நம் வாழ்வின் இறுதியில் நம் குழந்தைகள் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியையே நாம் நினைவு கூர்வோம் என்றிருக்கிறார்.

சர்ச்சை :

சர்ச்சை :

ஆரம்பம் முதலே மாலியா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச நடனம் ஆடுகிறார், நடுவீதியில் நின்று ஓர் ஆணுடன் முத்தமிடுகிறார், புகைப்பிடிக்கிறார் என்றெல்லாம் புகைப்படங்கள் பரவி வைரலானது.

அதிபர் ஒபாமாவின் புகழை மாலியா கெடுக்கிறாள் என்ற ரீதியில் விமர்சனங்கள் எல்லாம் எழுந்தன.

ஆண் நண்பர் :

ஆண் நண்பர் :

இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில் தன்னுடைய ஆண் நண்பருடன் Massachusettsல் இருக்கக்கூடிய கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து "அதனால் ஆரம்பமாகிவிட்டது" என்று பகிர்ந்திருந்தார்.

அவ்வளவு தான் இந்த விஷயம் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

Image Courtesy

இரண்டாவது முறை :

இரண்டாவது முறை :

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தினருக்கும் யேல் பல்கலைக்கழகத்தினருக்கும் இடையில் நடைப்பெற்ற கால் பந்தாட்ட போட்டி நடைபெறுகையில் அதனை தன் ஆண் நண்பர் Rory Farquharsonவுடன் சேர்ந்து இருந்த புகைப்படம் வெளியானது.

அப்போதும் இருவரும் மிக நெருக்கமாக இருந்தது போலவே சமூகவலைதளத்தில் படங்கள் இருந்ததால் மீடியாவின் திடீர் வெளிச்சத்திற்கு ஆளாகினர்.

Image Courtesy

எங்கே சென்றாலும் :

எங்கே சென்றாலும் :

பிரிட்டிஷ் இளவரசரான ஹாரியையும் அவரது காதலியும் அமெரிக்க நடிகையுமான மெகன் மார்கெல் ஆகியோரை பின் தொடர்வது போலவே இவர்களையும் தற்போது பின் தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.

தொடர்ந்து ஒபாமாவின் மகள் ஆண் நண்பருடன் ஷாப்பிங் சென்றது, ஆண் நண்பருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று தொடர்ந்து அவரைப் பற்றிய படங்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கிறது.

Image Courtesy

தைரியம் :

தைரியம் :

தங்களை புகைப்படம் எடுக்கிறார்கள், தங்களை இந்த மீடியா உலகம் கவனிக்கிறது என்று தெரிந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் அதனை சட்டை கூட செய்யாமல் தைரியாமாக உட்கார்ந்திருந்திருக்கிறார்கள்.

இப்படி வெளியில் இவர்களைப் பற்றிய விமர்சனங்கள் எழுவது இவர்களை , இந்த உறவை இன்னும் வலிமையாக்கும் என்றே நம்பப்படுகிறது.

Image Courtesy

புகைப் பழக்கம் :

புகைப் பழக்கம் :

இவர்களைப் பற்றிய புகைப்படங்கள் கசிந்த நிலையில், ஒரு படத்தில் ஆண் நண்பர் ரோரி புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். அதனை ஓர் தவறாகவே மாலியா கண்டு கொள்ளாமல் இருந்தார்.

வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு முன்னர் ஒபாமாவும் புகைப்பழக்கத்தை கொண்டிருந்தார், அதன் பின்னர் மனைவி மிச்சேலின் நடவடிக்கைகளினால் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

ரோரி :

ரோரி :

மாலியாவின் ஆண் நண்பர் ரோரி புகழ்ப்பெற்ற ரக்பி பள்ளியில் படிக்கிறார். அங்கே கட்டணம் மட்டும் 32 ஆயிராம் யூரோ வரை வசூலிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வெளியான ரக்பி உலக கோப்பை போட்டியில் வெளியிடப்பட்ட வீடியோவில் ரோரியும் இடம்பெற்றிருந்தார். கோல்ஃப் விளையாட்டிலும் ரோரி திறமைசாலி.

Image Courtesy

அரச குடும்பம் :

அரச குடும்பம் :

ரோரியின் குடும்பத்தினருக்கும் அரச குடும்பத்தினருக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன. ரோரியின் இரண்டாவது அண்ணன் ஆண்ட்ரூ எலிசபத் ராணியின் அசிஸ்டண்ட் மாஸ்டராக பகிங்காம் அரண்மனையில் பணியாற்றுகிறார். இளவரசி அதீதமாக நம்பக்கூடிய வெகு சிலரில் இந்த ஆண்ட்ரூவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்காக நானே :

எனக்காக நானே :

ரோரிக்கு தற்போது பத்தொன்பது வயது. ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். ரோரி தனக்கு பதினாறு வயதான போது தன் மனதில் இருந்ததை கடிதமாக எழுதுகிறார் அதில்,

வெளியில் பார்ப்பவர்களுக்கு நீ அதீத தன்னம்பிக்கையுள்ள ஓர் பள்ளிச் சிறுவன். உன் நண்பர்களிடத்தில் ஒவ்வொரு முறையும் நான் ஒரு பையன் என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் அதில் பல முறை பரிதாபமாக தோற்றுப் போகிறாய். அதற்காக உன் முடியை அழகாக வெட்டிக்கொண்டு விதவிதமான துணிகள் அணிந்து கொண்டால் மட்டும் பெண்களை ஈர்க்க முடியாது. என்று எழுதியிருந்தார் ரோரி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: love, romance, dating, relationship
English summary

Malia obama with her UK Boyfriend

Malia obama with her UK Boyfriend
Story first published: Wednesday, January 24, 2018, 10:00 [IST]
Subscribe Newsletter