For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேட்ரிமோனியில் தகவல்களைத் திருடி பெண்களை ஏமாற்றும் சைக்கோ! my story #146

திருமணத்திற்கு மணமகன் விளம்பரம் தேடி மேட்ரிமோனியில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் ஒரு பெண் சந்தித்த பிரச்சனை.

By Staff
|

காதலில் அன்பு மட்டுமே நிறைந்திருக்கும் என்று நினைப்பவர்களுக்கு சில வலிகளும்... துரோகங்களும் நடக்கும் போது வாழ்க்கையே சூன்யமாகத் தெரியும்.

எவ்ளோ நம்புனேன்... அவளா அப்டி பண்ணிட்டா என்ற கேள்வி உங்களை உருக்கும்... சுயத்தை இழக்க வைக்கும்.

உலகிலேயே மிகவும் வலிமையானது என்று சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு அன்பைச் சொல்லலாம். ஆம் எத்தகைய மனம் படைத்தவராக இருந்தாலும் ஓர் அன்பு உருக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பணம் :

பணம் :

எல்லாவற்றிற்கும் பணம் தேவை....அந்த தேவை அதிகமானால் தேவை மீதான மோகம் அதிகரித்தால் ஆடம்பரத்தின் மீதான எண்ணம் அதிகரித்தால் இதோ இப்படியும் வாழ்க்கை முடியலாம்.

பணத்தால் வாழ்க்கையை இழந்த ஒரு ... அல்ல சில தம்பதிகளின் உண்மைக் கதை.

கிஷோர் :

கிஷோர் :

மென்பொருள் நிறுனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். இனி வாழ்க்கையில் செட்டிலாகிடலாம் என்று நினைக்கும் போது திடீரென்று அலுவலகத்திலிருந்து வேலையிலிருந்து தூக்கப்பட்டான்.

காதலி :

காதலி :

மாதம் ஒரு லட்சம் கையில் விழுந்து கொண்டிருந்தது... இப்படி திடீரென்று நிறுத்தினாள் யாருக்குத் தான் கோபம் வராது....என்னை ஏமாற்றி விட்டார்கள். என்ன காரணமோ காதலியும் பிரிந்தாள்.

பணத்திறாகத் தான் இத்தனை காலம் என்னுடன் பழகியிருக்கிறாள். வேலை இழந்தவுடன் என்னை விட்டு பிரிந்து விட்டாள் என்று நினைத்து அவள் மீதும் கோபம் கொண்டான்.

ஏமாற்றுக் காரார்கள் :

ஏமாற்றுக் காரார்கள் :

இங்க எல்லாரும் ஏமாத்தும் போது நான் மட்டும் ஏன் நேர்மையா இருக்கணும்.... மூளை யோசித்தது. வேலையில் இறங்கினான்.

பணம்... பணம்... பணம் மனம் முழுக்க பணத்தாசை பிடித்தவன் போல பித்துப் பிடித்து அழைந்தான்.

காதல் :

காதல் :

ஏமாற்ற ஓர் ஆயுதம் கிடைத்து விட்டது காதலெனும் ஆயுதம். மேட்ரிமோனியில் வசதி படைத்த பெண்களுக்கு வலை விரித்தான்.

அப்பா அம்மா ஃபாரின்ல இருக்காங்க.... நான் ஒரே பையன். அம்மா தான் பொண்ணு நம்ம ஊர்ல இருந்து வேணும்னு சொல்லி இந்த மேட்ரிமோனில ரிஜஸ்டர் பண்ணாங்க.

உங்க ஃப்ரோஃபைல் பாத்தேன். நல்ல படிச்சிருக்கீங்க வெல் செட்டில்டாவும் இருக்கீங்க. சென்னையில அப்பா பிஸ்னஸ் எக்ஸ்டண்ட் பண்ணலாம்னு ஐடியோ அத மேனேஜ் பண்ற ஃபேமிலி வந்தா எங்களுக்கு இன்னும் பெட்டரா இருக்கும்னு யோசிச்சோம்.

ஏன்னா அப்பானால அடிக்கடி இந்தியா வரமுடியாது. அப்பா அங்க க்ரீன் கார்டு ஹோல்டர்.

வசதி :

வசதி :

வாயில் நுனி நாக்கு ஆங்கிலத்துடன்.... அத்தனை பொய்களையும் அள்ளி வீசுவான். பார்ப்பவர்கள், கேட்பவர்கள் எல்லாம் மெய் மறந்து அவன் சொல்வதை அப்படியே நம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

விலையுயர்ந்த போன்.... வெளிநாட்டு கரன்ஸி என்று அவர்களை நம்ப வைக்க கொஞ்சம் மெனக்கட வேண்டியிருந்தது.

திருமணம் :

திருமணம் :

மகளைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறவன்.... மாப்பிள்ளை வெளிநாட்டு வாழ் இந்தியர் என்றால் சும்மாவா? பெண் விட்டார் மிகவும் அசந்து பணத்தை வாரி இறைத்தார்கள்.

இங்க ஆபிஸ் ப்ரான்ச் ஓப்பன் பண்ண ஒரு இடம் பாத்திருக்கோம். 50 லட்சம் மேல பணத்த அனுப்புறதுல ப்ராப்ளம். என் கையில ஒரு 10 லட்சம் இருக்கு நீங்க ஒரு 40 கொடுத்தா.... என்று இழுப்பான்...

அக்ரீமண்ட் போட்டுக்கலாம் நீங்க பாட்னரா ஜாயின் பண்ணிக்கோங்க.... எப்டியும் நாளைக்கு உங்க கைல தான வரப்போகுது.... 50 பெர்சன் ஷேர் கியாரண்டி என்பான்.

இதுல என்னயிருக்கு :

இதுல என்னயிருக்கு :

அட இதுல என்னயிருக்கு.... என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை உங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறேன் என்று பலரும் எந்த ஆதாரம் இல்லாமல் கேட்ட பணத்தை நீட்டினார்கள். இன்னும் சிலர் கேட்டதை விட அதிகமாக கொடுத்தார்கள்.

புகைப்படம் :

புகைப்படம் :

நமக்கு தான் கல்யாணம் ஆகப்போதுல.... என்று சொல்லி சொல்லியே.... திருமணத்திற்கு என்று மேட்ரிமோனியில் பார்த்த பெண்களை எல்லாம் தன்னுடைய காம இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டான்.

அந்தப் பெண்களும்... என்ன இருந்தாலும் கணவன் என்று சொல்லி கிஷோர் சொல்வதையெல்லாம் செய்தார்கள்.

வசதி :

வசதி :

வசதியான பெண் என்றால் பணத்துடன் பயன்படுத்திக் கொண்டான். வசதி குறைவு என்றால் அதற்கேற்ப தன் காயை நகர்த்துவான். ஒரே நேரத்தில் நான்கைந்து பேருக்கு வலை விரித்துகச்சிதமாக காய் நகர்த்துவதில் கில்லாடி இவன்.

திருமண தேதி :

திருமண தேதி :

திருமணத்திற்கு என்று முடிவு செய்யப்பட்ட தேதியை ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி மாற்றிக் கொண்டேயிருப்பான். நிச்சயத்திற்கு வருவார்கள் வாருவர்கள் என்று போக்கு காண்பித்து... கடைசி நேரத்தில் மீட்டிங்.... ப்ளைட் டிலே அதான் அப்பானால வர முடியல அம்மா அப்பா இல்லாம நான் எப்டி நிச்சயம் பண்றது என்பான்.

உண்மை :

உண்மை :

இது தொடர்ந்து போகவே.... சிலருக்கு சந்தேகம் வந்து துருவித் துருவி விசாரிக்க ஆரம்பிப்பார்கள். இவன் வேலை பார்ப்பதாக சொல்லும் நிறுவனம்... அம்மா அப்பா கதை எல்லாமே போலி என்று தெரியவரும்

ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று உணரும் போது பெண் வீட்டாரின் பாதி சொத்தை அபகரித்து முடித்திருப்பான். இவனுக்கு எதிராக புகார் கொடுக்க... பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டான் என்று சொல்வதற்கு ஒரு சாட்சியும் இருக்காது.

மிரட்டல் :

மிரட்டல் :

அப்படியே மீறி போலீசில் புகாரளிக்கப் போகிறோம் என்றால்.... போனில் இருக்கும் படங்களை இணையத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டுவான்... இணையத்தில் பார்ப்பதற்கு முன்னர் உங்களுக்கு இரண்டு சாம்பில்களை அனுப்புகிறேன் என்று சொல்லி.... மகளுடன் அந்தரங்கமாக எடுத்த புகைப்படங்களை அனுப்புவான்.

குடும்ப மானம் வெளியில் போய்விடக்கூடாது என்று பயந்து சிலர் கப்சிப்.... வசதி படைத்தவர்கள் என்றாள் படங்களை வெளியிடக்கூடாது என்றால் இத்தனை லட்சம் கொடு என்று மிரட்டி பணத்தை வாங்குவான்.

ஏமாளியார்? :

ஏமாளியார்? :

இங்கே ஏமாற்றப்பட்டேன் அதனால் ஏமாற்றுகிறேன் என்று சொல்லி திருமண கனவுகளோடு மேட்ரிமோனியில் பதியப்படும் தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? என்று யாருக்கும் தெரிவதில்லை.

அதைவிட வெளிநாட்டு மோகம் முந்தைய காலத்தை விட இப்போது தலைவிரித்தாடுகிறது. பணம் வசதி.... மகள் செல்வசெழிப்புடன் வாழ்வாள் என்ற எண்ணம் அவர்களின் கண்களை மறைக்கிறது

சிந்தியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is your Data in Matrimony are safe?

Is your Data in Matrimony are safe?
Story first published: Wednesday, January 17, 2018, 15:41 [IST]
Desktop Bottom Promotion