For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

20களின் இறுதியில் இருக்கும் பெண்கள் கூறும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் இரகசிய வாக்குமூலங்கள்!

20களின் இறுதியில் இருக்கும் பெண்கள் கூறும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் இரகசிய வாக்குமூலங்கள்!

By Staff
|

இருபது வரை ஆண், பெண் வாழ்க்கையானது இப்போது பெரும்பாலும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. வீட்டுக்குள் வேறுபட்டாலும், வெளிவாழ்க்கை கல்வி, நட்பு, கல்லூரி என இருபதுகளின் துவக்கம் வரை ஆண், பெண் வாழ்க்கை சமூகத்தில் சமமாக தான் இருக்கிறது. ஆனால், இருபதுகளின் இறுதிகளில் ஆண், பெண் வாழ்க்கை சமநிலையில் இருக்கிறதா?

Late 20s Girls Confessions About Their Personal Life Secrets!

அவரவர் கடமைகள், கனவுகள் அடைய இந்த சமூகம் அவர்களுக்கான இடத்தை, நேரத்தை அளிக்கிறதா? என்பது பெரிய கேள்வியாக நிலைத்திருக்கிறது. ஒரு ஆண் கடமை, கனவு அடையும் வரை திருமணத்தை தள்ளி வைக்க முடியும். ஆனால், ஒரு பெண்ணால் முடியுமா?

இதோ! தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருபதுகளின் இறுதியில் வாழும் பல்வேறு சூழலில் வாழ்ந்து வரும் பெண்கள் கூறி இருக்கும் வாக்கு மூலங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நான் என் நகரின் பிரபலமான பள்ளி, கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவள். படித்து முடித்த கையோடு எனக்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை எங்கேனும் பயணம் மேற்கொள்வேன். வாழ்வில் நல்லது, கெட்டது என இரண்டையும் சரி பங்கு அனுபவித்தவள் நான். எனது பயணங்கள் எனக்கு நிறைய பாடங்கள் கற்றுக் கொடுத்துள்ளன. எனது இந்த 28 வருட வாழ்க்கை பயணத்தில் நான் என்னையும், என் வாழ்க்கையையும் நன்கு கட்டமைத்துக் கொண்டிருக்கிறேன்.

இரகசியங்கள் உண்டு...

இரகசியங்கள் உண்டு...

என் அருமை பெற்றோர்களே நீங்கள் என் மீது அளவு கடந்த காதல் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆயினும், உங்களது சில மூட நம்பிக்கைகள் என்னை சில இரகசியங்களை உங்களிடம் இருந்து மறைக்க செய்துள்ளது. உங்கள் முன் அந்த உண்மைகளை நான் கொட்டிட முடியும். அதற்கான நேரம் வரும்போது நான் அவற்றை கூறுவேன்.

#2

#2

ஒரு பெண், தன் வாழ்வில் ஒரே ஒரு ஆணை டேட் செய்து, காதலித்து அவனையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்... நான் அப்படியான பெண் இல்லை. நான் உங்களுக்கு ஒரு ஏமாற்றுக் காரியாக கூட தென்படலாம். நான் ஒருசில ஆண்களுடன் டேட் செய்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து நல்ல, கெட்ட விஷயங்களை அறிந்திருக்கிறேன்.

வலிமையானவள்...

வலிமையானவள்...

அவை எல்லாம் என்னை ஒரு வலிமையான நபராகவே உருவாக்கி உள்ளது. சிலமுறை மனம் உடைந்து போயிருக்கலாம். ஆனால், என் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உடைந்து போகவில்லை. எனக்கான சரியான துணை யார் என்பதை அறிந்த பிறகே நான் திருமணம் செய்துக் கொள்வேன். என்னை பொறுத்தவரை டேட்டிங் என்பது திருமணத்திற்கான இன்டர்வியூ அவ்வளவு தான்.

#3

#3

என்றாவது நீங்கள் தனியாக ஒரு அறையில் உட்கார்ந்து நாள் முழுக்க அழுது தீர்த்ததுண்டா? சிக்கலான மனநிலையில் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் குழம்பி போனதுண்டா? இதை எல்லாம் எனக்கு ஒரு பிரேக் அப் தனது சென்றது. எனது உணர்வலைகளை எப்படி கையாள்வது என்று அறியாமல், ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்றேன்.

உறக்கமற்ற இரவுகள்...

உறக்கமற்ற இரவுகள்...

உடல்ரீதியான கோளாறுகளை விட கொடியது மன ரீதியான கோளாறுகள். அதிலும் உணர்வுநிலை தடுமாற்றம் என்பது யாருக்கும் வந்திடக் கூடாத பிரச்சனை. கிளினிக் சென்று தான் நான் குணமடைந்து வந்தேன். ஆனால், அந்த சிகிச்சை காலத்தில் நான் பட்ட அவதிகளை என்னால் கூற இயலாது. அது உங்களுக்கு உறக்கமற்ற இரவுகளை கூட ஏற்படுத்தலாம்.

#4

#4

எனக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறது. எப்போதும் அல்ல, எப்போதாவது. நண்பர்களுடன் எங்கேனும் வெளியே பயணம் மேற்கொள்ளும் போது நான் குடிப்பது வழக்கம். ஆண்கள் மட்டுமே மது அருந்துதல் ஓகே என்றும், பெண்கள் குடித்தால் குற்றம் என்றும் நீங்கள் பாடுபாட்டுடன் காண்பது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. கொடியது எனில் அது இரு பாலருக்கும் தானே. நான் எனது பாதுகாப்பை அறிந்தே குடிக்கிறேன். என்றும் நான் எல்லை மீறியது இல்லை.

#5

#5

சில சமயம் உன்னுடன் வாழ்வது எனக்கு அசௌகரியமாக இருக்கிறது. என்னால் புரிந்துக் கொள்ள இயல்கிறது. நீங எனது பாதுகாப்பிறகாக தான் நிறைய விஷயங்கள் செய்கிறாய் என்று. ஆனால், அதற்காக நான் அத்தனை நாளும் இரவு எட்டு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

அபாய மணி...

அபாய மணி...

எட்டு மணி தாண்டி விட்டால் நான் அபாயத்தில் சிக்கிக் கொள்வேன் என நீ அபாய மணி அடிக்க தேவையில்லை. கால் செய்து பத்து நிமிடங்கள் நான் எடுக்கவில்லை என்றால், உன்னை போலவே நானும் மீட்டிங்கில் பிசியாக இருக்கிறேன் என்பதை புரிந்துக் கொள். எனக்கான சுதந்திரம் மற்றும் இடத்தை நீ எனக்கு அளிப்பாய் என்று கருதுகிறேன். அதற்காக எதிர்காத்து காத்திருக்கிறேன்.

#6

#6

பெண்கள் இருபதிகளின் இறுதிக்குள் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் முப்பது எட்டும் முன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டம் வகுத்தது யார்? ஒவ்வொரு முறை நீங்கள் எனது திருமணம் குறித்து மூன்றாம் நபர்கள் முன்னிலையில் பேசும் போதெல்லாம் நான் அதை வெறுக்கிறேன். நான் திருமணமே செய்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். நான் மனரீதியாக மற்றவர் கடமைகளை ஏற்கும் ரீதியாக இன்னும் தயாராகவில்லை.

திருமணம் காத்திருக்கட்டும்...

திருமணம் காத்திருக்கட்டும்...

நான் இப்போதைக்கு எனது இலட்சியங்களை அடைய கடுமையாக உழைத்துக் கொண்டஈருக்கிறேன். எனக்கு இல்லறத்தை காட்டிலும் எனது வேலை சார்ந்த வாழ்க்கை மிகவும் முக்கியமாக படுகிறது. எனக்கான இடத்தில் நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறேன். நான் திருமணத்திற்காக காத்திருக்க மாட்டேன். திருமணம் வேண்டுமானால், எனக்காக காத்திருக்கட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Late 20s Girls Confessions About Their Personal Life Secrets!

Late 20s Girls Confessions About Their Personal Life Secrets!
Story first published: Saturday, April 14, 2018, 11:45 [IST]
Desktop Bottom Promotion